இது புத்தக அறிமுக சேனல். சமகாலத்தில் இருக்கும் எழுத்தாளர்களின் சிறுகதைகள், நாவல்கள், தாண்டி fiction, nonfiction என்று அனைத்துவிதமான புத்தகங்களும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும். உலக இலக்கியங்களிலிருந்து, உள்ளூர் இலக்கியம் வரை இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும். உலகமே கொண்டாடும் ரஷ்ய இலக்கியம் முதல் இங்கு மக்களை அரசியல்படுத்த தேவையான மார்க்சிய. பெரியாரிய., அம்பேத்கரிய நூல்கள் அதனைக்குறித்த உரையாடல் அதிகமிருக்கும். முற்போக்கு நூல்களுக்கான முகவரி என்று இந்தச் சேனலை சொல்ல்லாம்.

பெண்கள் தினமென்றால் பெண்கள் தினத்தை ஒட்டிய உரையாடல் சார்ந்த பெண்ணிய நூல்களும், மே தினமென்றால் அதை ஒட்டிய நூல்களும் என்று காலத்திற்கு ஏற்றவாறு நூல்கள் அறிமுக செய்யப்படுகின்றன. சமகால பிரச்சனைகளுடன் எப்படி வாசிப்பை இணைப்பது என்பதே சேனல் லட்சியம். இப்போது சமகாலத்தில் அரசியல் களத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறதென்றால் அதை ஒட்டி நூல்களை அறிமுகம் செய்யும்போது மக்களை வாசிப்பை நோக்கி கொண்டு வரமுடியுமென்று நினைக்கிறேன்.


White Nights

லாபி என்ற அதிகாரம் லாபி என்ற narration

4 weeks ago | [YT] | 3

White Nights

https://youtu.be/GrSkBGZvjK4?si=mUWMy...

கரூர் போக விஜய் போடும் கண்டிஷன்களைப் படித்தேன், உலக அளவில் பெரிய தலைவர்களுக்குக் கூட இந்த அளவு பாதுகாப்பு கொடுக்க மாட்டார்கள். விஜய் தன்னை கடவுள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார் . இந்த "கடவுள்" மனநிலையே ரசிகனை "பக்தன் " நிலைக்குக் கொண்டு போகிறது. அது ஒரு கொத்தடிமை மனநிலை, கேள்விகேட்காத மனநிலை, அவர் தவறே செய்திருக்க மாட்டார் என்ற மனநிலை. அது தான் அவர் மாபெரும் தவறு செய்தாலும் , 42 பேர் இறப்புக்கு காரணமாக இருந்தாலும், வெவ்வேறு கூட்டங்களில் பலர் இறந்திருந்தாலும், பலர் படுகாயமுற்றாலும், bouncer வைத்துத் தூக்கிப்போட்டாலும் அவருக்காக முட்டுக்கொடுக்க அத்தனை பேர் இருக்கிறார்கள். நம் மக்கள் படிப்பறிவில் வளர்த்திருக்கிறார்கள் தான் ஆனால் அரசியல் சென்ஸ் அதில் ஸிரோ 40 50 வயது முட்டுக்கொடுக்கும் அணில்களை கூட பார்க்கமுடிகிறது .

2 months ago | [YT] | 1