Let's Explore the Unexplored!!!
We all know that Tamil History dates back to a very long time. Our past is full of fascinating stories, especially the reign of Cheras, Cholas, Pandyas, and Pallavas.
Curious to know about our history and rich cultural heritage?
Check out our videos.
Give yourself a chance to explore the unexplored through our lenses!
Get to know more about #Heritage #History #Purana and age-old kingdoms of #Chera #Chola #Pandya #Pallava
Catch me in
FB : www.facebook.com/siva.raman.7
Instagram : sivaraman.natarajan
twitter: @siva131187
Indian Histropedia
Book no:09/2025
நீண்ட நாட்களுக்குப் பிறகு, வரலாற்றுப் புதினங்களில் இருந்து மாறுபட்டு, இல்லை இல்லை, முற்றிலும் மாறுபட்ட ஒரு நாவலை வாசித்தேன். அதன் பெயர் "ஆரச்சாலை". இதை எழுத்தாளர் சென் பாலன் எழுதியுள்ளார்.
எங்கள் பகுதியான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் மற்றும் தற்சமயம் மிகவும் பரபரப்பாக இருக்கும் சாலைகளில் ஒன்றான ரேடியல் ரோடு என்று எனக்கு மிகவும் பரிச்சயமான இடங்களைச் சுற்றி இந்தக் கதை நகர்கிறது. இது ஒரு விசாரணைக் கதை.
விசாரணைக் கதை என்று சொன்னால் நமக்கு நிறைய காவல்துறை பற்றிய திரைப்படங்கள்தான் நினைவுக்கு வரும். வரட்டுமே! ஒரு புத்தகத்தில் ஒரு எழுத்தாளர் விசாரணையைக் கையாண்ட விதம் என்று ஒன்று இருக்கும் அல்லவா? அது திரைப்படத்தில் நாம் பார்க்கும் நிழல் உருவங்கள் இல்லாமல், உங்கள் மனதில் ஒரு நிஜ கற்பனை உருவத்தைக் கொண்டு வந்து நிறுத்தி பயணப்பட வைக்கும். அதை இந்த எழுத்தாளர் அழகாகக் கையாண்டிருக்கிறார்.
இதில் வரும் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் நாம் பார்த்திருப்போம், கடந்து சென்றிருப்போம். கோபமானவன், அசட்டையானவன், காவலர்கள், காவல் துறை மேலதிகாரிகள், அனைத்து இடங்களிலும் இருக்கக்கூடிய தொழில்முறை அரசியல், சாமியார் மேடை என அனைத்தையும் கடந்து சென்றிருப்போம். திரைப்படத்தில் வரும்போது அதைப் பார்த்து கைதட்டிவிட்டு வந்திருப்போம். ஆனால் புத்தகமாகப் படிக்கும்போது அது கொடுக்கும் அதிர்வு வேறு விதமாக இருந்தது.
இக்கதையில் ஒரு ஆங்கில வசனம் வரும்: "common sequence are more common than uncommon sequences". இந்த வசனமே கதையின் ஓட்டத்தையும் ஆழத்தையும் நமக்கு வெளிப்படுத்தும்.
அனைவரும் வாசித்து அனுபவம் பெறவேண்டிய புத்தகம் இது.
-சிரா.
புத்தகத்தின் பெயர்: ஆரச்சாலை
எழுத்தாளர்: சென் பாலன்
பதிப்பாளர்: கேலக்ஸி புக் செல்லர்ஸ் அண்ட் பப்ளிஷர்ஸ்
விலை: 180/- ரூபாய்.
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_4 #சோழ_சிம்மம்_ஆதித்தகரிகாலன் #ஆரச்சாலை #சென்பாலன்
2 months ago | [YT] | 12
View 0 replies
Indian Histropedia
Book no:08/2025
ஏற்கனவே எழுத்தாளர் தம்பி "சேரன் செங்குட்டுவன்" எழுதிய "சோணாடு கொண்டான்" என்ற நாவலின் முதல் பாகமான "மணிமுடி"-யின் முதல் படலமான "ஜெயங்கொண்ட பரகேசரியார் படலம்" என்ற புத்தகத்தை படித்துவிட்டு அதைப் பற்றிய என்னுடைய எண்ண ஓட்டத்தை எழுதியிருந்தேன்.
இப்போது அந்த பாகம் ஒன்றின் இரண்டாவது படலமான "கட்டளை எழுந்தருளிய படலம்" என்ற புத்தகத்தை வாசித்து முடித்தேன். முதல் படலம் முடியும் போது இலங்கையில் நடந்த போரைப்பற்றி பேசி அதை நம் கண் முன்னே நிறுத்தி முடித்திருப்பார் எழுத்தாளர் சேரன் செங்குட்டுவன்.
