வணக்கம் Youtube சொந்தங்களே....

நம் முன்னோர்களால் நமக்கு அளிக்கப்பட்ட பல நல்ல விஷயங்கள் இன்றைய தலைமுறைக்கு தெரியவில்லை, அவற்றில் மிக முக்கியமானவை நமது கோவில்களும் அதன் வழிபாட்டுமுறைகளும்.

நம் கோவில்களில் பக்திக்கு அப்பாற்பட்டு பல அறிவியல் சார்ந்த விஷயங்களும், ரகசியங்களும் பொக்கிஷமாக புதைந்து கிடக்கின்றது அவற்றை எல்லோருக்கும் எளிமையாக எடுத்துரைப்பதே இந்த சேனலின் நோக்கம். நமது கலாச்சாரம், பண்பாடு மற்றும் வளர்ச்சி இவை அனைத்தும் அடங்கியிருப்பது நமது கோவில்களில் தான். நமது கோவில்களின் தொன்மையான வரலாறையும் நமது கலாச்சாரத்தையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்வது நமது மிக முக்கியமான கடமையாகும், அதன் பொருட்டு ஆரம்பிக்க பட்டதேThanjavur Video சேனல்.

Thanjavur Video சேனலை சப்ஸ்கிரைப் செய்தவுடன் அதில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நமது கோவில்களின் தொன்மையையும் வரலாறையும் உங்கள் குழந்தைகளுக்கும் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யும் படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி வணக்கம்.


Thanjavur Video

🐘 திருச்செந்தூர் திருக்கோயில் "தெய்வானை யானை" ஏற்படுத்திய விபத்து போன்றவற்றை தவிர்க்க என்ன செய்யலாம் ?
#thiruchendur #Temple #Elephant 🐘

9 months ago | [YT] | 1

Thanjavur Video

தஞ்சை பெரிய கோயில் நவராத்திரி 6ம் நாள் லெட்சுமி அலங்காரம்

10 months ago | [YT] | 22

Thanjavur Video

தஞ்சை பெரிய கோயில் நவராத்திரி 5ம் நாள் அண்ணபூரனி அலங்காரம்

10 months ago | [YT] | 20

Thanjavur Video

தஞ்சாவூர் பெரிய கோவில் நவராத்திரி நான்காம் நாள் அலங்காரம் பெரியநாயகி அம்மன் காயத்ரி அலங்காரம்

10 months ago | [YT] | 26

Thanjavur Video

தஞ்சை பெரிய கோயில் நவராத்திரி இரண்டாம் நாள் மினாட்சி அலங்காரம்

10 months ago | [YT] | 21

Thanjavur Video

தஞ்சாவூர் பெரிய கோவில் நவராத்திரி 2024

பெரிய நாயகி அம்மன் முதல் நாள் அலங்காரம் மனோன் மணி அலங்காரம்.

10 months ago | [YT] | 16

Thanjavur Video

🙏கொலுப்படி எந்தெந்த பொம்மைகளை எந்த படியில் வைக்கலாம் ?🌹🙏


கீழேயிருந்து மேலாக ஓரறிவில் தொடங்கி உயர்நிலையுள்ள  இறைவன் பொம்மைகள்  வைக்கப்படுகின்றன.

முதலாம் படி ---ஓரறிவு உயிர்களான புல்,செடி,கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் 

இரண்டாம் படி---ஈரறிவு கொண்ட நத்தை,சங்கு போன்ற பொம்மைகள்.

மூன்றாம் படி ----மூன்றறிவு உயிர்களான கரையான்,எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.

நான்காம் படி ---நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள் .

ஐந்தாம் படி ----ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின்
பொம்மைகள்.

ஆறாம் படி ----ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.எந்த உயிருக்கும் இல்லாத சிந்திக்கும்,சிரிக்கும் சக்தியை இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளார். 

ஏழாம் படி ----மனித நிலையிலிருந்து உயர் நிலைகளை அடைந்த சித்தர்கள்,ரிஷிகள்,மகரிஷிகள் (ரமணர்,வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

எட்டாம் படி --- தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

ஒன்பதாம் படி ----பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதி சக்தி வைக்க வேண்டும்.

ஒன்பதாம் படியில் முதலில் விக்னங்களை தீர்த்து வைக்கும் விநாயக பொம்மையை வைத்தப்பிறகு மற்ற மொம்மைகளை வைக்க வேண்டும் என ஆதிபராசக்தி சொல்லி இருப்பதாக 'தேவி பாகவதம்' சொல்கிறது.

அடுத்ததாக ,மூம்மூர்த்திகள்,3 தேவியர்களையும் வைக்கலாம். இலட்சுமிக்கும், சரஸ்வதிக்கும் இடையே சக்திதேவியை வைக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக தன்  ஆன்மீக சிந்தனைகளை வளர்த்து,இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவது கொலு படியாகும்.💐💐🌹🙏🙏🙏

10 months ago | [YT] | 1

Thanjavur Video

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவிற்கு இன்று 23ஆம் தேதி
முகூர்த்த கால் நடுவிழா நடைபெறுகின்றது.
லட்சகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

11 months ago | [YT] | 13

Thanjavur Video

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா 2024 பந்தக்கால் முகூர்த்தம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.

அன்று அதிகாலை 5. 45 மணி மேல் 7 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறும்.

11 months ago | [YT] | 9