Rasenthiram Parththipan



Rasenthiram Parththipan

தீவிரம் அடையும் சூறாவளி!🌀

எமது பெறுமதிமிக்க உயிரையும், உடமைகளையும் இயற்கை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.

அதிகாலை இரண்டு மணிக்கு கிழக்குக் கரைக்கு நகர உள்ளதால், இருள் சூழ்ந்த சூழ்நிலையும்,நித்திரை மயக்கமான
நேரமுமாக இருப்பதாலும் மக்கள் விழிப்புடனும், பாதுகாப்புடனும் இருத்தல் மிக மிக அவசியம்.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புயல் மேலும் தீவிரம் அடைந்து கிழக்கு மாகாண கரையோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

தற்பொழுது உள்ள நிலவரப்படி இப்புயலானது திங்கள் கிழமை அதிகாலை 2 மணியளவில் கல்முனை, மட்டகளப்பு பிரதேச அருகாமையில் நகர்ந்து செல்லவுள்ளது.

தற்போது நகர்ந்து வரும் புயல் சில வேளை வேறு திசை நோக்கியும் செல்லலாம்.

🌀வேகமாக காற்று வீசும். கடற்பிரதேச அண்மையில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்தை தெரிவு செய்யுங்கள்.

🌀பாதுகாப்பற்ற, பழைய சேதமடைந்த வீடுகளில் தங்குவதைத் தவிருங்கள்.

🌀மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிருங்கள். மீனவ உபகரணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

🌀அங்கவீனர், மற்றும் வயோதிபர்களை பாதுகாப்பான இடத்தில் அமர்த்தவும்.

🌀முக்கிய ஆவணங்களை பத்திரப்படுத்தி தயார்நிலையில் வைத்திருக்கவும்.

🌀மண்ணென்ணெய், விளக்கு, தீப்பெட்டி, மெழுகுதிரிகளை தயார் நிலையில் வைத்திருங்கள்.

🌀மழை அதிகமாக காணப்படுவதால்; மண்சரிவு ஏற்படக்கூடிய இடங்கள், குளங்கள் மற்றும் அணைக் கட்டுகளுக்கு அருகில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும்.

🌀குடிநீரை சேமித்து வைக்கவும்.

🌀காற்றிற்கு விழக்கூடிய சுவர்க் கடிகாரங்கள், அலங்காரப் பொருட்களை அகற்றிவிடுங்கள்.

🌀கால்நடைகளை உரிய இடத்தில் பாதுகாப்பாக வையுங்கள்.

💐எமது பெறுமதிமிக்க உயிரையும், உடமைகளையும் இயற்கை அழிவிலிருந்து பாதுகாத்துக் கொள்வோம்.💐

1 year ago | [YT] | 1

Rasenthiram Parththipan

2024 நவம்பர் 25ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு



2024 நவம்பர் 25ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.



தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் இன்றுகாலை மத்திய-தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி இன்று அதிகாலை 0230 மணியளவில் மட்டக்களப்புக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 500 கிலோ மீற்றர் தூரத்தில் நிலை கொண்டிருந்தது. அத் தொகுதி மேலும் வலுவடைந்து நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



மேற்குறிப்பிட்ட தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.



நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.



வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 35-45 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.



இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

1 year ago | [YT] | 1

Rasenthiram Parththipan

*நிறம்: சிவப்பு*

*தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எச்சரிக்கை*

இயற்கை அபாயங்கள் முன் எச்சரிக்கை மையம் வெளியிட்ட அறிவிப்பு:
*திகதி:* 24 நவம்பர் 2024
*நேரம்:* காலை 04.00
*செல்லுபடியாகும் காலம்:* 25 நவம்பர் 2024 மாலை 04.00 மணி வரை

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். இதற்கான வாய்ப்பு நவம்பர் 25 ஆம் தேதிக்குள் தென்மேற்கு வங்கக்கடலில் உள்ளது. இந்த அமைப்பு மேலும் வலுப்பெற்று தீவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

*மழை முன்னறிவிப்பு:*

- *கிழக்கு மாகாணம்:* சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

- *வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள்:* சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும். - *அம்பாந்தோட்டை மாவட்டம்:* பலத்த மழை தாக்கம் ஏற்படலாம்.

*கடல் பகுதிகள்:* நிலம் மற்றும் தீவைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமான கடல் பகுதிகளில் பணிபுரிபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியது அவசியம்.

*தயவுசெய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்ளவும்!*

1 year ago | [YT] | 2