01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட வரலாற்று...
தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும்.
இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் இருந்தனர்.
1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான சிங்களமக்களை குடியேற்றுவதற்கான முயற்சிகளில் இம்முகாம் படையினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இத்தகவல்களை மணலாற்று வேவு அணிகள் அப்போது மணலாறு மாவட்டத் தளபதியாக இருந்த லெப்.கேணல் அன்பு அவர்களிடம் கொடுத்தனர்.
வேவுத்தரவுகளை தீவிரமாக ஆராய்ந்த தளபதி அன்பு அவர்களும் தளபதி மேஐர். வீமன் அவர்களும் நிலமையின் விபரீதத்தை உணர்ந்து இம்முகாமை தாக்கி அழிக்கவேண்டும். எனமுடிவெடுத்து தலைவர் அவர்களிடம் இத்தகவல்கள் அனைத்தையும் தெரிவித்தனர்.
தலைவர் அவர்கள் அனைத்துத் தகவல்களையும் கேட்டறிந்தார்.
அதன் சாதகபாதக நிலைகளையும் எவ்வாறு தாக்குதல் நடாத்தவேண்டும் எனவும் அத்தாக்குதலின்போது சிங்களப் பொதுமக்களுக்குச் சிறுசேதமும் ஏற்படக்கூடாதென உறுதியாக தலைவர் அவர்கள் தளபதிக்கு கூறினார்.
இம்முகாம் கட்டாயம் அழிக்கப்படவேண்டும் எனக் கூறியதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி தளபதிகளை வழியனுப்பிவைத்தார்.
தலைவர் அவர்கள் கொடுத்த ஆலோசனைகளுக்கமைவாகவும் தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடும்பயிற்சி இலகுவான சண்டை என்றதன் அடிப்படையில் வேவுநடவடிக்கைகளில் பெறப்பட்ட தகவல்களுக்கேற்ப தாக்குதலுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டன.
தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு மேஐர் செங்கோல் அவர்கள் தலைமையிலான போராளிகளால் முறையே நிசாம் வெட்டை மற்றும் ஜீவன் ஆகிய முகாம்களில் பயிற்சிகள் நடைபெற்றன.
பயிற்சிகள் முடிவடைந்து தாக்குதற் திட்டம் தளபதி அன்பு அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டதுடன் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளையும் அன்பு அவர்கள் தெளிவாகக் கூறினார்.
தாக்குதலுக்கான இருநூறுபேர் கொண்ட அணிகள் தாயர்படுத்தப்பட்டன.
இவ்வணிகள் கொக்குத்தொடுவாயிலிருந்து படகுகளில் சென்று கொக்கிளாய் கடல்நீரேரியைக்கடந்து தரையிறங்கி அங்கிருந்து நடந்துசென்று 01.11.1990 அன்று அதிகாலை ஒரு மணிவரை முந்திரிகைக்குள முகாமருகில் காத்திருந்து.
அதிகாலை ஒருமணியளவில் மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிங்களப்படையின் முகாம் மீது ஒரு வெற்றிகர அதிரடித்தாக்குதலைத் தொடுத்து வெற்றிகொண்டனர்.
குறிப்பிட்ட சிலநிமிடத்தில் முகாம் புலிகளின் பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது. தொடர்ந்து அந்தமுகாமை தக்கவைத்திருந்த போராளிகள் படைமுகாமை முற்றுமுழுதாக அழித்தொழித்துவிட்டு கைப்பற்றிய ஆயுதங்களுடன் தளம் திரும்பினார்கள்.
இதன் பின்னும் இதனை அண்டியபகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் விடுதலைப்புலிகளால் படையினர் மீதுமேற்கொள்ளப்பட்டதால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.
இவ்வாறுதான் எம் தாயக பகுதி மீதான சிங்களத்தின் ஆக்கிரமிப்பு ஆசைகள் முறியடிக்கப்பட்டு வந்தன.
படைமுகாமின் தாக்ககுதல்களை களத்தில் நின்று மேஐர்.சங்கர் அவர்கள் வழிநடாத்த களமருத்துவத்தை கப்டன் இளங்கோ அவர்கள் தலைமையிலான போராளிகள் செவ்வனவே செய்தனர்.
இவ் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து முல்லை மணலாறு மாவட்டத் தளபதி அன்பு அவர்கள் வழி நடத்தினார்.
(1991ம் ஆண்டு முற்பகுதியின் பின்னர் தான் இயக்கத்தின் வளர்ச்சியும் அதன் நிர்வாக கட்டமைப்புக்காகவுமாக ஒருமாவட்டத்தில் சிறப்புத்தளபதி, தளபதி, துணைத்தளபதி எனும் கட்டமைப்பு பரிணாம வளர்ச்சி அடைந்தது.)
இவ்வெற்றிகரத் தாக்குதலை களத்தில் நின்று வழிநடாத்திய..
மேஐர் .சங்கர்.அவர்களுடன் 2ம் லெப்ரினன்.மதுவன். வீரவேங்கை .முசோலினி . ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
நீண்டகாலமாக 2ம் லெப்.மதுவனைப் பார்க்காத பெற்றோர் மதுவனைப் பார்பதற்காக மணலாற்று முகாமிற்க்கு வந்திருந்தனர்.
ஆனால் அவ்வெற்றிச்சமரில் வீரச்சாவடைந்த மகனின் வித்துடலுடனே மதுவனின் பெற்றோர் வீடுதிரும்பினர்.
இப்படியான பல்வேறு அர்பணிப்புக்கள் தியாகங்கள் நிறைந்த போராட்டமாக தமிழீழவிடுதலைப் போராட்டம் திகழ்கிறது.
கிட்டத்தட்ட முப்பதான்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவமானது அன்று இக்களமுனையில் நின்றவர்களால் மறக்கமுடியாத பெரும் சோக நிகழ்வாக இன்றும் அப்போராளிகளால் நினைவுகூரப்படுகிறது.
அக்களமுனையில் நின்று இன்று புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் உள்ளத்திலிருந்து...... Copy
ஒரு தம்பி சில மாதங்களுக்கு முன்பு எழுதிய இந்தப் பதிவை ஒரு கருத்தரங்கிற்காகக் கேட்டிருந்தார்.
புதிய உறவுகளுக்காகவும், ஜேவிபி இன வாத அலையின் பின் அள்ளுண்டு போகும் தற்குறித் தமிழர்களை எச்சரிக்கவும் இந்த மீள் பதிவு.
🟥 தமிழீழத்திலும் ஒரு 'Harki'குழுமம் உருவாகிறதா?
பிள்ளையான் மழைக்குக் கூடப் பள்ளிக்கூடம் ஒதுங்காத ஆள். (அது தவறில்லை - குடும்பச் சூழல் அதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்திருக்கலாம். ) ஆனால் பிரான்சில் வசிக்கும் இன அழிப்பு அரச ஒத்தோடியும் ஒட்டுக் குழு உறுப்பினருமான ஞானம் ஸ்டாலின் என்பவர் தனது வாந்திகளை எழுதிக் கொடுக்க அதைப் பிள்ளையான் இரண்டு புத்தகங்களாக தனது பெயரில் வெளியிட்டிருக்கிறார். இந்த ஞானம் ஸ்டாலின் பிள்ளையானின் மதி'கெட்ட'யுரைஞர்களில் முதன்மையானவர்.
இப்ப பிரச்சினை அதுவல்ல.
இந்த மதி கெட்ட உரைஞர் பிரான்சில் வாழ்வதால் பிள்ளையானுக்குப் படிப்பறிவு இல்லாததால் பிரான்சில் ''Harki' என்று ஒரு அல்ஜீரிய தொகுதி மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் பிரெஞ்சு அரசுடன் சேர்ந்து சொந்த இனத்திற்குத் துரோகம் செய்ததால் அல்ஜீரிய மக்கள் கைவிட்டது மட்டுமல்ல பிரெஞ்சு அரசே அவர்களைக் கைவிட்டு பிரான்ஸ் வீதிகளில் பிச்சை எடுக்கிறார்கள் என்ற கதையைச் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் அவர் சொல்லவில்லை - பிள்ளையானும் கேட்டறியவில்லை. அவ்வளவு ஏன் தற்போது மூளை வீங்கின படித்த ஒரு முட்டாள் கூட்டமும் ஜேவிபி அரச ஒத்தோடிகளாக மாறி சொந்த இனத்திற்குத் துரோகம் செய்யப் புகுந்தவர்களும் இதை வரலாற்றிலிருந்து அறியவில்லை.
Harki பற்றித் தெரிந்த ஒருவன் கனவில் கூட சொந்த இனத்திற்குத் துரோகம் இழைக்க மாட்டான். சும்மா அள்ளு விடும் வரலாறு அது. ஈரல் குலை நடுங்கும்.
யார் இந்த கார்கிகள்?
அல்ஜீரியாவை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சு அரசுக்கு எதிராக அல்ஜீரிய தேசம் போர்க்கோலம் பூண்டிருந்த காலம் அது. சுதந்திரம் இல்லையேல் வீரமரணம் என்பதே அப்போதைய ஒவ்வொரு அல்ஜீரியக் குடிமகனதும் உச்சரிப்பாக இருந்தது.
எமக்குள் சிங்களம் ஆட்களை விலைக்கு வேண்டிய வரலாறு போல் பிரெஞ்சு அரசும் அல்ஜீரியர்களில் ஒரு தொகுதியினரைப் பிரித்து எடுத்து ஆயுதங்கள் கொடுத்து ஒட்டுக் குழுக்களாக மாற்றி சொந்த மக்கள் மீதே திருப்பி விட்டார்கள்.
அல்ஜீரியப் போராளிகளுக்கும் மக்களுக்கும் அதிர்ச்சி - இதனால் பெரும் பின்னடைவு.
அல்ஜீரிய மக்களும், போராளிகளும் கார்கிகளை - இயக்கம் (அரபு மொழியில் இயக்கம் என்றே அர்த்தம்) வேண்டாம் வெளியேறுங்கள் என்று ஓயாது கத்திக் கூப்பாடு போட்டார்கள் (தற்போது நாம் ஜேவிபியை ஆதரிக்க வேண்டாம் என்று ஒப்பாரி வைப்பது போன்று)
ஆனால் கார்கிகள் கேட்டபாடில்லை. சொந்த மக்களையே பிரெஞ்சு படைகளுடன் சேர்ந்து கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்தார்கள்.
கார்கிகளைக் கொண்டே தற்போது ஜேவிபி செய்வது போல் நிர்வாகக் கட்டமைப்பையும் உருவாக்கியது பிரெஞ்சு அரசு. அல்ஜீரிய விடுதலை பெரும் தேக்கத்தைச் சந்தித்தது.
ஆனால் வரலாறு ஒரு போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை - அது நேர்கோட்டில் பயணிப்பதும் இல்லை.
1962 இல் பிரான்ஸ் அல்ஜீரியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவானது. 1962 யூலை ஐந்தாம் திகதி சுதந்திர தேசமாகியது அல்ஜீரியா.
பிரான்ஸ் அரசுடன் ஆயிரத்தெட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அல்ஜீரியா கார்கிகள் விடயத்தில் மட்டும் எந்த விட்டுக்கொடுப்புமில்லாமல் கறாராக நின்றது.
பிரான்ஸ் அரசும் கார்கிகளைக் கைவிட்டு வாயை மூடிக் கொண்டது.
ஒப்பந்தப்படி ஒரு பக்கம் பிரெஞ்சுப் படைகள் வெளியேறிக் கொண்டிருக்க மறுபக்கம் போராளிகளும் அல்ஜீரிய மக்களும் கார்க்கிகளைத் தேடித் தேடி வேட்டையாடினார்கள். பெண்கள், குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் குடும்பம் குடும்பமாகக் கார்கிகளைக் கொன்று குவித்து வீதி முழுவதும் பிணக்காடாகியது.
தமது விடுதலையைத் தாமதப்படுத்தி தமக்குத் துரோகம் இழைத்த கார்கிகளை மன்னிக்க அல்ஜீரிய தேசம் தயாராக இல்லை.
தம்மைக் காப்பாற்றுமாறு வெளியேறிக் கொண்டிருந்த பிரெஞ்சு படைகளின் கால்களில் விழுந்து கதறினார்கள் கார்கிகள்.
வெளியேறும் லொறிகளின், விமானங்களின், கப்பல்களின் பின்னால் கார்கிகள் ஏற முயன்ற போது பிரெஞ்சுப் படைகள் அவர்களை அடித்தும் சுட்டும் விரட்டினார்கள். ஏனென்றால் பிரான்ஸ் அரசு ஒரு கார்கியைக் கூட பிரெஞ்சுப் படைகள் பிரான்சுக்கு அழைத்து வரக் கூடாதென்று கடுமையாக உத்தரவிட்டிருந்தது.
