எழுதியதில்

peacock


எழுதியதில்

*இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?

வெற்றிலை பாக்கு மருத்துவ குணம் நிறைந்தது. மகிமை மிக்கதும் மங்களகரமானதுமான வெற்றிலை – வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது. மருத்துவகுணமிக்க இந்த வெற்றிலையை நாம் எதற்காக இறைவனுக்குப் படைக்கிறோம் என்று பார்ப்போம்.

அபூர்வம் நிறைந்த வெற்றிலை பாக்கை இறைவனுக்கு வைத்து படைக்கும் போது நமது பிரார்த்தனை முழுமையாக இறைவனை சென்றடையும் என்பது ஐதீகம்.

இதனை தாம்பூலம் என்றும் அழைப்பர். தாம்பூலத்தின் பின்பக்க இடதுபுறம் மற்றும் தாம்பூல மத்திய பாகம் இவை இரண்டும் சிவபெருமானை குறிக்கும்.

வெளிப்பக்கம் (உள்) வெற்றிலையின் மத்திய பாகம் சந்திரனை குறிக்கும். தாம்பூலத்தின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் இருப்பதாக ஐதீகம்.

இறைவனுக்கு எத்தனை பதார்த்தங்களை நிவேதனம் செய்தாலும் வெற்றிலை பாக்கு வைக்காவிட்டால் அந்நிவேதனம் முற்றுப்பெறுவதில்லை.

பூஜை மற்றும் திருமணம் ஆகியவற்றின் போதும் அவை சுபமாக நடந்தேற வேண்டும் என்பதற்காக வெற்றிலை பாக்கு படைக்கப்படுகிறது.

வெற்றிலையும் பாக்கும் மகாலட்சுமியின் அம்சங்களாகும். விருந்தினர்களுக்கு சுபநிகழ்ச்சியின்போது வெற்றிலையும் பாக்கும் கொடுத்தால் குடும்பம் செழித்தோங்கும் என்பது நம்பிக்கை.

வெற்றிலையை வாட விடக்கூடாது. அப்படி வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல. வெற்றிலை பாக்கை எப்போதும் வலதுகையால் தான் வாங்கவேண்டும்.

ஓம் சிவம் 🌹🙏

2 years ago | [YT] | 0

எழுதியதில்

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் திருத்தலத்தில் #புராதனவனேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இந்த ஆலயத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் சன்னிதியில் வலது புறம் சிறிய வடிவிலான விநாயகர் வீற்றிருக்கிறார். இவரை ‘பூ விழுங்கி விநாயகர்’ என்று அழைக்கிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது.
இந்த விநாயகருக்கு #நந்தியாவட்டை மலரின் காம்பை கிள்ளிவிட்டு, நமக்கு நடக்க வேண்டிய காரியங்களை மனதில் நினைத்துக் கொண்டு, விநாயகரின் இரு காதுகளிலும் மலரை வைக்க வேண்டும். நினைத்த காரியம் உடனடியாக நடக்கும் என்றால், பூ வைத்த உடனேயே காது துளை வழியாக உள்ளே சென்று
தாமதாக சென்றால் நினைத்த காரியம் தாமதப்படும். பூ உள்ளே செல்லாவிட்டால் காரியம் நடைபெறாது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பூவை விழுங்கி, பக்தர்களுக்கு நல்வழி காட்டுவதால், இவரை பக்தர்கள் ‘பூ விழுங்கி விநாயகர்’ என்கிறார்கள்🌹

2 years ago (edited) | [YT] | 0

எழுதியதில்

*சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் , தங்கள் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள். அப்போது கர்ணனை அழைத்த துரியோதனன், “கர்ணா! இனி இவர்களின் அனைத்துச் சொத்துக்களும் நமக்கே சொந்தம். அக்னி பகவானின் பரிசாக அர்ஜுனன் பெற்ற காண்டீவ வில்லை இனி நீ எடுத்துக் கொள்!” என்றான்*.

*ஆனால் கர்ணனோ காண்டீவத்தை வாங்க மறுத்துவிட்டான்*.
*“நான் எனது வலிமையிலும் திறமையிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்*.