இந்தப் படலம் துவங்குவது அந்த இலங்கை போருக்கு பின்பு பாண்டியநாடு எப்படி இருக்கிறது என்பதை விவரித்து கூறியிருப்பார். அதுவும் பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருக்கக்கூடிய மன்னருக்கும் அந்நாட்டின் இளவரசனுக்கும் அந்தப் போர் எந்த விதமான அதிர்வை கொடுத்திருக்கிறது என்பதை நேர்த்தியாக நமக்கு கடத்தியிருப்பார் எழுத்தாளர்.
ஒவ்வொரு பக்கங்களுக்கும் ஏதோ ஒரு புது தகவல் இவருடைய எழுத்திலிருந்து நமக்கு கிடைக்கிறது. ஒவ்வொரு படையெடுப்பு நிகழ்வையும் அழகாகவும் உக்கிரமாகவும் நம் கண் முன் படைத்திருப்பது நேர்த்தி.
இப்புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடம் எது என்றால் "வளரி" பெண்கள் பயன்படுத்திக் கொண்டிருந்த ஆயுதம் என்று கூறி, அதற்கு உண்டான விளக்கத்தை எழுத்தாளர் கொடுத்திருப்பார் -அது மிகவும் முக்கியமான ஒன்று என்று என் மனதில் பட்டது. அதுவே இப்புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த இடமாகவும் மாறியது.
இந்த “சோணாடு கொண்டான்” புதினத்தில் மிக முக்கியமாக நான் கருதுவது எது எனில் கதாபாத்திரங்களின் நகர்வும் அவர்களின் தனிப்பட்ட குணங்களும் வரையப்பட்ட விதம் தான். அதை எழுத்தாளர் அம்சமாக கையாண்டு இருக்கிறார்.
பின்பு, என்னவென்றா யோசிக்கிறீர்கள்! இப்புத்தகத்தை நீங்களும் வாங்கி படித்து இதில் இருக்கக்கூடிய கதை மாந்தர்களுடன் வாழ்ந்து மகிழுங்கள். கண்டிப்பாக இப்புத்தகம் உங்களை மகிழ்விக்கும் என்று உறுதியாகச் சொல்கிறேன். மூன்றாவது படலத்துடன் உங்களை சந்திக்கிறேன்.
-சிரா
புத்தகத்தின் பெயர்: சோணாடு கொண்டான், பாகம் 1 - மணிமுடி.
"கட்டளை எழுந்தருளிய படலம்"
எழுத்தாளர்: சேரன் செங்குட்டுவன்
பதிப்பாளர்: பர்ப்பிள் புக் ஹவுஸ்
விலை: 250/- ரூபாய்.
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_4 #சோழ_சிம்மம்_ஆதித்தகரிகாலன் #சோணாடுகொண்டான் #சேரன்செங்குட்டுவன் #பர்ப்பிள்புக்ஹவுஸ்
3 months ago | [YT] | 13
View 0 replies
Indian Histropedia
என்னுடைய அடுத்த படைப்பான சோழ சூரியன் பாகம் : 4
"சோழசிம்மம் ஆதித்த கரிகாலன்" வெளியானது.
சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே இருந்த பகைமையும் அதிகாரப் போட்டியும் உச்சம் தொட்ட காலம் அது. ஒரு குறிப்பிட்ட நாளில், இரண்டு சாம்ராஜ்யங்களும் போர்க்களம் புகுந்தன. வரலாற்றின் பக்கங்களில் செங்குருதியைத் தோய்த்த வாளின் கூர் முனையைக் கொண்டு ஒரு புதிய அத்தியாயத்தை எழுத முற்பட்டு அதில் வெற்றியும் கண்டன.
இரண்டு சாம்ராஜ்யங்களையும் பிரதிநிதித்துவப்படுத்த, ஆதித்த கரிகாலன் மற்றும் வீரபாண்டியன் எனும் இரு மாபெரும் வீரர்கள் களம் கண்டார்கள். அக்களத்தில், சோழர்களை முன்னிறுத்தி, தன் மனதில் இருந்த பகையை கனலாக மாற்றி ஆதித்த கரிகாலன் போரிட்டான். எதிரில் நின்ற வீரபாண்டியனும் சளைத்தவன் அல்ல. இறுதி மூச்சு நீடிக்கும் வரை தன் வீரத்தைப் போர்க்களத்தில் பறைசாற்றினான்.