கார்கிகள் கனவில் கூடத் தமக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பிரெஞ்சுப் படைகள் கண் முன்னேயே கார்கிகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட இது ஒரு கட்டத்தில் பிரான்ஸ் அரசுக்கு நெருக்கடியாக மாறியது.
வேண்டா வெறுப்பாக கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சிய கார்கிகளை பிரான்ஸ் தனது நாட்டுக்குக் கொண்டு வந்தது.
இதற்கு பிறகு நடந்துதான் பெரும் கொடுமை. கார்க்கிகள் எந்த வசதியுமின்றி காடுகளுக்குள்ளும், நிலக்கரி சுரங்கங்களுக்குள்ளும் தனித்து விடப்பட்டார்கள்.
எந்த வதிவிடப் பத்திரமும் கிடையாது. பணி செய்ய அனுமதியில்லை. கிட்டத்தட்ட திறந்தவெளிச் சிறைச்சாலை. அல்ஜீரிய மக்களுக்கு நிகராக பிரான்ஸ் அரசும் பிரெஞ்சு மக்களும் கார்கிகளை வெறுத்தார்கள். துரோகத்தின் பரிசை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்தார்கள் கார்கிகள்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணம் வரை அவர்கள் நாடற்றவர்கள்தான். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு வதிவிட உரிமை கொடுக்க வேண்டும் என்றும் தாம் கார்கிகளைக் கைவிட்டது தவறு என்றும் அதிபர் மக்ரோன் அறிவித்தார். கிட்டத்தட்ட அறுபத்தைந்து வருடங்களாக ஒரு குழுமம் அனாதையாக இந்த பூமிப் பந்தில் வாழ்கிறது என்றால் அது கார்கிகள் தான். அல்ஜீரியாவிற்குள் இவர்கள் கால் வைக்கவே முடியாது. ஆனால் போரிட்ட அல்ஜீரியர்களும் , பிரான்ஸ்காரர்களும் இரு நாடுகளிலும் குடியேறி குடியுரிமை பெற்று நன்றாக வாழ்கிறார்கள். ஆனால் கார்கிகள்?
துரோகம் எவ்வளவு கொடுமையானது என்பதற்கு வாழும் உதாரணம் கார்கிகள்.
இந்திய இராணுவ காலத்தில் ஈபிஆர்எல்எஃப் பிற்பாடு மாற்று இயக்கங்கள் தொடங்கி கருணா, பிள்ளையான் வகையறாக்களில் வந்து நின்ற துரோகம் தற்போது JVP/ NPP அரச ஒத்தோடிகளில் வந்து நிற்கிறது.
பிள்ளையான் இன்று கண்ணீர் விடுகிறார். நாளை JVP/ NPP செம்புகளும் கண்ணீர் விட நேரிடும்.
தலைவர் அறமும் மனிதாபிமானமும் மிக்கவர். அதனால்தான் துரோகிகளை மட்டும் தண்டித்தார். துரோகிகளின் குடும்பங்களை விட்டு வைத்தார்.
ஆனால் வரலாறு ஒரு நாள் தமிழீழத்தை விடுவிக்கும். ஏனென்றால் எமது மக்களினதும் மாவீரர்களினதும் ஈகம் அத்தகையது. அப்போது ஆட்சி பீடம் ஏறும் தமிழன் தலைவர் போல் அறத்துடன் இருப்பான் என்று எதிர்பார்க்க முடியாது.
தமிழீழத்திற்குச் செய்த துரோகத்திற்காக JVP/ NPP அரச ஒத்தோடிகள் உட்பட ஒட்டுக்குழு வகையறாக்கள் கார்கிகளைப் போல் சுட்டு வீதிகளில் வீசப்படலாம். தமிழீழத்திற்கு இழைத்த துரோகத்திற்காக நாடு கடத்தப்படலாம். அப்போது அனுர அல்ல அனுராவின் பூட்டப்பிள்ளை கூடக் காப்பாற்ற வர மாட்டார்கள்.
ஏனென்றால் வரலாறு ஈவிரக்கமில்லாதது. அது யாரையும் மன்னிப்பதில்லை. Copy
லெப்.கேணல் பூட்டோ அவர்களின் தந்தையாரின் இறுதி வணக்கம் நடைபெற்றுள்ளது. அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். யார் இந்த பூட்டோ? 1997 ஆம் ஆண்டு ’ஜெயசிக்குறு” என்ற பெயரில் வவுனியாவில் இருந்து சிறிலங்காப்படையினர் பாரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இதில் பல கிராமங்கள் சிறிலங்காப்படையினரின் வன்வளைப்புக்குள்ளாகியிருந்தது. சிறிலங்காப்படையினரின் முன்னேற்ற நடவடிக்கையினை தடுக்கும் தாக்குதல்களை அவ்வவ்போது புலிகளால் மேற்கொண்டாலும் சிறிலங்காப்படையினர் மாங்குளம் வரைக்கும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அப்போதைய காலத்தில் கிளிநொச்சி நகரமும் சிறிலங்காப்படையினரின் வன்வளைப்புக்குள்ளேயே இருந்தது. இந்தக்காலத்தில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் பலம் மேலோங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்த சிறிலங்காப்படையினருக்கு கடல் வழியான விநியோகம் செய்ய முடியாத நிலையை விடுதலைப்புலிகளின் கடல்புலிகளின் தாக்குதல்கள் அமைந்திருந்தது. மாங்குளம் வரைக்குமான பிரதேசங்களை உள்ளடக்கி பல படைமுகாம்களை சிறிலங்காப்படையினர் அமைந்திருந்தனர். கனகராயன்குளம், கரிப்பட்டமுறிப்பு, மணவாளன்பட்டமுறிப்பு, கரப்புகுத்தி, விஞ்ஞானகுளம் போன்ற இடங்களிலும் அமைக்கப்பட்ட படைமுகாம்களுக்கான விநியோகங்களை தரை மற்றும் வான்வழியாக மேற்கொண்டிருந்தனர். பிரிகேடியர் ஜெயம் தலைமையிலான விசேட வேவுப்பிரிவு, சிறப்பு கரும்புலிகள் அணியாலும் தொல்லைகொடுக்கும் தாக்குதல்களை தொடுக்கப்பட்டிருந்தது. இதில் சிறிலங்காப்படையினருக்கு பேரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் என்ற இடங்களின் பெயர்கள் அக்காலத்தில் தான் பிரபலமாயிற்று. ஜெயசிக்குறு எதிர்ச்சமரில் அதிகளவு ஆயுத, ஆட்பலத்தினை அழித்த படைமுகாம்களாக தாண்டிக்குளம், கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் போன்றவையே. இந்தவெற்றிச்சண்டைகளின் பின்னால் இந்த சிறப்பு கரும்புலி அணிகளும் விசேடவேவுப் பிரிவும் தான் முக்கிய பங்கினை வகித்திருந்தது. இவ்வாறான கரும்புலி அணியில் இருந்தவரே லெப்.கேணல் பூட்டோ. சிறிலங்காப் படையினரின் ரோந்துகள், மின்வேலிகள் என உயர்பாதுகாப்பு வலயங்கள் என அத்தனை தடைகளையும் தாண்டி மணவாளன்பட்டமுறிப்பில் தரைஇறங்க முற்பட்ட உலங்குவானூர்தியை மிக கிட்டிய தூரத்தில் இருந்து தாக்கி அழித்திருந்தனர் லெப்.கேணல் பூட்டோவும் அவரது அணியும். தாக்குதலில் பின்னர் பாதுகாப்பாக தளம் திரும்பியிருந்த அணியில் இருந்த ஏனையவர்கள் பின்னர் வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவு அடைந்துவிட்டனர். லெப்.கேணல் பூட்டோ அவர்களும் 11.08.2006 அன்று வீரச்சாவு அடைந்துவிட்டார். Copy
2008 ஆம் ஆண்டு இவ்வாறான ஒரு நேரத்தில்தான் இரணைமடுக்குளம் உடைக்கப்படப் போகின்றது என்பதாக பேசிக்கொண்டிருந்தார்கள் கொஞ்ச நாளுக்கு முன்தான் ஊருக்குப் போய் தேங்காய்களை பிடுங்கிக்கொண்டுவந்தோம் அப்போது செஞ்சோலைக்கு முன் புலிகள் பாதுகாப்பு அரண்களை நிறுவியிருந்தார்கள் கொக்காவிலுக்கு ஆர்மி வந்தபோது இரணைமடுவில் பின் தளங்கள் இருந்தது அப்ப கூட கோழி ஆடு மாடுகளை சனம் பிடிக்க வந்து போனது சண்டை தொடங்கிட்டு இனிப்போகாதீங்கோ என புலிகள் தடுக்கும் வரை இரணைமடுக் குளத்துக்கு கீழாகவுள்ள பாதையால்தான் சனம் போய் வந்துகொண்டிருந்தது மக்கள் புலிகளை நம்பினார்கள் எங்கட பொடியல் விடமாட்டானுகள் என்ற நம்பிக்கை வசனம் சனத்தோட வாயில் இருந்து வரும்போது ஒரு உறுதியான நம்பிக்கை தெரியும் ஆனால் புலிகளின் திட்டங்களை காட்டிக்கொடுப்புகள் தகர்த்துக்கொண்டிருந்தன இரணைமடுவை பெரியதொரு தளமாகத்தான் புலிகள் பாதுகாத்துக்கொண்டிருந்தார்கள் ஆர்மி முன்னேறுவதை தடுத்துக்கொண்டிருந்தாலும் பெரும் சண்டையென இறுதியாக நடந்தது கொக்காவிலுக்கும் முருகண்டிக்கும் இடையில்தான் அந்தப் பகுதிக்குள் இராணுவத்தினரின் கவசவாகனங்களும் உயிர்களும் பறிபோயிருந்தது (இப்போது அந்தப் பகுதியில்தான் மிதிவெடி அகற்றுகிறார்கள்) இராணுவம் தடைகளை உடைத்து முன்னேறியவண்ணம் இருந்தது புலிகள் இரணைமடுவுக்கு சக்கைகளைக் கட்டியிருந்தார்கள் கூடவே கரும்புலிகளும் வெடிக்கும் நிலையில் தயாராக இருந்தார்கள் . இரணைமடுவை ஊடறுத்து இராணுவம் முன்னேறி வட்டக்கச்சியை நோக்கி நகர்ந்தது கிளிநொச்சியைக் கைப்பற்றி பன்னங்கண்டியில் பெரும் மோதலோடு இராணுவம் முன்னேறியது மக்கள் தர்மபுரம் விசுவமடு தேராவில் சுதந்திரபுரம் என பின்னுக்கு போய்க்கொண்டே இருந்தார்கள் அப்பதான் குளத்தை உடைத்தால் ஆயிரக்கணக்கான இராணுவம் கொல்லப்படும் கூடவே அவர்களது இராணுவ தளபாடங்கள் ஆயுதங்கள் மீட்கப்படும் என்ற கருத்தை மேலுள்ள தளபதிகளுக்கு இடையில் உள்ள தளபதிகள் கூறினார்கள் தளபதிகளும் அதைச் சரியென ஏற்றுக்கொண்டார்கள் அதற்கான வேவு நடவடிக்கைகளில் வேவுப் புலிகள் இறங்கினார்கள் அதற்கு முன் தலைவருக்கு இந்த முடிவை அறிவித்தார்கள் தலைவர் சொன்னார் மக்களின் சொத்தை அழித்து ஒரு போராட்டத்தைச் செய்யவேண்டிய தேவை எமக்கில்லை அதை விட எங்களது தோட்டாக்கள் எதிரியின் நெஞ்சில் பாய்ந்து எதிரி இறக்க வேண்டுமே தவிர தண்ணீரால் மூழ்கடித்து எதிரியைக்கொன்றோம் என்ற பெயர் எமக்கு வேண்டாம் நாம் அறத்தோடு போரிடுவோம் ஒரு வேளை நாம் எமது போராட்டம் இல்லாமல் போகலாம் ஆனால் புலிகள் அறத்தோடு போராடினார்கள் வீழ்ந்தார்கள் என்பதை சொல்லிக்கொள்வார்கள் தயவு செய்து அந்த எண்ணத்தைக் கைவிடுங்கள் என்றார். புலிகள் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்கள் ஆனால் அதற்காகச் சென்ற கரும்புலிகளும் இன்னும் சில போராளிகளும் திரும்பி வரும்போது வீரச்சாவு அடைந்தார்கள் என்பது வரலாறு .
இரணைமடுகுளம் உடைக்கப்படப் போகின்றது என பரவலாக பேசியபோதும் நான் நம்பினேன் இரணைமடுக்குளம் அவ்வாறானதொரு நிலைக்குப் போகாது என்று இப்போது மீண்டும் கம்பீரமாக இருக்கிறது வந்து பாருங்கள்.