*அவற்றைக் கொண்டு அர்ஜுனனை வெல்வேன். தேவர்களின் அருளால் கிட்டிய இந்த வில் எனக்குத் தேவையில்லை!” என்று சொன்னான் கர்ணன்*.

*“ஆஹா ! நீ அல்லவோ சுத்த வீரன்! அர்ஜுனன் காண்டீவத்தை நம்புகிறான்*.

*நீ உன் திறமையை நம்புகிறாய் !” என்று கர்ணனைத் துரியோதனன் பாராட்டினான்*.

*அர்ஜுனன் வனவாச காலத்தில் இந்தச் சம்பவத்தை வியாசரிடம் சொல்லி மிகவும் வருந்தினான். இதைக் கேட்டுச் சிரித்த வியாசர், “கர்ணன் காண்டீவத்தை வாங்க மறுத்ததற்கு வேறு காரணம் உள்ளது! அதை அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை !” என்றார்*.

*“அது என்ன ?! ” என்று கேட்டான் அர்ஜுனன்*.

*“நேரம் வரும் போது சொல்கிறேன் !” என்றார் வியாசர்*.

*பல ஆண்டுகள் கழிந்தன*.

*மகாபாரத யுத்தம் முடிந்து, தர்மபுத்திரர் முடிசூடிய பின், கண்ணனைச் சந்திக்க அர்ஜுனன் துவாரகைக்குச் சென்றான்*.

*“அர்ஜுனா ! நான் எனது அவதாரத்தை முடித்துக் கொண்டு வைகுண்டம் செல்லவுள்ளேன்*.

*அதனால் எனது அரண்மனையிலுள்ள பெண்களை எல்லாம் நீ பாதுகாப்பாக அழைத்துக் கொண்டு இந்திரப்ரஸ்தத்துக்குச் சென்று விடு!” என்று கூறினான் கண்ணன்*.

*கனத்த மனத்துடன் கண்ணனிடமிருந்து விடைபெற்ற அர்ஜுனன் , தனது தேரில் பெண்களை அழைத்துக் கொண்டு சென்றான். வழியில் சில கொள்ளையர்கள் தேரை நிறுத்தி அர்ஜுனனைத் தாக்கினார்கள்*.

*அவர்களைப் பதிலுக்குத் தாக்குவதற்காகக் காண்டீவத்தை எடுக்க முற்பட்டான் அர்ஜுனன். ஆனால் அவனால் காண்டீவத்தைத் தூக்க முடியவில்லை. பற்பல பேரரசர்களை வீழ்த்தியவனும், யாராலும் வீழ்த்த முடியாதவன் என்று போற்றப்படுபவனும், வில் விஜயன் எனப் பெயர் பெற்றவனுமாகிய அர்ஜுனனை அந்தச் சாதாரணத் திருடர்கள் வீழ்த்திவிட்டார்கள். தன் வாழ்வில் முதன் முறையாகத் தோல்வியைச் சந்தித்தான் அர்ஜுனன்*.

*அதுவும் வெறும் சாதாரணத் திருடர்களிடம்*

*வெட்கத்தால் தலைகுனிந்த நிலையில், இந்திரப்ரஸ்தத்துக்கு நடந்தான் அர்ஜுனன். அப்போது அவன் எதிரில் வந்தார் வேத வியாசர்*.

*“அர்ஜுனா ! நீயும் உன் சகோதரர்களும் பூமியில் இருந்து புறப்படுவதற்கான காலம் வந்து விட்டது. இப்போது நடந்த சம்பவம் அதை நினைவூட்டவே ஏற்பட்டது !” என்று கூறினார் வியாசர்*.

*"கண்ணனே புறப்பட்ட பின், நாங்கள் பூமியில் இருந்து என்ன செய்யப் போகிறோம். நாங்களும் புறப்படத் தாயார். ஆனால், என் மனதில் பெரும் ஐயம் எழுந்துள்ளது*.