இப்படிப்பட்ட பயங்கரப் போருக்கு முன் நடந்த அரசியல் சதிகளும், தனிப்பட்ட போராட்டங்களும், சாம்ராஜ்யத்தின் தலைவிதியைத் தீர்மானிக்க ஒரு உச்சகட்டப் புள்ளியாக மாறின. சோழ வரலாற்றின் அளவற்ற பெருங்கடலில், இந்தச் சேவூர் போர் ஒரு முக்கிய களமாக அமைந்தது. செங்குருதியால் எழுதப்பட்ட வரலாற்றுப் பக்கங்களில் இருக்கக்கூடிய சேவூர் போர்க்களத்தையும், போருக்கு முன் நடந்த அரசியல் சூழ்ச்சிகளையும், துரோகங்களையும், வீரத்தின் தியாகங்களையும் உங்கள் கண்முன்னே தோற்றுவிக்கும்.
இது வெறும் போர்க்கதையல்ல. இது அதிகாரம், வீரம், துரோகம் மற்றும் அன்பின் ஆழமான சரித்திரம்.
Link :-www.swasambookart.com/books/9788198681584?name=Cho…
Call/WhatsApp orders - 8148066645
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #bookno06 #சோழ_சிம்மம்_ஆதித்தகரிகாலன் #சோழ_சூரியன்_பாகம்_4
3 months ago | [YT] | 16
View 0 replies
Indian Histropedia
Book no:07/2025
எழுத்தாளர் தம்பி "சேரன் செங்குட்டுவன்" எழுதிய "சோணாடு கொண்டான்" என்ற நாவலின் முதல் பாகமான "மணிமுடி"-யின் முதல் படலமான "ஜெயங்கொண்ட பரகேசரியார் படலம்" என்ற புத்தகத்தை படித்தேன்.
முதலில் ஒரு நாவலை படலங்களாக பிரித்து கொண்டு வந்ததே பாராட்ட வேண்டிய ஒன்று. அதன் பின் முன் கதை சுருக்கம் என்று கூறுவது போல் இக்கதை துவங்கும் முன் வரலாற்று சம்பவங்களை சொல்லிவிட்டு, இச்சம்பவங்களை மீண்டும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் அப்போதுதான் இக்கதை புரியும் என்று எழுத்தாளர் கூறியது எதார்த்தம்.
அனைவரும் சோழர்கள் என்று சொன்னாலே ஒரு சில சோழ மன்னர்களை பற்றி மட்டும் கதையை எழுதுவார்கள். அப்படி எழுதப்படும் சோழ மன்னர்களில் மூன்றாம் குலோத்துங்கனை பற்றி எழுதப்படும் கதைகள் மிகவும் குறைவு. அதோடு சோழத்தின் வீழ்ச்சியை பற்றி கூறும் கதைகள் மிகவும் அரிதிலும் அரிது. அப்படி அரிதான கதைக்களத்தை மிக எளிமையாகவும் அழகாகவும் எழுதி இருக்கிறார் எழுத்தாளர் சேரன் செங்குட்டுவன். அதற்காக எழுத்தாளருக்கு பாராட்டுக்கள்.
நான் படித்த நாவல்களிலேயே அதிகமாக கோடிட்ட புத்தகம் இதுதான். ஏனெனில் இப்புத்தகத்தில் வரக்கூடிய வரலாற்றில் வாழ்ந்த மக்களின் பெயர்களும், கப்பல் கட்டுமானத்தை பற்றி சொல்லக்கூடிய இடங்களும், சில வழக்கில் இல்லா தமிழ் வார்த்தைகளும் புதிதாக இருந்தது. இக்கதை ஆரம்பிக்கும் முன்பு எழுத்தாளர் தன்னுடைய முன்னுரையில் இது வரலாற்று புதினம் தான், ஆனால் வரலாற்றுத் தரவுகளை வைத்து நான் சிறிதாக கதைக்களத்தை உருவாக்கியிருக்கிறேன் என்று கூறியிருப்பார். எழுத்தாளரின் உரையை படிக்கும் போது இது அனைத்து புதினம் எழுதும் எழுத்தாளரும் கூறுவது தானே என்று நினைத்தேன். ஆனால், "சிரா, உன் எண்ணம் தவறு" என்று இப்புத்தகமும் இப்புத்தகத்தில் வந்த கதைக்களமும் என்னிடம் வந்து உரக்கச் சொல்லியது போல் இருந்தது. இதை படித்து முடித்த பின் எனக்கு வந்த அனுபவம். எழுத்தாளர் சேரன் செங்குட்டுவனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
இப்புத்தகத்தை பற்றி நிறைய பேசுவதை விட நீங்கள் இதை வாங்கி படித்துவிட்டு உணர்ந்தால் அது உங்களுக்கு வேறொரு அனுபவத்தை தரும். இப்புத்தகத்திற்கு இன்னும் இரு படலங்கள் இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக படித்து விட்டு உங்களோடு பகிர்கிறேன்.