Of Heroes and Villains: Dutugemunu and Prabhakaran Ruben Thurairajah
Nov 27, 2025 | History
History in Sri Lanka has never been allowed to rest as history. It is not a settled archive of facts but a living force, retold as myth and scripture, invoked as justification, sung as lament and praise. Each generation is asked not to remember their country as it is now, but as it was once purified, once betrayed, once fought over. In that troubled memory, two men stand as mirrors to one another: King Dutugemunu of Anuradhapura, lion of the Sinhala chronicles, and Velupillai Prabhakaran, tiger of the Tamil cause. Separated by two thousand years, they nevertheless appear bound together, each shaping the island’s imagination of war and destiny. One fought to unite, the other to divide, but both lived as though the island’s future rested upon their own bodies, and both became symbols larger than their victories or defeats. To understand the paradox of Sri Lanka’s present; the island’s inability to move beyond its ethnic wounds; is to confront how Dutugemunu and Prabhakaran, hero and villain, saint and demon, continue to haunt its people. Ascetics of war The Mahavamsa, the 5th-century Buddhist chronicle, gives us Dutugemunu as a man possessed. Even as a young prince in the south of the island, he is restless, impatient with the small comforts of his father’s palace. He scorns pleasure, living as if his very flesh were pledged to a mission: to march north, to overthrow the Tamil ruler Elara, and to unite the island under Sinhala and Buddhist sovereignty. Prabhakaran, born in Valvettithurai, in the north of what was then Ceylon, in 1954, seemed cut from the same cloth. As a youth, he displayed the same single-minded devotion, but to a different end. He stripped life of distractions. He denied himself luxury, eschewed chemical highs, lived with the discipline of a soldier long before he commanded an army. Those who joined his movement came to know him as an austere, almost monastic figure. He demanded from his cadres what he practiced himself: the erasure of the personal in the service of his mission. Both men, then, were ascetics of war; figures who renounced the ordinary to become vessels of a singular project. In their self-abnegation, they acquired the aura of destiny. Enemy as destiny Dutugemunu’s great adversary, Elara, a South Indian Chola Tamil prince, seized Anuradhapura and ruled justly for more than forty years. The chronicle praises Elara as fair and noble. Yet his nobility counted for nothing. For the Buddhist monk authors of the Mahavamsa, Elara’s very presence in Anuradhapura was a violation, a sign that the cosmic order had been disturbed. He was an “other” who had to be expelled, not because he was unjust, but because he did not belong. Prabhakaran constructed the same “other,” but in reverse. For him, the Sinhala-dominated state was not simply oppressive but existentially alien. A Sinhala Buddhist war machine clothed in the language of the nation state denying Tamils their rightful place. The very presence of a Sinhala army in Jaffna, of Sinhala administrators in Tamil lands, was an usurpation of dignity. In both visions, the adversary became the destiny: the one against whom the entire people must be mobilised. The campaigns of Dutugemunu and Prabhakaran were not territorial wars in the narrow sense. They were crusades against existence itself, against an “other” whose presence was intolerable. Duel and embodiment The story of Dutugemunu culminates in the duel. Mounted on his war elephant, he rode out to meet Elara before the walls of Anuradhapura. The clash of armies was reduced to the clash of two men. The island’s fate was compressed into their combat, into the victory of one body over another. Prabhakaran, too, personalised the war. Though he commanded thousands, the Tamil struggle became synonymous with his own survival. For decades, his body; hidden in the jungles, emerging briefly in photographs and videos, was the battlefield itself. The state sought not simply to defeat the LTTE but to kill him, to extinguish the struggle by extinguishing the man. His death in the Nandikadal lagoon in May 2009 was staged as the ultimate duel: the body of the rebel captured, stripped of mystery, displayed as proof that the state had prevailed. In both cases, war was not abstract. It was incarnated in the body of a single figure, whose life and death seemed to embody the destiny of a people. Priests and consolations On his deathbed, Dutugemunu was troubled. He had killed too many; his conscience was heavy. The Sangha soothed him: “Do not be troubled, O great king. None of those slain were true believers. Their lives were of no spiritual consequence.” With this absolution, violence was transfigured into virtue. Dutugemunu became not a mere warrior but a saviour. Prabhakaran’s absolution came differently. There were no monks to sanctify him, but there were his believers, the poets, the mourners. In their songs and laments, his image was purified. He became not a failed leader but a martyr, a man who refused compromise, who carried his people’s dream to the very end. Even in defeat, he was imagined as incorruptible. In both cases, interpreters were needed to convert carnage into meaning, to assure the community that the killing was not sin but sacrifice. The priests, whether monks or mourners, completed the transformation of the warrior into the saint. Legacy as prison Dutugemunu’s victory became the touchstone of Sinhala nationalism. From the time of the Kandyan kings during European colonialism through the speeches of modern politicians, to the naming of a Sri Lankan army regiment in 1962, he has been invoked as the archetype of the righteous conqueror. In moments of ethnic tension, he is recalled as proof that the Sinhala people have always prevailed, always restoring the island to its “true” order. Prabhakaran’s death, though officially cast as the end of terrorism, has not erased his presence. In Tamil homes in both Sri Lanka and abroad, in ceremonies in Jaffna, Toronto, London, Paris, and elsewhere he remains vivid. Songs are sung, murals painted, stories told to children. He represents both tragedy and pride. Thus both men are imprisoned in memory, and their imprisonment extends to the island itself. Neither can be forgotten, and neither can be reconciled with the other. Dutugemunu and Prabhakaran become permanent archetypes: the Sinhala child taught to venerate one and abhor the other, the Tamil child taught to mourn one and fear the other. Each community carries its own warrior, its own martyr, as a badge of identity. Irony of symmetry The irony is stark. These two men, hailed as opposites, in truth mirror one another. Both renounced comfort. Both demanded total obedience. Both imagined the island’s destiny as flowing through their veins. Both waged wars of annihilation. Both required others to sanctify their killings. Both became myths after death. And both became, in the eyes of the other community, the incarnation of fear. To the Sinhalese, Prabhakaran is Dutugemunu’s ancient enemy reborn, another Indian Elara to be vanquished. To the Tamils, Dutugemunu is Prabhakaran’s eternal adversary, the first in a line of conquerors who claimed the island as exclusively theirs. This symmetry reveals the trap: the two figures are not merely historical but archetypal, destined to be replayed endlessly in memory, each side haunted by the other’s hero. Country of shadows In wounded societies, people live among shadows: of ancestors, of myths, of remembered injuries, of unhealed scars. Sri Lanka today lives in the shadows of Dutugemunu and Prabhakaran. The island proclaims reconciliation, speaks of development and tourism, of highways and investment zones, of digitalisation and artificial intelligence. Yet beneath the rhetoric is the duel, replayed in imagination: lion and tiger, each endlessly circling the other. The irony is that Sri Lanka, which has endured centuries of conquest and colonisation, is now captive to its own mythic warriors. It cannot release them. It cannot allow Dutugemunu to fade into antiquity, nor Prabhakaran to remain a tragic memory. Instead, they are recycled in speeches, murals, songs, films. They are invoked whenever their community feels insecure, whenever history seems on the verge of regurgitating itself. The country thus becomes a land where history is not past but perpetual present, where the duel of king and rebel is never settled but rehearsed again and again, each side finding in the other’s hero the proof of its own grievance. Suspended future Sri Lanka is trapped not simply by politics but by imagination. To break free would mean to see Dutugemunu and Prabhakaran not as archetypes but as men: products of their times, driven by ambitions and fears, neither saints nor demons. It would mean learning to narrate the past without monks and without political myth-making, to accept that victory was costly, that defeat was tragic, that neither side was destined by gods or history to prevail or perish. A more honest path forward would admit that neither Dutugemunu nor Prabhakaran can be anchors for a modern state. To move on would require a narrative that honours suffering without inheriting hatred. But the island still clings to its heroes, as though abandoning them would leave it unmoored. Thus, Sri Lanka stumbles, clouded in fables
The Tamil nation honors its fallen and reaffirms its unbroken struggle Washington D.C.; November 27, 2025 — Today, Eelam Tamils across the Tamil homeland in the North-East of Sri Lanka and the global diaspora come together to observe Maaveerar Naal (Great Heroes’ Day). This day marks the death of Lt. Shankar, the first Liberation Tigers of Tamil Eelam (L TTE) cadre to fall in battle, and commemorates those who sacrificed their lives for liberation from Sinhala-Buddhist state oppression. Despite decades of state harassment, intimidation, and legal attempts to ban public commemorations, Tamils continue to gather in collective memory and aspiration. The unchecked force of Sinhala-Buddhist majoritarianism—the ideology that enabled systematic oppression of Tamils on the island—resulted in the Tamil struggle and eventually led to the Tamil genocide. At the core of Sinhala-Buddhist majoritarianism is the denial of Tamil nationhood, which fundamentally shapes the lived experience of Tamils. The current NPP/JVP government, like the ones before it, continues to enable these conditions and uphold a deep-rooted culture of impunity, with not a single Sri Lankan perpetrator held accountable for the Tamil genocide or for the countless Tamils killed, disappeared, or tortured by the state. The government has shown itself to be committed and competent in pursuing underworld criminals, but has treated Tamil demands for accountability with contempt and disdain. Militarization persists across the North-East, and land where L TTE cemeteries once stood remains under army occupation, restricting Tamil memorialization efforts. Meanwhile, the military runs farms, businesses, camps, and even tourist sites across the Tamil homeland. Sinhalization and Buddhisization continue openly, and rights activists and journalists who raise awareness on issues of justice, accountability or self-determination are heavily harassed and intimidated by security forces. The government downplays ongoing human rights abuses in the North-East and distorts the reality of the Tamil people. Its refusal to recognize the Tamil genocide or support meaningful justice shows that the significant issues that gave rise to the armed conflict remain unresolved. The sacrifices of those who fought for self-determination continue to resonate in the struggles of today, as Tamils in the homeland and the diaspora work tirelessly to reaffirm their nationhood and demand recognition of the atrocities committed against their people. The government’s ongoing denial of justice and human rights abuses on the island underscore that the struggle for liberation and accountability remains as urgent as ever, and the legacy of the Tamil liberation struggle continues to inspire action and advocacy across the diaspora and the homeland. Maaveerar Naal remains a potent symbol of Tamil nationhood and resistance, a bulwark against Sinhala-Buddhist majoritarianism. The struggle for Tamil self-determination, rooted in the aspirations of the people, transcends political parties and electoral cycles. Every year, as red and yellow flags rise across the Tamil homeland and the diaspora, the Eelam Tamil people honor their fallen and reaffirm their unwavering demand for justice, accountability, and the inalienable rights of the Eelam Tamil nation, including their right to self-determination.
புலனாய்வுத்துறையின் வெளியகப் புலனாய் நடவடிக்கையின் சிறந்த தளபதி கேணல் துரோணர்.
"தாயக விடுதலைக்காய் தன்னையே மறைத்து எதிரியின் சாம்ராஜ்யத்தில் சாதனைகள் பல படைத்து விடுதலை அமைப்பின் நகர்வுக்கு வித்திட்ட போராளி"
புலனாய்வுக் கட்டமைப்பே ஒரு இராணுவ அமைப்பை சீராக வழிநடத்த ஊன்றுகோலான ஒன்றாகும். போராட்டத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே புலனாய்வு சம்பந்தமான துறையில் இணைந்து விடுதலைப் பணியாற்றிய தளபதி துரோணர். இவரின் பணியில் விடுதலை தீ வீச்சாக தென்பட்டது. காலம் உருண்டோட பொறுப்பாளர்களின் அதி நம்பிக்கைக்குரியவனாக திகழ்ந்தான்.
விடுதலையை வேண்டி போராடும் ஒரு இராணுவ அமைப்பு கட்டுக் கோப்பாக சீர்குலைவின்றி வளர புலனாய்வுத் துறையே முக்கியம் என்பதை உணர்ந்து செயலாற்றியவர்.புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதிகளின் வீரச்சாவின் பின் அந்த வெற்றிடங்களை இவரே பொறுப்பெடுத்து செயலாற்றினார். இவரின் செயல் திறன் தலைமையின் கவனத்தை ஈர்த்தது. பல செயற்பாடுகளில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் பாராட்டைப் பெற்றவர்.
அமைப்பின் தலைமை இவரின் புலனாய்வு ஆளுமையை உணர்ந்து இவருக்கு சிறந்த ஒரு புலனாய்வு அணியை வழிநடத்தும் பொறுப்பைக் கையளித்தது. தனது பொறுப்பை சரிவரச் செய்து தன் விடுதலைப் பணியில் சிறந்து விளங்கினார். கடமை தவறும் போராளிகளை சரியாகத் தண்டித்து பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தி சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார். போராளிகளோடு மிகவும் அன்பாகப் பழகுவார்.பாராபட்சம் பாராது தனக்கு கீழ் இருக்கும் போராளிகளை வழிநடத்திய சிறந்த தளபதி.
