தேசியமும் தெய்வீகமும் பாரத நாட்டின் இரு கண்கள்

அதனை தமிழகத்தில் மீட்டெடுக்க ஒரு அணிலாக இந்த சேனல் பயன்பட வேண்டும் என்று நம்புகிறேன்


Follow us on Facebook

www.facebook.com/விதுரன்-மீடியா-Vidhuran-Media-101…


VIDHURAN MEDIA

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் அதிமுக வருகிறதா ?


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் அண்ணாமலை அவர்களை முன்னிறுத்தி NDA வாங்கிய வாக்கு சதவீதம் 18.5%


எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முன்னிறுத்தி அதிமுக மற்றும் தேமுதிக புதிய தமிழகம்  அனைத்தும் சேர்ந்து வாங்கிய வாக்கு 23 %


இந்த இரு அணிகளும் மொத்தமாக வாங்கிய வாக்கு சதவீதம் 41.5 % 


இந்த நிரூபிக்கப் பட்ட வாக்கு வங்கியை கணக்கில் எடுத்துக் கொண்டு , 


இப்போது உள்ள பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 104 இடங்கள் மற்றும் 


அதிமுக தேமுதிக புதிய தமிழகம் கட்சிகளை உள்ளடக்கிய அதிமுக கூட்டணிக்கு 130 இடங்கள்


 என்று தொகுதி உடன்பாடு செய்து கொண்டு 

தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவாக்கம் செய்து


 கூட்டணி ஆட்சி குறைந்த பட்ச செயல் திட்டம் என்பதை எல்லாம் கூடிய விரைவிலேயே முடிவு செய்து ஒரு வருடம் கடுமையான பிரச்சாரம் செய்தால் திமுக கூட்டணியை வெல்ல முடியும்... 


அதே சமயம் பாஜக அதிமுக மற்றும் உள்ள அனைத்து கட்சிகளும் தங்கள் வாக்கு சதவீதத்தை பொறுத்து நியாயமான இடங்களில் போட்டியிட்டு தங்கள் பிரதிநிதிகளை சட்டமன்றத்திற்கு அனுப்ப முடியும்..... !

1 month ago | [YT] | 6

VIDHURAN MEDIA

Meeting Mata Amritanandamayi Amma is always a profoundly divine and soul-enriching experience.

Today, in Chennai, had the privilege of seeking her blessings.
---Shri K ANNAMALAI
#tn
#bjp president

2 months ago | [YT] | 1

VIDHURAN MEDIA

மக்கள் விரோத ஆட்சியாளர்களின் ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த அநீதிக்கு தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆற்றாமையில் தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொண்டு போராட்டம் நடத்திய பாஜக தலைவர் அண்ணாமலை... #அண்ணாமலை #annamalai #annaUniversity

4 months ago | [YT] | 7

VIDHURAN MEDIA

எங்கேயோ ஒரு மாநிலத்தின் குக்கிராமத்தில் ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் அதற்காக தமிழ்நாட்டில் குய்யோ முய்யோ என்று கூச்சல் போடும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகத்தில் இவ்வளவு பெரிய அநியாயம் நடந்து உள்ளதை பற்றி ஏன் வாய் திறப்பதில்லை?

4 months ago | [YT] | 8

VIDHURAN MEDIA

பிரச்சினை உங்கள் வீட்டுக்கு வரும் வரை உங்களால் எதுவும் செய்ய முடியாது என்றால் உங்கள் அடுத்த தலைமுறைகள் இங்கே நிம்மதியாக வாழ்வது என்பது கடினமான செயலாகி விடும்

Demography Change is a Big Threat to our Nation
#Bharath
#demography

4 months ago | [YT] | 0

VIDHURAN MEDIA

தனது வீட்டுக்கு வரவழைத்து அரிசி சர்க்கரை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கொடுத்த தவெக தலைவர் நடிகர் விஜய் ன் செயல் எதைக் காட்டுகிறது

5 months ago | [YT] | 1

VIDHURAN MEDIA

விசிக மது ஒழிப்பு மாநாட்டில் மூதறிஞர் ராஜாஜி அவர்களின் பதாகையை வைத்ததற்கு திராவிட துந்துபிகள் கதறுகிறது இணையமெங்கும்..

உண்மையில், இதை என்றோ செய்திருக்க வேண்டும் விசிகே போன்ற கட்சிகள்..வெறும் மதுஒழிப்பு என்கிற புள்ளியில் மட்டுமே ராஜாஜியை உயர்த்திப் பிடிப்பது அறிவீனம்..தமிழகத்தில் மெய்யான சமூகநீதி உருவாக அரும்பாடுபட்டவர் ராஜாஜி அவர்கள்.

ஆலயநுழைவு, நிலச்சீர்த்திருத்தம், சமபந்தி போஜனம், பட்டியல் சமூகத்தினருக்கு அதிகாரப் பகிர்வு என்பதில் எல்லாம் தமிழகத்தில் ஒரு முன்னோடி என்றால் அது ராஜாஜி அவர்கள் மட்டுமே.அதை அரசியல் பிரதிபலன் இல்லாமல் சமூக இயக்கமாக முன்னெடுத்தார்.

மாகாண சுயாட்சி அடைந்து 1937 ல் மதராஸ் மாகாண முதல்வரான ராஜாஜி அவர்களின் அமைச்சரவையில் விவசாயம் மற்றும் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக பட்டியல் சமூகத்தை சேர்ந்த வி.ஐ முனியசாமிப்பிள்ளை பொறுப்பேற்றுக் கொண்டார்.அப்போது மதராஸ் மேயராகவும் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சிவசண்முகம்பிள்ளையே ஆக்கப்பட்டார்..

ருக்மணி லட்சுபதி அவர்களை துணை சபாநாயகராக அறிவித்தார்.முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உப்பு சத்தியாகிரகத்தில் ஆங்கிலேய அரசால் தண்டனை பெற்ற பெண்மணியும் இவரே..

இப்படி எண்ணற்ற சாதனைகளை செய்த ராஜாஜியை புறக்கணிப்பதே அரசியல் அயோக்கியத்தனம்..இதை நீண்டகாலமாக செய்து வரும் தமிழக களத்தில் ராஜாஜி படத்தை விசிகே பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை..ராஜாஜியோடு கூட்டணி வைத்து அதிகாரத்தை பிடிக்க தயங்காத திமுக, தற்போது விசிகவை விமர்சிப்பது கேவலமான அரசியல்.ஆகவே, இந்த திராவிட கூச்சலுக்கு பயந்து இதில் பின்வாங்காமல் விசிகே இருந்தால் மகிழ்ச்சியே.. - சுந்தர் ராஜ சோழன்

7 months ago | [YT] | 4

VIDHURAN MEDIA

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.....

8 months ago | [YT] | 86