-சிரா
புத்தகத்தின் பெயர்: சோணாடு கொண்டான், பாகம் 1 - மணிமுடி.
"ஜெயங்கொண்ட பரகேசரியார் படலம்"
எழுத்தாளர்: சேரன் செங்குட்டுவன்
பதிப்பாளர்: பர்ப்பிள் புக் ஹவுஸ்
விலை: 299/- ரூபாய்.
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_4 #சோணாடுகொண்டான் #சேரன்செங்குட்டுவன் #பர்ப்பிள்புக்ஹவுஸ்
4 months ago | [YT] | 19
View 0 replies
Indian Histropedia
Book no:06/ year 2025
இன்று எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் கோவி.மணிசேகரன் அவர்கள் எழுதிய "வேங்கை வனம்" என்ற நாவலை படித்து முடித்தேன்.
அற்புதமான படைப்பு. நான் எப்போதும் கூறுவது போல் "Masters are always Masters" என்பதை மீண்டும் இந்த படைப்பு நிரூபித்திருக்கிறது. தமிழ், காதல், வீரம், மாண்பு மற்றும் பாண்டிய வேந்தன் உக்கிர பெருவழுதிக்குப் பின் தமிழ் சங்கம் நடைபெறவில்லை என்ற ஒரு குறிப்பு - இதை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு படைப்பை தெளிவாக தர இயலும் என்பதை எடுத்துரைத்திருக்கிறது இந்த நாவல்.
ஒரு கதையை எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு பாடமாக இருக்கிறது எழுத்தாளர் திரு.கோவி. மணிசேகரனின் எழுத்துக்கள். இக்கதையில் வரக்கூடிய சொல்லாடலும் உருவகமும் மிகப்பெரிய பாடம். சொல்லாடல் என்று சொன்னவுடன் கவிதை நயம் என்று நினைக்க வேண்டாம். எளிய முறையில் அனைவருக்கும் புரியும் வகையில் சொற்களுக்கு உருவம் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர்.
தற்காலத்தில் எழுதக்கூடிய அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு எழுத்தாளர் கோவி.மணிசேகரன். தயவுசெய்து வரலாற்று புதினங்கள் எழுதும் என் சக எழுத்தாளர்கள் அனைவரும் கண்டிப்பாக ஐயா கோவி.மணிசேகரனின் ஏதோ ஒரு படைப்பை படித்து விடுங்கள். அது நிச்சயம் உங்களின் எழுத்துக்கும், கற்பனா சக்திக்கும் வேறொரு கோணத்தை கொடுக்கும். வாசகர்களே என்னிடம் கோபம் கொள்ளாதீர்கள். 'என்னடா இவன் எழுத்தாளர்களை மட்டும் படிக்கச் சொல்கிறான் என்று.' எக்காலத்திலும் வாசகர்கள் படைப்புகளை தேடி படித்து விடுகிறீர்கள். ஆனால் தற்காலத்தில் எழுத்தாளர்கள் படிப்பது குறைந்து விட்டதோ என்று எனக்கு ஒரு எண்ணம். அதனால்தான் முதலில் அவர்களுக்கு சொன்னேன். வாசகர்களே நீங்களும் கண்டிப்பாக கோவி.மணிசேகரன் அவர்களின் படைப்புகளை படியுங்கள். இந்த வேங்கை வனம் தவிர்க்க முடியாத ஒரு புத்தகம். கண்டிப்பாக வாசித்து விடுங்கள்.
-சிரா.
புத்தகத்தின் பெயர்: வேங்கை வனம்
எழுத்தாளர்: கோவி.மணிசேகரன்
பதிப்பாளர்: பூம்புகார் பதிப்பகம்
விலை: 225/- ரூபாய்.
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #சோழ_சூரியன்_பாகம்_4 #வேங்கைவனம் #கோவி_மணிசேகரன் #பூம்புகார்பதிப்பகம்
4 months ago | [YT] | 12
View 1 reply
Indian Histropedia
அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துகள்
5 months ago | [YT] | 6
View 0 replies
Indian Histropedia
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்துக்கள்
5 months ago | [YT] | 8
View 1 reply
Indian Histropedia
Swasam is inviting you to a scheduled Zoom meeting.