இவரின் விடுதலைப் பணியான புலனாய்வுத்துறையின் அவசியம் எவ்வளவோ அதே நேரம் ஆபத்தும் அதிகம். எதிரியின் கட்டுப்பாட்டு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த நடவடிக்கையின் சாதனையாளர். மக்களோடு மக்களாய் அன்பாகப் பழகி அவர்களை பயன்படுத்தியே பல சரித்திரங்கள் படைத்தவர்.
தன் போராளிகளை சந்திக்கும் நேரங்களில் தலைவரின் கரத்தை நாங்கள் தான் பலப்படுத்தோணும்.அவர் எவ்வளவு செய்யிறது,எத்தனை என்று கவனிக்கிறது.அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை எங்கட உயிர பணயம் வைத்தாவது செய்து குடுப்பம். என்று தான் அடிக்கடி கதைப்பாராம். ஆடம்பரத்தை முற்றாக புறந்தள்ளி வாழ்ந்த தளபதி.
தமிழீழத்தின் வெளி புலனாய்வு நடவடிக்கைகளின் பல வெற்றிகளின் வேராகவும் செயற்பட்டவர். இவரின் சாதனைகள் பற்றி பலருக்கு தெரியாது. இருந்தாலும்.அந்த சாதனை வீரனைப்பற்றி குறிப்பிட்டவர்களுக்கு நன்கு தெரியும்.
இவரின் விடுதலைப் பணியின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட ஒரு சம்பவம் நினைவில் குறிப்பிடுகிறேன் ஒரு இறுக்கமான காலகட்டத்தில் இலங்கையின் தலைநகரில் ஒரு நடவடிக்கைக்கான புலனாய்வு அணி நகர்த்தப்பட்டது.எந்த நேரமும் ஆபத்தும் அதிஉயர் பாதுகாப்புக்களை உடைத்து இவரின் திறமையால் அந்த அணி குறிப்பிட்ட இடத்தை அடைந்தது. எதிர்பாராத விதமாக அந்த அணியின் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டார். உடனே அந்த நடவடிக்கைக்கான காலத்தை நீடித்து அந்த அணிக்கு வரப்போகும் ஆபத்தான சூழலை உணர்ந்து அணியை தளத்தை நோக்கி நகர்த்தி பின்பு குறிப்பிட்ட காலஓட்டத்தின் பின் அந்த நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.நிலமைகளை உணர்ந்து கண்ணும் கருத்துமாக செயற்பட்டவர்.
இவரின் சாதனைகளை எளிதில் விபரித்து சரித்திரம் எழுதிவிட முடியாது.எதிரி அவிழ்க்க முடியாத பல விசித்திரமான வேட்டைக்காரன் இவன்.
தமிழீழத் தேசியத்தலைவர் மனதிலும், மக்களிடத்திலும், போராளிகளிடத்திலும் தனி இடத்தை பிடித்த ஓர் தளபதி. மாற்று இன மக்கள் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் சாதனைகளையும், வீரத்தையும், தியாகத்தையும் அறிந்தவர்களால் நிச்சியமாக இவரை ஒரு சாதரண வீரனாகப் பார்க்க முடியாது. இவரின் செயல்கள் ஒவ்வொன்றும் வியப்பையே அளிக்கும். கடமை நேரத்தில் மிக மிக கண்டிப்புடன் இருப்பார். கடமை தவறும் போராளிகளோடு கோபம் கொண்டு சில மணி நேரங்களின் பின் அவர்களை அழைத்து ஆற்றுப்படுத்துவார்.இவரின் வீரச்சாவு உயிரை எம்மிடமிருந்து பிரித்ததே தவிர விடுதலை உணர்வை வீச்சாக்கியுள்ளது.
விடுதலைப் போராட்டப் பாதையில் இவரின் சாதனைகள் வெளிச் சொல்ல முடியாத பொக்கிஷங்கள். பெயர் புகழை மறந்து எந்த நேரமும் பேராபத்தை எதிர்கொள்ள தாயாராக செயற்பட்ட உன்னத வீரன். எதிரிகள் விடைகண்டு பிடிக்க முடியாத பல கேள்விகளின் உரிமையாளன்.
13.02.2009 அன்று சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சுக்கு இலக்காகி தமிழ்த்தாய் மடியில் வீரகாவியமானார். தாயக விடுதலையை கனவாய் நெஞ்சமதில் சுமந்து தமிழ் மக்களின் மண்,உரிமைகளை மீட்டெடுக்கும் எம் புனிதப் போரிலே கேணல் துரோணரோடு வீரகாவியமான ஏனைய அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவுகூர்ந்து பூசித்து வணங்கி இவர்களின் உயரிய உன்னத இலட்சியத்தை மனதில் நிறுத்தி விடுதலை வேண்டி வீறுநடை போடுவோமாக...
கந்தகப் பொடியை கழுத்தில் சுமந்து கொண்டு கொள்கையில் குறியாய் நின்று தன்னினத்தின் விடுதலைக்காய் இன்னுயிரை ஈந்தவர் மாதம் இது.... எங்கள் தேவதைகள் வாழ்த்த தேசம்.❤💛
முடிந்தால் படியுங்கள்👇 நான் அகவணக்கம் செலுத்திக்கொண்டு இருந்தேன் அப்போது ஒருவர் வந்தார் தம்பி அந்த போட்டோவில் இருக்கும் பெடியனை தெரியுமா என்று கேட்டார் அதற்கு நான் இதில் படுகொலை செய்யப்பட்ட ஒருவர் என்று கூறினேன் அதற்கு அவர் ஓம் படுகொலை செய்தார்கள் ஆனால் அதை அப்படி கூறிவிட முடியாது.
எனது பெரியம்மாவையும் எனது தங்கையையும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொன்றார்கள் பின்பு இந்த சிறுவனை உயிரோடு ஒற்றைகாலை வாய்க்கால் கானுக்குல் புதைத்துக்கொண்டு மற்றய காலை இழுத்து பிழந்து உடல்களை இரண்டாக பிரித்து கொலை செய்தார்கள் என்றார்.
நாங்கள் படுகொலை என்று சாதாரணமாக கடந்து போகமுடியாது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி செய்யப்பட்ட பின்னர் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அமைதிப்படை என்ற போர்வையில் வந்த இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் அதிகமான பொது மக்களைக் கொலை செய்த நினைவு நாள் இன்று
அமைதி காக்கும் படை என்ற முகமூடியுடன் வந்த பாரத தேசத்தை கைகூப்பி தோரணம் கட்டி வரவேற்ற அதே மக்களை இந்திய இலங்கை இராணுவம் சேர்ந்து நடுவீதியிலும் இரயில் தண்டவாளத்திலும் படுக்க வைத்து உயிருடன் கவச வாகனங்களால் ஏற்றி கொலை செய்தது வீதியால் சென்றவர்களை மறித்து சுட்டும் அடித்தும் கொடூரமாக கொலை செய்தது.
தேசிய தலைவர் கூறியது படி இந்திய இராணுவம் ஈழத்தில் காலடி வைத்ததுதான் மிகப்பெரிய அவலங்களை எமது மக்கள் சந்தித்தார்கள் என்று.
இன்று ஸ்ரீலங்கா இந்திய கூட்டுப்படையால் வன்புணர்வு செய்யப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட எமது மக்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
இழந்த வரலாறுகளை எமது சந்ததியிற்கு சொல்லிக்கொடுங்கள் இல்லை என்றால் அனைத்தையும் மறந்துவிட்டு அவர்களும் சிங்களவனை தலைவனாக கொண்டாடுவார்கள்.
வரலாற்றை படியுங்கள் வரலாற்றை படையுங்கள் வராற்றை மறந்த இனம் வாழாது வரலாறே எங்கள் வழிகாட்டி.
#கொக்குவில்_பிரம்படி_படுகொலை 11-10-1987 ஒப்பரேசன் பவான் இராணுவ நடவடிக்கையில் தோல்வி கண்ட இந்திய இராணுவம் இறுதியில் பிரபா அவரின் இடத்தில் இல்லை என்பதையும் அறிந்து கொண்டது,
வரலாற்று தோல்வியில் அவமானத்தை தாங்க முடியாத இந்தியா தனது கொடூர வெறியை அப்பாவி பொதுமக்கள் மீது காட்டியது,
முற்றுகைக்கு உள்ளாகி முழிபிதுங்கி நின்ற இந்திய இராணுவம் தமக்கு பரிச்சாத்தியம் இல்லாத இடத்தில் யாரை தேடி சென்றார்களோ அவரை முன் பின் அறியாத நிலையில், தமது இராணுவ தாக்குதல் இலக்குகள் அகப்பட்ட அப்பாவி தமிழ் பொது மக்களை ஈவிரக்கம் இன்றி சுட்டு கொன்றார்கள்,
திணறிக்கொண்டு இருந்த அதிரடிப்படையினருக்கு உதவியாக ஏவப்பட்ட மோட்டார் பீரங்கி எறிகணைகளும் பொது மக்கள் பலரையும் பலி எடுத்தது,
அருகே இருந்த யாழ் கோட்டையில் இருந்து புறப்பட்ட கனரக டாங்கி வண்டிகள் வழியில் நின்ற பொது மக்களை புல்லை நெரிப்பது போல நெரித்து அரைத்து சென்றன.
இந்திய படைகள் இரத்த வெறியாடி அகன்று சென்ற பின் வீதி வீதியாக பிய்ந்த உடலங்களும் துப்பாக்கி ரவைகளால் கண்மூடிதனமாக கொல்லப்பட்ட சடலங்களும் வீதி நெடுகளும் கிடந்தன,
போராளிகளிடம் தோல்வியடைந்த இந்திய வல்லாதிக்கப்படை தனது கண்மூடிதனமான கொடூர தாக்குதலால் சில மணி நேரத்தில் கொக்குவில் பிரம்படி சந்த பகுதியில் 40 மேற்பட்ட சிறுவர்கள் பெண்கள் உட்பட அப்பாவி தமிழ் பொது மக்கள் 40 மேற்பட்டோர் இந்திய படையால் படு கொ லை செய்யப்பட்டார்கள்.
மேலும் தோல்வி கண்ட இந்திய இராணுவம் அப்பாவி தமிழ் பெண்களை எப்படி வேட்டையாடியது என அடுத்த பதிவில் .......
வரலாற்றை படியுங்கள் வரலாற்றை படையுங்கள் வரலாற்றை மறந்த இனம் வாழாது வரலாறே எங்கள் வழிகாட்டி. Copy
⚡️ படம் 2👇 கீழே உள்ள முன்னாள் இந்திய இராணுவ நபர், 13வது சீக்கிய Light காலாட்படையைச் சேர்ந்த நாயக் குரா சிங் ஆவார். இவர் தனது தோழர்களின் நினைவைத் தாங்கிய செய்தித்தாளைக் காட்டுகிறார். 11.10.1987 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உலங்குவானூர்தியில் இறக்கிவிடப்பட்ட மேஜர் பிரேந்திர சிங் தலைமையிலான 13வது சீக்கிய Light காலாட்படையைச் சேர்ந்த 30 நபர்களில் இவர் மட்டுமே உயிர் பிழைத்தவர்
இதன்படி; படி 1987 ஆம் ஆண்டு எமது தேசியத்தலைவரைப் பிடிக்கவென யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் உலங்குவானூர்தியில் இருந்து இறக்கப்பட்ட 30 பேரில் இவர் ஒருவரே இன்றும் வாழ்கிறார். அப்படியானால் இவன் தான் இன்பராஜா , திருபாகரன் உட்பட பல பல்கலைக்கழக மாணவர்களையும் பொது மக்களையும் பிரம்படி ஒழுங்கை வீடுகளில் கத்தியால் குத்தியும் கழுத்தறுத்தும் கொ*** *ன்றவன். 😡 (அப்போதைய செய்தியின்படி ஐந்து பேரளவில் உயிர் தப்பி பின்பு சுன்னாகத்தில் இருந்து தண்டவாளத்தில் ஓடி வந்த tank ஒன்றால் மீட்கப்பட்டனர்.) ---------- தகவல்: கிருபாவின் நண்பரான மனோ.
single reel
01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட வரலாற்று...
தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும்.
இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் இருந்தனர்.
1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான சிங்களமக்களை குடியேற்றுவதற்கான முயற்சிகளில் இம்முகாம் படையினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
இத்தகவல்களை மணலாற்று வேவு அணிகள் அப்போது மணலாறு மாவட்டத் தளபதியாக இருந்த லெப்.கேணல் அன்பு அவர்களிடம் கொடுத்தனர்.
வேவுத்தரவுகளை தீவிரமாக ஆராய்ந்த தளபதி அன்பு அவர்களும் தளபதி மேஐர். வீமன் அவர்களும்
நிலமையின் விபரீதத்தை உணர்ந்து இம்முகாமை தாக்கி அழிக்கவேண்டும்.