*இது வரை நான் காண்டீவத்தைப் பொம்மை போலக் கருதி அனாயாசமாகக் கையில் ஏந்தினேன். ஆனால் இப்போது அது மலை போல் கனமாக உள்ளது. என்னால் அதைத் தூக்க முடியவில்லையே ! என்ன காரணம்?” என்று கேட்டான் அர்ஜுனன்*.

*அதற்கு வியாசர் , “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய். இப்போது அவன் பூமியை விட்டுச் சென்று விட்டதால், இதை உன்னால் தூக்க முடியவில்லை!” என்றார்*.

*மேலும் , “ சூதாட்டத்தில் நீ காண்டீவத்தை இழந்த போது, அதைக் கர்ணன் வாங்க மறுத்தானே, ஏன் தெரியுமா? கண்ணனின் அருள் பெற்ற நீ காண்டீவத்தைத் தூக்கிவிட்டாய்*.

*ஆனால் கண்ணனின் அருள் பெறாத கர்ணனால் இந்தக் காண்டீவத்தை அசைக்கக் கூட இயலாது. இது கர்ணனுக்கும் நன்றாகத் தெரியும்*.

*அந்தக் காரணத்தை வெளியே சொல்ல விரும்பாத கர்ணன், கௌரவமாகத் தான் சுத்த வீரன் என்றும் இந்த வில்லை நம்பித் தான் இல்லை என்றும் கூறிச் சமாளித்து , காண்டீவம் தனக்கு வேண்டாம் என்று கூறினான் !” என்றார் வியாசர்*.

*இதிலிருந்து பலசாலிகள் என்று போற்றப்படுபவர்களுக்கும் கூட , அந்த பலத்தைத் திருமால் தான் வழங்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது*.

*இக்கருத்தை “ஸத்வம் ஸத்வவதாம் அஹம்”*

*( பலசாலிகளின் பலமாக நானே இருக்கிறேன்) என்று கண்ணன் கீதையில் கூறுகிறான்*.

*இத்தகைய மகா பலத்தோடு கூடியவராகத் திருமால் விளங்குவதால் ‘மஹாபல :’ என்று அழைக்கப்படுகிறார்*.

2 years ago | [YT] | 0

எழுதியதில்

சங்கராம்ருதம் - 568
ஶ்ருதி ஸ்மிருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாத சங்கரம் லோக சங்கரம் பிரும்மஸ்ரீ ஆர். ராமமூர்த்தி சாஸ்திரிகள் மகாதானபுரம்

பாடசாலையில் அத்யயனம் செய்தவர். மந்தமான புத்தி,

அத்துடன் திக்குவாய்! பேசும்போதுதான் திக்கும்.மந்திரம்

சொல்லும் போது எவ்விதத் தடங்கலும் இருக்காது.

பிழைப்புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே? வைதீகம்

பண்ணி பிழைக்க முடியாது.இவரை யாரும் கூப்பிட்டு

ஆதரிக்க மாட்டார்கள்.

இருபத்தி நான்கு வயதானபோது 1957-ல் ஸ்ரீமடத்தில்

சேர்ந்து விட்டார். தந்தை,'இவன் ஒண்ணுக்கும்

பிரயோஜனமில்லே,புத்தி மந்தம்,மடத்திலே ஏதாவது

கைங்கர்யம் பண்ணிண்டிருக்கட்டும்' என்று, மகா

சுவாமிகளிடம் விக்ஞாபித்துக் கொண்டார்,தகப்பனார்.

:வஸ்திரம் தோய்த்து உலர்த்து' மூகபஞ்சசதி படி"

என்று மகாஸ்வாமிகள் உத்திரவிட்டார்.

ஸ்ரீ சாஸ்திரிகளுடைய கைங்கர்யம் இன்றும் தொடர்கிறது.

மகாப் பெரியவாளைப் பற்றிச் சொல்லும்போதே,

முகம் மலர்ந்து போகிறது.

"ரொம்ப ஆனந்தமான காலம்!...ரொம்ப பாக்யம்! அவர்

சொன்னபடி, அப்பப்போ, மூக பஞ்சசதீ படிப்பேன்.

திக்குவாய் போன இடம் தெரியல்லே! அவா அனுக்ரஹம்.