Topic: Siraa's Books Introduction - Swasam Publications
Time: Feb 18, 2025, Tuesday, 06:30 PM India
Join Zoom Meeting
us04web.zoom.us/j/6160049993?pwd=QRGnC7yaZxhjDzLMt…
Meeting ID: 616 004 9993
Passcode: swasam
7 months ago | [YT] | 5
View 0 replies
Indian Histropedia
Book no:02/ year 2025
யானை இந்த உலகத்தில் வாழக்கூடிய ஒரு பேருயிர். யானையை பார்த்தாலே நாம் அனைவருக்கும் ஒரு ஆனந்தம் உள்ள எழத்தான் செய்யும்! முகம் மலரும்! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை "அங்க பார் யானை என்று நம்மை மீறி சொல்லி சந்தோஷப்படுவோம்".
அப்படிப்பட்ட அந்த பேருயிர், மனிதர்கள் மனிதர்களாக மாறிய பின் என்னென்ன துன்பங்கள் படுகிறது என்பதை பற்றி மிகத் தெளிவாக எழுதப்பட்ட ஒரு முக்கியமான படைப்பு.
சங்க இலக்கியத்தில் இருந்து சமகால தினசரி நாளிதழ் செய்தி வரை சேகரித்து அதில் யானைகளைப் பற்றி இருக்கக்கூடிய மிக முக்கியமான விடயங்களை நம் கையில் கொடுத்திருக்கிறார் இந்த எழுத்தாளர் "கோவை சதாசிவம்".
"எல்லா உயிர்களும் இன்பம் எய்துக" என்று பாரதி கூறியது போல், மனிதர்களால் இந்த உலகில் வாழ முடியவில்லை என்பது வருத்தம் தான். ஏனெனில் மனிதன் சக மனிதன் வாழ்ந்தாலே வசை பாடிக் கொண்டிருக்கக் கூடியவன். அவனா யானைகளைப் பற்றியும், சக உயிர்களைப் பற்றியும் சிந்திப்பான் என்று இந்த நூல் ஆசிரியர் ஒரு பத்தியில் மனம் நொந்து எழுதி இருக்கிறார்.
மனிதர்களிலும் அனைத்து உயிரையும் நேசிக்க கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனால் தான் ஏதோ இயற்கை அடுத்த தலைமுறைக்காக மீதம் இருக்கிறது. ஆனால் எதைப் பற்றியும் கவலை இல்லாமல் பணத்தை மட்டும் நேசிக்க கூடிய மனிதர்கள் அதிகம் இருப்பதால் யானைகளை பார்க்கக்கூடிய கடைசி தலைமுறை நாமாக மாறி விடுவோமோ என்று எனக்கு பல நாள் பயம் எழும். அதே பயத்துடன் தான் இந்த கோவை சதாசிவம் அவர்களும் இந்த நூலை முடித்திருக்கிறார்.
கண்டிப்பாக படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது. நீங்கள் படிப்பது மட்டுமின்றி உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் குழந்தைகளுக்கும் இந்த புத்தகத்தை கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். இதிலிருந்து என்ன புரிகிறது என்று கேளுங்கள். நாம் எங்கு இருக்கிறோம் என்று யோசிக்கச் சொல்லுங்கள். படித்த நீங்களும் யோசியுங்கள். "யானை யானையாக இருப்பதால்தான் நாம் மனிதத்தை மீறி வாழ முடிகிறது".
-சிரா.
புத்தகத்தின் பெயர்: ஆதியில் யானைகள் இருந்தன
எழுத்தாளர்: கோவை சதாசிவம்
பதிப்பாளர்: குறிஞ்சி பதிப்பகம்
விலை: 60/- ரூபாய்.
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #chennaibookfair2025 #cbf2025 #ஆதியில்யானைகள்இருந்தன #கோவைசதாசிவம் #குறிஞ்சிபதிப்பகம்
8 months ago | [YT] | 11
View 0 replies
Indian Histropedia
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
Happy pongal to all
#IndianHistropedia #இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #historyenthusiastic #sivaraman #writer_siraa #சிரா #Siraa #mithran #மித்ரன் #ihstories #contentcreator #digitalcontentcreator #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #maharathan #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #virapandiyan #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #chennaibookfair2025 #cbf2025
8 months ago | [YT] | 14
View 0 replies
Load more