எனமுடிவெடுத்து தலைவர் அவர்களிடம் இத்தகவல்கள் அனைத்தையும் தெரிவித்தனர்.
தலைவர் அவர்கள் அனைத்துத் தகவல்களையும் கேட்டறிந்தார்.
அதன் சாதகபாதக நிலைகளையும் எவ்வாறு தாக்குதல் நடாத்தவேண்டும் எனவும் அத்தாக்குதலின்போது சிங்களப் பொதுமக்களுக்குச் சிறுசேதமும் ஏற்படக்கூடாதென உறுதியாக தலைவர் அவர்கள் தளபதிக்கு கூறினார்.
இம்முகாம் கட்டாயம் அழிக்கப்படவேண்டும் எனக் கூறியதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி தளபதிகளை வழியனுப்பிவைத்தார்.
தலைவர் அவர்கள் கொடுத்த ஆலோசனைகளுக்கமைவாகவும் தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடும்பயிற்சி இலகுவான சண்டை என்றதன் அடிப்படையில் வேவுநடவடிக்கைகளில்
பெறப்பட்ட தகவல்களுக்கேற்ப தாக்குதலுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டன.
தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு மேஐர் செங்கோல் அவர்கள் தலைமையிலான போராளிகளால் முறையே நிசாம் வெட்டை மற்றும் ஜீவன் ஆகிய முகாம்களில் பயிற்சிகள் நடைபெற்றன.
பயிற்சிகள் முடிவடைந்து தாக்குதற் திட்டம் தளபதி அன்பு அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டதுடன் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளையும் அன்பு அவர்கள் தெளிவாகக் கூறினார்.
தாக்குதலுக்கான இருநூறுபேர் கொண்ட அணிகள் தாயர்படுத்தப்பட்டன.
இவ்வணிகள் கொக்குத்தொடுவாயிலிருந்து படகுகளில் சென்று கொக்கிளாய் கடல்நீரேரியைக்கடந்து தரையிறங்கி அங்கிருந்து நடந்துசென்று 01.11.1990 அன்று அதிகாலை ஒரு மணிவரை முந்திரிகைக்குள முகாமருகில் காத்திருந்து.
அதிகாலை ஒருமணியளவில் மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிங்களப்படையின் முகாம் மீது ஒரு வெற்றிகர அதிரடித்தாக்குதலைத் தொடுத்து வெற்றிகொண்டனர்.
குறிப்பிட்ட சிலநிமிடத்தில் முகாம் புலிகளின்
பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது.
தொடர்ந்து அந்தமுகாமை தக்கவைத்திருந்த போராளிகள் படைமுகாமை முற்றுமுழுதாக அழித்தொழித்துவிட்டு கைப்பற்றிய ஆயுதங்களுடன் தளம் திரும்பினார்கள்.
இதன் பின்னும் இதனை அண்டியபகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் விடுதலைப்புலிகளால் படையினர் மீதுமேற்கொள்ளப்பட்டதால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.
இவ்வாறுதான் எம் தாயக பகுதி மீதான சிங்களத்தின் ஆக்கிரமிப்பு ஆசைகள் முறியடிக்கப்பட்டு வந்தன.
இவ்வெற்றிகர அதிரடித் தாக்குதல்களுக்கான வேவுத்தகவல்களை மேஐர் .ரம்போ கப்டன்.விமல்ராஜ் தலைமையிலான போராளிகளால் சொல்லமுடியாத அர்ப்பணிப்புக்களுடன் சிறுகச்சிறுகச் சேகரித்துக்கொடுத்தனர்.
படைமுகாமின் தாக்ககுதல்களை களத்தில் நின்று மேஐர்.சங்கர் அவர்கள் வழிநடாத்த களமருத்துவத்தை கப்டன் இளங்கோ அவர்கள் தலைமையிலான போராளிகள் செவ்வனவே செய்தனர்.
இவ் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து முல்லை மணலாறு மாவட்டத் தளபதி அன்பு அவர்கள் வழி நடத்தினார்.
(1991ம் ஆண்டு முற்பகுதியின் பின்னர் தான் இயக்கத்தின் வளர்ச்சியும் அதன் நிர்வாக கட்டமைப்புக்காகவுமாக ஒருமாவட்டத்தில் சிறப்புத்தளபதி, தளபதி, துணைத்தளபதி எனும் கட்டமைப்பு பரிணாம வளர்ச்சி அடைந்தது.)
இவ்வெற்றிகரத் தாக்குதலை களத்தில் நின்று
வழிநடாத்திய..
மேஐர் .சங்கர்.அவர்களுடன்
2ம் லெப்ரினன்.மதுவன்.
வீரவேங்கை .முசோலினி .
ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
நீண்டகாலமாக 2ம் லெப்.மதுவனைப் பார்க்காத பெற்றோர் மதுவனைப் பார்பதற்காக மணலாற்று முகாமிற்க்கு
வந்திருந்தனர்.
ஆனால் அவ்வெற்றிச்சமரில் வீரச்சாவடைந்த மகனின் வித்துடலுடனே மதுவனின் பெற்றோர் வீடுதிரும்பினர்.
இப்படியான பல்வேறு அர்பணிப்புக்கள் தியாகங்கள் நிறைந்த போராட்டமாக தமிழீழவிடுதலைப் போராட்டம் திகழ்கிறது.
கிட்டத்தட்ட முப்பதான்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவமானது அன்று இக்களமுனையில் நின்றவர்களால் மறக்கமுடியாத பெரும் சோக நிகழ்வாக இன்றும் அப்போராளிகளால் நினைவுகூரப்படுகிறது.
அக்களமுனையில் நின்று இன்று புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் உள்ளத்திலிருந்து......
Copy
4 days ago | [YT] | 1
View 0 replies
single reel
ஒரு தம்பி சில மாதங்களுக்கு முன்பு எழுதிய இந்தப் பதிவை ஒரு கருத்தரங்கிற்காகக் கேட்டிருந்தார்.
புதிய உறவுகளுக்காகவும், ஜேவிபி இன வாத அலையின் பின் அள்ளுண்டு போகும் தற்குறித் தமிழர்களை எச்சரிக்கவும் இந்த மீள் பதிவு.
🟥 தமிழீழத்திலும் ஒரு 'Harki'குழுமம் உருவாகிறதா?
பிள்ளையான் மழைக்குக் கூடப் பள்ளிக்கூடம் ஒதுங்காத ஆள். (அது தவறில்லை - குடும்பச் சூழல் அதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்திருக்கலாம். ) ஆனால் பிரான்சில் வசிக்கும் இன அழிப்பு அரச ஒத்தோடியும் ஒட்டுக் குழு உறுப்பினருமான ஞானம் ஸ்டாலின் என்பவர் தனது வாந்திகளை எழுதிக் கொடுக்க அதைப் பிள்ளையான் இரண்டு புத்தகங்களாக தனது பெயரில் வெளியிட்டிருக்கிறார். இந்த ஞானம் ஸ்டாலின் பிள்ளையானின் மதி'கெட்ட'யுரைஞர்களில் முதன்மையானவர்.
இப்ப பிரச்சினை அதுவல்ல.
இந்த மதி கெட்ட உரைஞர் பிரான்சில் வாழ்வதால் பிள்ளையானுக்குப் படிப்பறிவு இல்லாததால் பிரான்சில் ''Harki' என்று ஒரு அல்ஜீரிய தொகுதி மக்கள் இருக்கிறார்கள், அவர்கள் பிரெஞ்சு அரசுடன் சேர்ந்து சொந்த இனத்திற்குத் துரோகம் செய்ததால் அல்ஜீரிய மக்கள் கைவிட்டது மட்டுமல்ல பிரெஞ்சு அரசே அவர்களைக் கைவிட்டு பிரான்ஸ் வீதிகளில் பிச்சை எடுக்கிறார்கள் என்ற கதையைச் சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் அவர் சொல்லவில்லை - பிள்ளையானும் கேட்டறியவில்லை. அவ்வளவு ஏன் தற்போது மூளை வீங்கின படித்த ஒரு முட்டாள் கூட்டமும் ஜேவிபி அரச ஒத்தோடிகளாக மாறி சொந்த இனத்திற்குத் துரோகம் செய்யப் புகுந்தவர்களும் இதை வரலாற்றிலிருந்து அறியவில்லை.
Harki பற்றித் தெரிந்த ஒருவன் கனவில் கூட சொந்த இனத்திற்குத் துரோகம் இழைக்க மாட்டான். சும்மா அள்ளு விடும் வரலாறு அது. ஈரல் குலை நடுங்கும்.
யார் இந்த கார்கிகள்?
அல்ஜீரியாவை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சு அரசுக்கு எதிராக அல்ஜீரிய தேசம் போர்க்கோலம் பூண்டிருந்த காலம் அது. சுதந்திரம் இல்லையேல் வீரமரணம் என்பதே அப்போதைய ஒவ்வொரு அல்ஜீரியக் குடிமகனதும் உச்சரிப்பாக இருந்தது.
எமக்குள் சிங்களம் ஆட்களை விலைக்கு வேண்டிய வரலாறு போல் பிரெஞ்சு அரசும் அல்ஜீரியர்களில் ஒரு தொகுதியினரைப் பிரித்து எடுத்து ஆயுதங்கள் கொடுத்து ஒட்டுக் குழுக்களாக மாற்றி சொந்த மக்கள் மீதே திருப்பி விட்டார்கள்.
அல்ஜீரியப் போராளிகளுக்கும் மக்களுக்கும் அதிர்ச்சி - இதனால் பெரும் பின்னடைவு.
அல்ஜீரிய மக்களும், போராளிகளும் கார்கிகளை - இயக்கம் (அரபு மொழியில் இயக்கம் என்றே அர்த்தம்) வேண்டாம் வெளியேறுங்கள் என்று ஓயாது கத்திக் கூப்பாடு போட்டார்கள் (தற்போது நாம் ஜேவிபியை ஆதரிக்க வேண்டாம் என்று ஒப்பாரி வைப்பது போன்று)
ஆனால் கார்கிகள் கேட்டபாடில்லை. சொந்த மக்களையே பிரெஞ்சு படைகளுடன் சேர்ந்து கொத்துக் கொத்தாகக் கொன்றொழித்தார்கள்.
கார்கிகளைக் கொண்டே தற்போது ஜேவிபி செய்வது போல் நிர்வாகக் கட்டமைப்பையும் உருவாக்கியது பிரெஞ்சு அரசு. அல்ஜீரிய விடுதலை பெரும் தேக்கத்தைச் சந்தித்தது.
ஆனால் வரலாறு ஒரு போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை - அது நேர்கோட்டில் பயணிப்பதும் இல்லை.
1962 இல் பிரான்ஸ் அல்ஜீரியாவை விட்டு வெளியேற வேண்டிய சூழல் உருவானது. 1962 யூலை ஐந்தாம் திகதி சுதந்திர தேசமாகியது அல்ஜீரியா.
பிரான்ஸ் அரசுடன் ஆயிரத்தெட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட அல்ஜீரியா கார்கிகள் விடயத்தில் மட்டும் எந்த விட்டுக்கொடுப்புமில்லாமல் கறாராக நின்றது.
பிரான்ஸ் அரசும் கார்கிகளைக் கைவிட்டு வாயை மூடிக் கொண்டது.
ஒப்பந்தப்படி ஒரு பக்கம் பிரெஞ்சுப் படைகள் வெளியேறிக் கொண்டிருக்க மறுபக்கம் போராளிகளும் அல்ஜீரிய மக்களும் கார்க்கிகளைத் தேடித் தேடி வேட்டையாடினார்கள். பெண்கள், குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல் குடும்பம் குடும்பமாகக் கார்கிகளைக் கொன்று குவித்து வீதி முழுவதும் பிணக்காடாகியது.
தமது விடுதலையைத் தாமதப்படுத்தி தமக்குத் துரோகம் இழைத்த கார்கிகளை மன்னிக்க அல்ஜீரிய தேசம் தயாராக இல்லை.
தம்மைக் காப்பாற்றுமாறு வெளியேறிக் கொண்டிருந்த பிரெஞ்சு படைகளின் கால்களில் விழுந்து கதறினார்கள் கார்கிகள்.
வெளியேறும் லொறிகளின், விமானங்களின், கப்பல்களின் பின்னால் கார்கிகள் ஏற முயன்ற போது பிரெஞ்சுப் படைகள் அவர்களை அடித்தும் சுட்டும் விரட்டினார்கள். ஏனென்றால் பிரான்ஸ் அரசு ஒரு கார்கியைக் கூட பிரெஞ்சுப் படைகள் பிரான்சுக்கு அழைத்து வரக் கூடாதென்று கடுமையாக உத்தரவிட்டிருந்தது.