ஒரு நாளைக்கு ஐந்தாறு தடவை குளிப்பார்.(பெரியவா)

அப்போவெல்லாம், நாங்க காகிதத்தைத் தொட்டால் கூட

விழுப்பு! காகிதத்தைத் தொட்டுட்டா, நாங்க ஸ்நானம்

பண்ணணும்!.

தரிசனம் பண்ண வரவாளெல்லாம், சொந்தக் குடும்பப்

பிரச்சனைகளையெல்லாம் சொல்லுவா-

"மாடு கன்னு போடணும்.

பிள்ளை ஊர் சுத்திண்டு இருக்கான், திருந்தி வரணும்.

குத்தகை கொடுக்க மாட்டேங்கிறான்'

இப்படியெல்லாம் அவா சொல்றதை, மகாப் பெரியவா

பொறுமையா கேட்டிண்டிருப்பா.

"என்னை ஈசுவரனா நினைச்சுண்டு சொல்றா,

..சொல்லட்டுமே!" என்றார்.

சில சந்தர்ப்பங்களிலே, தரிசனார்த்திகள் நிறையப் பேர்

வந்துட்டா, பூஜைக்கு நேரமாயிடும். 'பூஜைக்கு

நாழியாகிறதே' என்றால், "ஆகட்டும், இவ்வளவு பேரும்

எங்கிருந்தோ வந்திருக்கா. அவாளுக்குத் திருப்தி

ஏற்பட வேண்டாமா?" என்பார்.

1980லேர்ந்து எனக்கு வயிற்றுவலி.

"இப்படியே ஓட்டு"ன்னார் மகா பெரியவா.

89லே, வயிற்று வலி தாங்க முடியல்லே.

டாக்டர் பார்த்துட்டு, ஆபரேஷன் பண்ணிக்கோ-ன்னார்.

பெரியாவாகிட்ட சொன்னேன்.

"ஆபரேஷன் பண்ணிக்க வேண்டாம்-னுட்டார்.

'பெரியவா உச்சிஷ்டத்தைச் சாப்பிடு';ன்னு

ஒரு சிஷ்யர் சொன்னார்.

அதன்படி, ஒரு நாள் பெரியவா பிக்ஷை ஆனதும்

அவா சாப்பிட்ட இலையிலே மிச்சமிருந்ததை எடுத்துச்

சாப்பிட்டேன்.அதைப் பார்த்துட்டு பெரியவா சிரிச்சா!...

அப்புறம் வலியே இல்லே!......

தரிசனத்துக்கு வருபவர்களில் யாராவது,

'தொண்டை,மூக்கு,காது,கண்-இப்படி,ஏதாவது

'ஆபரேஷன் பண்ணிக்கணும்.நல்லபடியா நடக்கணும்னு

பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்'னு கேட்டால்.

"ஆபரேஷன் வேண்டாம்"னு பெரியவா சொல்லுவா.

நோய் தானே சரியாய் போயிடும்! இப்படி ஏராளமான

பேர்களுக்கு அனுக்ரஹம் பண்ணியிருக்கா.

என் வீட்டுப் பெண்-பிள்ளைகளுக்குக் கல்யாணம்

செய்து வைத்ததே பெரியவா தான்.என்ன செலவாச்சுன்னு

இன்றுவரை எனக்குத் தெரியாது.கன்னிகா தானமா

ஏற்பாடு பண்ணினார். கோத்ரம் மட்டும் கேட்பார்.

நக்ஷத்திரம் கூடக் கேட்கிறதில்லே. ஜாதகமே இருக்காது!

பெரியவா வாக்கே, அருள் வாக்கு.

"உன் பொண்ணைக் கொடு; புள்ளையைக் கொடு"ன்னு

சொல்றது மட்டுமில்லே, கல்யாணத் தேதியைக் கூடக்

கொடுத்துடவா. ஸ்மார்த்தா-வடமா-பிரஹசரணம்

இதுகளிலே என்ன பிரிவுன்னு கேட்டுப்பா.

ரொம்ப ஆனந்தமான காலம் அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

2 years ago | [YT] | 0

எழுதியதில்

NAGA PUSHPA

2 years ago (edited) | [YT] | 0