கார்கிகள் கனவில் கூடத் தமக்கு இப்படி ஒரு நிலை வரும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பிரெஞ்சுப் படைகள் கண் முன்னேயே கார்கிகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட இது ஒரு கட்டத்தில் பிரான்ஸ் அரசுக்கு நெருக்கடியாக மாறியது.
வேண்டா வெறுப்பாக கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சிய கார்கிகளை பிரான்ஸ் தனது நாட்டுக்குக் கொண்டு வந்தது.
இதற்கு பிறகு நடந்துதான் பெரும் கொடுமை. கார்க்கிகள் எந்த வசதியுமின்றி காடுகளுக்குள்ளும், நிலக்கரி சுரங்கங்களுக்குள்ளும் தனித்து விடப்பட்டார்கள்.
எந்த வதிவிடப் பத்திரமும் கிடையாது. பணி செய்ய அனுமதியில்லை. கிட்டத்தட்ட திறந்தவெளிச் சிறைச்சாலை. அல்ஜீரிய மக்களுக்கு நிகராக பிரான்ஸ் அரசும் பிரெஞ்சு மக்களும் கார்கிகளை வெறுத்தார்கள். துரோகத்தின் பரிசை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்தார்கள் கார்கிகள்.
சொன்னால் நம்ப மாட்டீர்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணம் வரை அவர்கள் நாடற்றவர்கள்தான். இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு வதிவிட உரிமை கொடுக்க வேண்டும் என்றும் தாம் கார்கிகளைக் கைவிட்டது தவறு என்றும் அதிபர் மக்ரோன் அறிவித்தார். கிட்டத்தட்ட அறுபத்தைந்து வருடங்களாக ஒரு குழுமம் அனாதையாக இந்த பூமிப் பந்தில் வாழ்கிறது என்றால் அது கார்கிகள் தான். அல்ஜீரியாவிற்குள் இவர்கள் கால் வைக்கவே முடியாது. ஆனால் போரிட்ட அல்ஜீரியர்களும் , பிரான்ஸ்காரர்களும் இரு நாடுகளிலும் குடியேறி குடியுரிமை பெற்று நன்றாக வாழ்கிறார்கள். ஆனால் கார்கிகள்?
துரோகம் எவ்வளவு கொடுமையானது என்பதற்கு வாழும் உதாரணம் கார்கிகள்.
இந்திய இராணுவ காலத்தில் ஈபிஆர்எல்எஃப் பிற்பாடு மாற்று இயக்கங்கள் தொடங்கி கருணா, பிள்ளையான் வகையறாக்களில் வந்து நின்ற துரோகம் தற்போது JVP/ NPP அரச ஒத்தோடிகளில் வந்து நிற்கிறது.
பிள்ளையான் இன்று கண்ணீர் விடுகிறார். நாளை JVP/ NPP செம்புகளும் கண்ணீர் விட நேரிடும்.
தலைவர் அறமும் மனிதாபிமானமும் மிக்கவர். அதனால்தான் துரோகிகளை மட்டும் தண்டித்தார். துரோகிகளின் குடும்பங்களை விட்டு வைத்தார்.
ஆனால் வரலாறு ஒரு நாள் தமிழீழத்தை விடுவிக்கும். ஏனென்றால் எமது மக்களினதும் மாவீரர்களினதும் ஈகம் அத்தகையது. அப்போது ஆட்சி பீடம் ஏறும் தமிழன் தலைவர் போல் அறத்துடன் இருப்பான் என்று எதிர்பார்க்க முடியாது.
தமிழீழத்திற்குச் செய்த துரோகத்திற்காக JVP/ NPP அரச ஒத்தோடிகள் உட்பட ஒட்டுக்குழு வகையறாக்கள் கார்கிகளைப் போல் சுட்டு வீதிகளில் வீசப்படலாம். தமிழீழத்திற்கு இழைத்த துரோகத்திற்காக நாடு கடத்தப்படலாம். அப்போது அனுர அல்ல அனுராவின் பூட்டப்பிள்ளை கூடக் காப்பாற்ற வர மாட்டார்கள்.
ஏனென்றால் வரலாறு ஈவிரக்கமில்லாதது. அது யாரையும் மன்னிப்பதில்லை.
Copy
6 days ago | [YT] | 1
View 0 replies
single reel
லெப்.கேணல் பூட்டோ அவர்களின் தந்தையாரின் இறுதி வணக்கம் நடைபெற்றுள்ளது. அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.
யார் இந்த பூட்டோ?
1997 ஆம் ஆண்டு ’ஜெயசிக்குறு” என்ற பெயரில் வவுனியாவில் இருந்து சிறிலங்காப்படையினர் பாரிய இராணுவ நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர். இதில் பல கிராமங்கள் சிறிலங்காப்படையினரின் வன்வளைப்புக்குள்ளாகியிருந்தது. சிறிலங்காப்படையினரின் முன்னேற்ற நடவடிக்கையினை தடுக்கும் தாக்குதல்களை அவ்வவ்போது புலிகளால் மேற்கொண்டாலும் சிறிலங்காப்படையினர் மாங்குளம் வரைக்கும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். அப்போதைய காலத்தில் கிளிநொச்சி நகரமும் சிறிலங்காப்படையினரின் வன்வளைப்புக்குள்ளேயே இருந்தது. இந்தக்காலத்தில் விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் பலம் மேலோங்கியிருந்தது. யாழ்ப்பாணத்தில் இருந்த சிறிலங்காப்படையினருக்கு கடல் வழியான விநியோகம் செய்ய முடியாத நிலையை விடுதலைப்புலிகளின் கடல்புலிகளின் தாக்குதல்கள் அமைந்திருந்தது. மாங்குளம் வரைக்குமான பிரதேசங்களை உள்ளடக்கி பல படைமுகாம்களை சிறிலங்காப்படையினர் அமைந்திருந்தனர். கனகராயன்குளம், கரிப்பட்டமுறிப்பு, மணவாளன்பட்டமுறிப்பு, கரப்புகுத்தி, விஞ்ஞானகுளம் போன்ற இடங்களிலும் அமைக்கப்பட்ட படைமுகாம்களுக்கான விநியோகங்களை தரை மற்றும் வான்வழியாக மேற்கொண்டிருந்தனர். பிரிகேடியர் ஜெயம் தலைமையிலான விசேட வேவுப்பிரிவு, சிறப்பு கரும்புலிகள் அணியாலும் தொல்லைகொடுக்கும் தாக்குதல்களை தொடுக்கப்பட்டிருந்தது. இதில் சிறிலங்காப்படையினருக்கு பேரிழப்புகள் ஏற்பட்டிருந்தன. கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் என்ற இடங்களின் பெயர்கள் அக்காலத்தில் தான் பிரபலமாயிற்று. ஜெயசிக்குறு எதிர்ச்சமரில் அதிகளவு ஆயுத, ஆட்பலத்தினை அழித்த படைமுகாம்களாக தாண்டிக்குளம், கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம் போன்றவையே. இந்தவெற்றிச்சண்டைகளின் பின்னால் இந்த சிறப்பு கரும்புலி அணிகளும் விசேடவேவுப் பிரிவும் தான் முக்கிய பங்கினை வகித்திருந்தது. இவ்வாறான கரும்புலி அணியில் இருந்தவரே லெப்.கேணல் பூட்டோ. சிறிலங்காப் படையினரின் ரோந்துகள், மின்வேலிகள் என உயர்பாதுகாப்பு வலயங்கள் என அத்தனை தடைகளையும் தாண்டி மணவாளன்பட்டமுறிப்பில் தரைஇறங்க முற்பட்ட உலங்குவானூர்தியை மிக கிட்டிய தூரத்தில் இருந்து தாக்கி அழித்திருந்தனர் லெப்.கேணல் பூட்டோவும் அவரது அணியும். தாக்குதலில் பின்னர் பாதுகாப்பாக தளம் திரும்பியிருந்த அணியில் இருந்த ஏனையவர்கள் பின்னர் வெவ்வேறு சம்பவங்களில் வீரச்சாவு அடைந்துவிட்டனர். லெப்.கேணல் பூட்டோ அவர்களும் 11.08.2006 அன்று வீரச்சாவு அடைந்துவிட்டார். Copy
1 week ago | [YT] | 18
View 1 reply
single reel
2008 ஆம் ஆண்டு இவ்வாறான ஒரு நேரத்தில்தான் இரணைமடுக்குளம் உடைக்கப்படப் போகின்றது என்பதாக பேசிக்கொண்டிருந்தார்கள் கொஞ்ச நாளுக்கு முன்தான் ஊருக்குப் போய் தேங்காய்களை பிடுங்கிக்கொண்டுவந்தோம் அப்போது செஞ்சோலைக்கு முன் புலிகள் பாதுகாப்பு அரண்களை நிறுவியிருந்தார்கள் கொக்காவிலுக்கு ஆர்மி வந்தபோது இரணைமடுவில் பின் தளங்கள் இருந்தது அப்ப கூட கோழி ஆடு மாடுகளை சனம் பிடிக்க வந்து போனது சண்டை தொடங்கிட்டு இனிப்போகாதீங்கோ என புலிகள் தடுக்கும் வரை இரணைமடுக் குளத்துக்கு கீழாகவுள்ள பாதையால்தான் சனம் போய் வந்துகொண்டிருந்தது மக்கள் புலிகளை நம்பினார்கள் எங்கட பொடியல் விடமாட்டானுகள் என்ற நம்பிக்கை வசனம் சனத்தோட வாயில் இருந்து வரும்போது ஒரு உறுதியான நம்பிக்கை தெரியும் ஆனால் புலிகளின் திட்டங்களை காட்டிக்கொடுப்புகள் தகர்த்துக்கொண்டிருந்தன இரணைமடுவை பெரியதொரு தளமாகத்தான் புலிகள் பாதுகாத்துக்கொண்டிருந்தார்கள் ஆர்மி முன்னேறுவதை தடுத்துக்கொண்டிருந்தாலும் பெரும் சண்டையென இறுதியாக நடந்தது கொக்காவிலுக்கும் முருகண்டிக்கும் இடையில்தான் அந்தப் பகுதிக்குள் இராணுவத்தினரின் கவசவாகனங்களும் உயிர்களும் பறிபோயிருந்தது (இப்போது அந்தப் பகுதியில்தான் மிதிவெடி அகற்றுகிறார்கள்)
இராணுவம் தடைகளை உடைத்து முன்னேறியவண்ணம் இருந்தது புலிகள் இரணைமடுவுக்கு சக்கைகளைக் கட்டியிருந்தார்கள் கூடவே கரும்புலிகளும் வெடிக்கும் நிலையில் தயாராக இருந்தார்கள் .
இரணைமடுவை ஊடறுத்து இராணுவம் முன்னேறி வட்டக்கச்சியை நோக்கி நகர்ந்தது கிளிநொச்சியைக் கைப்பற்றி பன்னங்கண்டியில் பெரும் மோதலோடு இராணுவம் முன்னேறியது மக்கள் தர்மபுரம் விசுவமடு தேராவில் சுதந்திரபுரம் என பின்னுக்கு போய்க்கொண்டே இருந்தார்கள் அப்பதான் குளத்தை உடைத்தால் ஆயிரக்கணக்கான இராணுவம் கொல்லப்படும் கூடவே அவர்களது இராணுவ தளபாடங்கள் ஆயுதங்கள் மீட்கப்படும் என்ற கருத்தை மேலுள்ள தளபதிகளுக்கு இடையில் உள்ள தளபதிகள் கூறினார்கள் தளபதிகளும் அதைச் சரியென ஏற்றுக்கொண்டார்கள் அதற்கான வேவு நடவடிக்கைகளில் வேவுப் புலிகள் இறங்கினார்கள் அதற்கு முன் தலைவருக்கு இந்த முடிவை அறிவித்தார்கள் தலைவர் சொன்னார் மக்களின் சொத்தை அழித்து ஒரு போராட்டத்தைச் செய்யவேண்டிய தேவை எமக்கில்லை அதை விட எங்களது தோட்டாக்கள் எதிரியின் நெஞ்சில் பாய்ந்து எதிரி இறக்க வேண்டுமே தவிர தண்ணீரால் மூழ்கடித்து எதிரியைக்கொன்றோம் என்ற பெயர் எமக்கு வேண்டாம் நாம் அறத்தோடு போரிடுவோம் ஒரு வேளை நாம் எமது போராட்டம் இல்லாமல் போகலாம் ஆனால் புலிகள் அறத்தோடு போராடினார்கள் வீழ்ந்தார்கள் என்பதை சொல்லிக்கொள்வார்கள் தயவு செய்து அந்த எண்ணத்தைக் கைவிடுங்கள் என்றார். புலிகள் அந்த எண்ணத்தைக் கைவிட்டார்கள் ஆனால் அதற்காகச் சென்ற கரும்புலிகளும் இன்னும் சில போராளிகளும் திரும்பி வரும்போது வீரச்சாவு அடைந்தார்கள் என்பது வரலாறு .
இரணைமடுகுளம் உடைக்கப்படப் போகின்றது என பரவலாக பேசியபோதும் நான் நம்பினேன் இரணைமடுக்குளம் அவ்வாறானதொரு நிலைக்குப் போகாது என்று இப்போது மீண்டும் கம்பீரமாக இருக்கிறது வந்து பாருங்கள்.
காவலூர் அகிலன்
2 weeks ago | [YT] | 9
View 1 reply
single reel
Of Heroes and Villains: Dutugemunu and Prabhakaran
Ruben Thurairajah
Nov 27, 2025 | History
History in Sri Lanka has never been allowed to rest as history. It is not a settled archive of facts but a living force, retold as myth and scripture, invoked as justification, sung as lament and praise. Each generation is asked not to remember their country as it is now, but as it was once purified, once betrayed, once fought over. In that troubled memory, two men stand as mirrors to one another: King Dutugemunu of Anuradhapura, lion of the Sinhala chronicles, and Velupillai Prabhakaran, tiger of the Tamil cause.
Separated by two thousand years, they nevertheless appear bound together, each shaping the island’s imagination of war and destiny. One fought to unite, the other to divide, but both lived as though the island’s future rested upon their own bodies, and both became symbols larger than their victories or defeats. To understand the paradox of Sri Lanka’s present; the island’s inability to move beyond its ethnic wounds; is to confront how Dutugemunu and Prabhakaran, hero and villain, saint and demon, continue to haunt its people.
Ascetics of war
The Mahavamsa, the 5th-century Buddhist chronicle, gives us Dutugemunu as a man possessed. Even as a young prince in the south of the island, he is restless, impatient with the small comforts of his father’s palace. He scorns pleasure, living as if his very flesh were pledged to a mission: to march north, to overthrow the Tamil ruler Elara, and to unite the island under Sinhala and Buddhist sovereignty.
Prabhakaran, born in Valvettithurai, in the north of what was then Ceylon, in 1954, seemed cut from the same cloth. As a youth, he displayed the same single-minded devotion, but to a different end. He stripped life of distractions. He denied himself luxury, eschewed chemical highs, lived with the discipline of a soldier long before he commanded an army. Those who joined his movement came to know him as an austere, almost monastic figure. He demanded from his cadres what he practiced himself: the erasure of the personal in the service of his mission.
Both men, then, were ascetics of war; figures who renounced the ordinary to become vessels of a singular project. In their self-abnegation, they acquired the aura of destiny.
Enemy as destiny
Dutugemunu’s great adversary, Elara, a South Indian Chola Tamil prince, seized Anuradhapura and ruled justly for more than forty years. The chronicle praises Elara as fair and noble. Yet his nobility counted for nothing. For the Buddhist monk authors of the Mahavamsa, Elara’s very presence in Anuradhapura was a violation, a sign that the cosmic order had been disturbed. He was an “other” who had to be expelled, not because he was unjust, but because he did not belong.
Prabhakaran constructed the same “other,” but in reverse. For him, the Sinhala-dominated state was not simply oppressive but existentially alien. A Sinhala Buddhist war machine clothed in the language of the nation state denying Tamils their rightful place. The very presence of a Sinhala army in Jaffna, of Sinhala administrators in Tamil lands, was an usurpation of dignity.
In both visions, the adversary became the destiny: the one against whom the entire people must be mobilised. The campaigns of Dutugemunu and Prabhakaran were not territorial wars in the narrow sense. They were crusades against existence itself, against an “other” whose presence was intolerable.
Duel and embodiment
The story of Dutugemunu culminates in the duel. Mounted on his war elephant, he rode out to meet Elara before the walls of Anuradhapura. The clash of armies was reduced to the clash of two men. The island’s fate was compressed into their combat, into the victory of one body over another.
Prabhakaran, too, personalised the war. Though he commanded thousands, the Tamil struggle became synonymous with his own survival. For decades, his body; hidden in the jungles, emerging briefly in photographs and videos, was the battlefield itself. The state sought not simply to defeat the LTTE but to kill him, to extinguish the struggle by extinguishing the man. His death in the Nandikadal lagoon in May 2009 was staged as the ultimate duel: the body of the rebel captured, stripped of mystery, displayed as proof that the state had prevailed.
In both cases, war was not abstract. It was incarnated in the body of a single figure, whose life and death seemed to embody the destiny of a people.
Priests and consolations
On his deathbed, Dutugemunu was troubled. He had killed too many; his conscience was heavy. The Sangha soothed him: “Do not be troubled, O great king. None of those slain were true believers. Their lives were of no spiritual consequence.” With this absolution, violence was transfigured into virtue. Dutugemunu became not a mere warrior but a saviour.
Prabhakaran’s absolution came differently. There were no monks to sanctify him, but there were his believers, the poets, the mourners. In their songs and laments, his image was purified. He became not a failed leader but a martyr, a man who refused compromise, who carried his people’s dream to the very end. Even in defeat, he was imagined as incorruptible.
In both cases, interpreters were needed to convert carnage into meaning, to assure the community that the killing was not sin but sacrifice. The priests, whether monks or mourners, completed the transformation of the warrior into the saint.
Legacy as prison
Dutugemunu’s victory became the touchstone of Sinhala nationalism. From the time of the Kandyan kings during European colonialism through the speeches of modern politicians, to the naming of a Sri Lankan army regiment in 1962, he has been invoked as the archetype of the righteous conqueror. In moments of ethnic tension, he is recalled as proof that the Sinhala people have always prevailed, always restoring the island to its “true” order.
Prabhakaran’s death, though officially cast as the end of terrorism, has not erased his presence. In Tamil homes in both Sri Lanka and abroad, in ceremonies in Jaffna, Toronto, London, Paris, and elsewhere he remains vivid. Songs are sung, murals painted, stories told to children. He represents both tragedy and pride.
Thus both men are imprisoned in memory, and their imprisonment extends to the island itself. Neither can be forgotten, and neither can be reconciled with the other. Dutugemunu and Prabhakaran become permanent archetypes: the Sinhala child taught to venerate one and abhor the other, the Tamil child taught to mourn one and fear the other. Each community carries its own warrior, its own martyr, as a badge of identity.
Irony of symmetry
The irony is stark. These two men, hailed as opposites, in truth mirror one another. Both renounced comfort. Both demanded total obedience. Both imagined the island’s destiny as flowing through their veins. Both waged wars of annihilation. Both required others to sanctify their killings. Both became myths after death.
And both became, in the eyes of the other community, the incarnation of fear. To the Sinhalese, Prabhakaran is Dutugemunu’s ancient enemy reborn, another Indian Elara to be vanquished. To the Tamils, Dutugemunu is Prabhakaran’s eternal adversary, the first in a line of conquerors who claimed the island as exclusively theirs.
This symmetry reveals the trap: the two figures are not merely historical but archetypal, destined to be replayed endlessly in memory, each side haunted by the other’s hero.
Country of shadows
In wounded societies, people live among shadows: of ancestors, of myths, of remembered injuries, of unhealed scars. Sri Lanka today lives in the shadows of Dutugemunu and Prabhakaran. The island proclaims reconciliation, speaks of development and tourism, of highways and investment zones, of digitalisation and artificial intelligence. Yet beneath the rhetoric is the duel, replayed in imagination: lion and tiger, each endlessly circling the other.
The irony is that Sri Lanka, which has endured centuries of conquest and colonisation, is now captive to its own mythic warriors. It cannot release them. It cannot allow Dutugemunu to fade into antiquity, nor Prabhakaran to remain a tragic memory. Instead, they are recycled in speeches, murals, songs, films. They are invoked whenever their community feels insecure, whenever history seems on the verge of regurgitating itself.
The country thus becomes a land where history is not past but perpetual present, where the duel of king and rebel is never settled but rehearsed again and again, each side finding in the other’s hero the proof of its own grievance.
Suspended future
Sri Lanka is trapped not simply by politics but by imagination. To break free would mean to see Dutugemunu and Prabhakaran not as archetypes but as men: products of their times, driven by ambitions and fears, neither saints nor demons. It would mean learning to narrate the past without monks and without political myth-making, to accept that victory was costly, that defeat was tragic, that neither side was destined by gods or history to prevail or perish.
A more honest path forward would admit that neither Dutugemunu nor Prabhakaran can be anchors for a modern state. To move on would require a narrative that honours suffering without inheriting hatred. But the island still clings to its heroes, as though abandoning them would leave it unmoored. Thus, Sri Lanka stumbles, clouded in fables
2 weeks ago | [YT] | 13
View 1 reply
single reel
The Tamil nation honors its fallen and reaffirms its unbroken struggle
Washington D.C.; November 27, 2025 — Today, Eelam Tamils across the Tamil homeland in the
North-East of Sri Lanka and the global diaspora come together to observe Maaveerar Naal (Great Heroes’
Day). This day marks the death of Lt. Shankar, the first Liberation Tigers of Tamil Eelam (L TTE) cadre to
fall in battle, and commemorates those who sacrificed their lives for liberation from Sinhala-Buddhist
state oppression. Despite decades of state harassment, intimidation, and legal attempts to ban public
commemorations, Tamils continue to gather in collective memory and aspiration.
The unchecked force of Sinhala-Buddhist majoritarianism—the ideology that enabled systematic
oppression of Tamils on the island—resulted in the Tamil struggle and eventually led to the Tamil
genocide. At the core of Sinhala-Buddhist majoritarianism is the denial of Tamil nationhood, which
fundamentally shapes the lived experience of Tamils. The current NPP/JVP government, like the ones
before it, continues to enable these conditions and uphold a deep-rooted culture of impunity, with not a
single Sri Lankan perpetrator held accountable for the Tamil genocide or for the countless Tamils killed,
disappeared, or tortured by the state. The government has shown itself to be committed and competent
in pursuing underworld criminals, but has treated Tamil demands for accountability with contempt and
disdain. Militarization persists across the North-East, and land where L TTE cemeteries once stood
remains under army occupation, restricting Tamil memorialization efforts. Meanwhile, the military runs
farms, businesses, camps, and even tourist sites across the Tamil homeland.
Sinhalization and Buddhisization continue openly, and rights activists and journalists who raise
awareness on issues of justice, accountability or self-determination are heavily harassed and intimidated
by security forces. The government downplays ongoing human rights abuses in the North-East and
distorts the reality of the Tamil people. Its refusal to recognize the Tamil genocide or support meaningful
justice shows that the significant issues that gave rise to the armed conflict remain unresolved.
The sacrifices of those who fought for self-determination continue to resonate in the struggles of today,
as Tamils in the homeland and the diaspora work tirelessly to reaffirm their nationhood and demand
recognition of the atrocities committed against their people. The government’s ongoing denial of justice
and human rights abuses on the island underscore that the struggle for liberation and accountability
remains as urgent as ever, and the legacy of the Tamil liberation struggle continues to inspire action and
advocacy across the diaspora and the homeland.
Maaveerar Naal remains a potent symbol of Tamil nationhood and resistance, a bulwark against
Sinhala-Buddhist majoritarianism. The struggle for Tamil self-determination, rooted in the aspirations of
the people, transcends political parties and electoral cycles. Every year, as red and yellow flags rise
across the Tamil homeland and the diaspora, the Eelam Tamil people honor their fallen and reaffirm their
unwavering demand for justice, accountability, and the inalienable rights of the Eelam Tamil nation,
including their right to self-determination.
PEARL
2 weeks ago | [YT] | 5
View 1 reply
single reel
புலனாய்வுத்துறையின் வெளியகப் புலனாய் நடவடிக்கையின் சிறந்த தளபதி கேணல் துரோணர்.
"தாயக விடுதலைக்காய் தன்னையே மறைத்து எதிரியின் சாம்ராஜ்யத்தில் சாதனைகள் பல படைத்து விடுதலை அமைப்பின் நகர்வுக்கு வித்திட்ட போராளி"
புலனாய்வுக் கட்டமைப்பே ஒரு இராணுவ அமைப்பை சீராக வழிநடத்த ஊன்றுகோலான ஒன்றாகும்.
போராட்டத்தில் இணைந்த ஆரம்பத்திலேயே புலனாய்வு சம்பந்தமான துறையில் இணைந்து விடுதலைப் பணியாற்றிய தளபதி துரோணர். இவரின் பணியில் விடுதலை தீ வீச்சாக தென்பட்டது.
காலம் உருண்டோட பொறுப்பாளர்களின் அதி நம்பிக்கைக்குரியவனாக திகழ்ந்தான்.
விடுதலையை வேண்டி போராடும் ஒரு இராணுவ அமைப்பு கட்டுக் கோப்பாக சீர்குலைவின்றி வளர புலனாய்வுத் துறையே முக்கியம் என்பதை உணர்ந்து செயலாற்றியவர்.புலனாய்வுத்துறையின் முக்கிய தளபதிகளின் வீரச்சாவின் பின் அந்த வெற்றிடங்களை இவரே பொறுப்பெடுத்து செயலாற்றினார்.
இவரின் செயல் திறன் தலைமையின் கவனத்தை ஈர்த்தது. பல செயற்பாடுகளில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரின் பாராட்டைப் பெற்றவர்.
அமைப்பின் தலைமை இவரின் புலனாய்வு ஆளுமையை உணர்ந்து இவருக்கு சிறந்த ஒரு புலனாய்வு அணியை வழிநடத்தும் பொறுப்பைக் கையளித்தது.
தனது பொறுப்பை சரிவரச் செய்து தன் விடுதலைப் பணியில் சிறந்து விளங்கினார்.
கடமை தவறும் போராளிகளை சரியாகத் தண்டித்து பணியின் முக்கியத்துவத்தை உணர்த்தி சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தார்.
போராளிகளோடு மிகவும் அன்பாகப் பழகுவார்.பாராபட்சம் பாராது தனக்கு கீழ் இருக்கும் போராளிகளை வழிநடத்திய சிறந்த தளபதி.
இவரின் விடுதலைப் பணியான புலனாய்வுத்துறையின் அவசியம் எவ்வளவோ அதே நேரம் ஆபத்தும் அதிகம்.
எதிரியின் கட்டுப்பாட்டு முக்கிய நகரங்களில் நிகழ்ந்த நடவடிக்கையின் சாதனையாளர்.
மக்களோடு மக்களாய் அன்பாகப் பழகி அவர்களை பயன்படுத்தியே பல சரித்திரங்கள் படைத்தவர்.
தன் போராளிகளை சந்திக்கும் நேரங்களில் தலைவரின் கரத்தை நாங்கள் தான் பலப்படுத்தோணும்.அவர் எவ்வளவு செய்யிறது,எத்தனை என்று கவனிக்கிறது.அவர் என்ன எதிர்பார்க்கிறாரோ அதை எங்கட உயிர பணயம் வைத்தாவது செய்து குடுப்பம். என்று தான் அடிக்கடி கதைப்பாராம்.
ஆடம்பரத்தை முற்றாக புறந்தள்ளி வாழ்ந்த தளபதி.
தமிழீழத்தின் வெளி புலனாய்வு நடவடிக்கைகளின் பல வெற்றிகளின் வேராகவும் செயற்பட்டவர். இவரின் சாதனைகள் பற்றி பலருக்கு தெரியாது. இருந்தாலும்.அந்த சாதனை வீரனைப்பற்றி குறிப்பிட்டவர்களுக்கு நன்கு தெரியும்.
இவரின் விடுதலைப் பணியின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட ஒரு சம்பவம் நினைவில் குறிப்பிடுகிறேன் ஒரு இறுக்கமான காலகட்டத்தில் இலங்கையின் தலைநகரில் ஒரு நடவடிக்கைக்கான புலனாய்வு அணி நகர்த்தப்பட்டது.எந்த நேரமும் ஆபத்தும் அதிஉயர் பாதுகாப்புக்களை உடைத்து இவரின் திறமையால் அந்த அணி குறிப்பிட்ட இடத்தை அடைந்தது. எதிர்பாராத விதமாக அந்த அணியின் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டார். உடனே அந்த நடவடிக்கைக்கான காலத்தை நீடித்து அந்த அணிக்கு வரப்போகும் ஆபத்தான சூழலை உணர்ந்து அணியை தளத்தை நோக்கி நகர்த்தி பின்பு குறிப்பிட்ட காலஓட்டத்தின் பின் அந்த நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.நிலமைகளை உணர்ந்து கண்ணும் கருத்துமாக செயற்பட்டவர்.
இவரின் சாதனைகளை எளிதில் விபரித்து சரித்திரம் எழுதிவிட முடியாது.எதிரி அவிழ்க்க முடியாத பல விசித்திரமான வேட்டைக்காரன் இவன்.
தமிழீழத் தேசியத்தலைவர் மனதிலும், மக்களிடத்திலும், போராளிகளிடத்திலும் தனி இடத்தை பிடித்த ஓர் தளபதி. மாற்று இன மக்கள் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர். இவரின் சாதனைகளையும், வீரத்தையும், தியாகத்தையும் அறிந்தவர்களால் நிச்சியமாக இவரை ஒரு சாதரண வீரனாகப் பார்க்க முடியாது. இவரின் செயல்கள் ஒவ்வொன்றும் வியப்பையே அளிக்கும். கடமை நேரத்தில் மிக மிக கண்டிப்புடன் இருப்பார். கடமை தவறும் போராளிகளோடு கோபம் கொண்டு சில மணி நேரங்களின் பின் அவர்களை அழைத்து ஆற்றுப்படுத்துவார்.இவரின் வீரச்சாவு உயிரை எம்மிடமிருந்து பிரித்ததே தவிர விடுதலை உணர்வை வீச்சாக்கியுள்ளது.
விடுதலைப் போராட்டப் பாதையில் இவரின் சாதனைகள் வெளிச் சொல்ல முடியாத பொக்கிஷங்கள். பெயர் புகழை மறந்து எந்த நேரமும் பேராபத்தை எதிர்கொள்ள தாயாராக செயற்பட்ட உன்னத வீரன்.
எதிரிகள் விடைகண்டு பிடிக்க முடியாத பல கேள்விகளின் உரிமையாளன்.
13.02.2009 அன்று சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சுக்கு இலக்காகி தமிழ்த்தாய் மடியில் வீரகாவியமானார்.
தாயக விடுதலையை கனவாய் நெஞ்சமதில் சுமந்து தமிழ் மக்களின் மண்,உரிமைகளை மீட்டெடுக்கும் எம் புனிதப் போரிலே கேணல் துரோணரோடு வீரகாவியமான ஏனைய அனைத்து மாவீரர்களையும் இந்நாளில் நினைவுகூர்ந்து பூசித்து வணங்கி இவர்களின் உயரிய உன்னத இலட்சியத்தை மனதில் நிறுத்தி விடுதலை வேண்டி வீறுநடை போடுவோமாக...
மாவீரர்களின் வீரவரலாறுகளோடு "ராஜ் ஈழம்"
"புலிகளின் தாகம் தமிழிழத் தாயகம்"
1 month ago | [YT] | 14
View 0 replies
single reel
கந்தகப் பொடியை கழுத்தில் சுமந்து கொண்டு கொள்கையில் குறியாய் நின்று தன்னினத்தின் விடுதலைக்காய் இன்னுயிரை ஈந்தவர் மாதம் இது....
எங்கள் தேவதைகள்
வாழ்த்த தேசம்.❤💛
1 month ago | [YT] | 10
View 1 reply
single reel
முடிந்தால் படியுங்கள்👇
நான் அகவணக்கம் செலுத்திக்கொண்டு இருந்தேன் அப்போது ஒருவர் வந்தார் தம்பி அந்த போட்டோவில் இருக்கும் பெடியனை தெரியுமா என்று கேட்டார் அதற்கு நான் இதில் படுகொலை செய்யப்பட்ட ஒருவர் என்று கூறினேன் அதற்கு அவர் ஓம் படுகொலை செய்தார்கள் ஆனால் அதை அப்படி கூறிவிட முடியாது.
எனது பெரியம்மாவையும் எனது தங்கையையும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொன்றார்கள் பின்பு இந்த சிறுவனை உயிரோடு ஒற்றைகாலை வாய்க்கால் கானுக்குல் புதைத்துக்கொண்டு மற்றய காலை இழுத்து பிழந்து உடல்களை இரண்டாக பிரித்து கொலை செய்தார்கள் என்றார்.
நாங்கள் படுகொலை என்று சாதாரணமாக கடந்து போகமுடியாது.
இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி செய்யப்பட்ட பின்னர் வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அமைதிப்படை என்ற போர்வையில் வந்த இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படிப் பகுதியில் சுமார் ஐம்பதுக்கும் அதிகமான பொது மக்களைக் கொலை செய்த நினைவு நாள் இன்று
அமைதி காக்கும் படை என்ற முகமூடியுடன் வந்த பாரத தேசத்தை கைகூப்பி தோரணம் கட்டி வரவேற்ற அதே மக்களை இந்திய இலங்கை இராணுவம் சேர்ந்து நடுவீதியிலும் இரயில் தண்டவாளத்திலும் படுக்க வைத்து உயிருடன் கவச வாகனங்களால் ஏற்றி கொலை செய்தது வீதியால் சென்றவர்களை மறித்து சுட்டும் அடித்தும் கொடூரமாக கொலை செய்தது.
தேசிய தலைவர் கூறியது படி இந்திய இராணுவம் ஈழத்தில் காலடி வைத்ததுதான் மிகப்பெரிய அவலங்களை எமது மக்கள் சந்தித்தார்கள் என்று.
இன்று ஸ்ரீலங்கா இந்திய கூட்டுப்படையால் வன்புணர்வு செய்யப்பட்டும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட எமது மக்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
இழந்த வரலாறுகளை எமது சந்ததியிற்கு சொல்லிக்கொடுங்கள் இல்லை என்றால் அனைத்தையும் மறந்துவிட்டு அவர்களும் சிங்களவனை தலைவனாக கொண்டாடுவார்கள்.
வரலாற்றை படியுங்கள்
வரலாற்றை படையுங்கள்
வராற்றை மறந்த இனம் வாழாது
வரலாறே எங்கள் வழிகாட்டி.
செந் தமிழன்
2 months ago | [YT] | 9
View 1 reply
single reel
#கொக்குவில்_பிரம்படி_படுகொலை
11-10-1987
ஒப்பரேசன் பவான் இராணுவ நடவடிக்கையில் தோல்வி கண்ட இந்திய இராணுவம் இறுதியில் பிரபா அவரின் இடத்தில் இல்லை என்பதையும் அறிந்து கொண்டது,
வரலாற்று தோல்வியில் அவமானத்தை தாங்க முடியாத இந்தியா தனது கொடூர வெறியை அப்பாவி பொதுமக்கள் மீது காட்டியது,
#சுதந்திர_வேட்கை
பவான் நடவடிக்கை
பாகம் -194
முற்றுகைக்கு உள்ளாகி முழிபிதுங்கி நின்ற இந்திய இராணுவம் தமக்கு பரிச்சாத்தியம் இல்லாத இடத்தில் யாரை தேடி சென்றார்களோ அவரை முன் பின் அறியாத நிலையில், தமது இராணுவ தாக்குதல் இலக்குகள் அகப்பட்ட அப்பாவி தமிழ் பொது மக்களை ஈவிரக்கம் இன்றி சுட்டு கொன்றார்கள்,
திணறிக்கொண்டு இருந்த அதிரடிப்படையினருக்கு உதவியாக ஏவப்பட்ட மோட்டார் பீரங்கி எறிகணைகளும் பொது மக்கள் பலரையும் பலி எடுத்தது,
அருகே இருந்த யாழ் கோட்டையில் இருந்து புறப்பட்ட கனரக டாங்கி வண்டிகள் வழியில் நின்ற பொது மக்களை புல்லை நெரிப்பது போல நெரித்து அரைத்து சென்றன.
இந்திய படைகள் இரத்த வெறியாடி அகன்று சென்ற பின் வீதி வீதியாக பிய்ந்த உடலங்களும் துப்பாக்கி ரவைகளால் கண்மூடிதனமாக கொல்லப்பட்ட சடலங்களும் வீதி நெடுகளும் கிடந்தன,
போராளிகளிடம் தோல்வியடைந்த இந்திய வல்லாதிக்கப்படை தனது கண்மூடிதனமான கொடூர தாக்குதலால் சில மணி நேரத்தில் கொக்குவில் பிரம்படி சந்த பகுதியில் 40 மேற்பட்ட சிறுவர்கள் பெண்கள் உட்பட அப்பாவி தமிழ் பொது மக்கள் 40 மேற்பட்டோர் இந்திய படையால் படு கொ லை செய்யப்பட்டார்கள்.
மேலும் தோல்வி கண்ட இந்திய இராணுவம் அப்பாவி தமிழ் பெண்களை எப்படி வேட்டையாடியது என அடுத்த பதிவில் .......
வரலாற்றை படியுங்கள்
வரலாற்றை படையுங்கள்
வரலாற்றை மறந்த இனம் வாழாது
வரலாறே எங்கள் வழிகாட்டி.
Copy
⚡️
படம் 2👇
கீழே உள்ள முன்னாள் இந்திய இராணுவ நபர், 13வது சீக்கிய Light காலாட்படையைச் சேர்ந்த நாயக் குரா சிங் ஆவார். இவர் தனது தோழர்களின் நினைவைத் தாங்கிய செய்தித்தாளைக் காட்டுகிறார். 11.10.1987 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உலங்குவானூர்தியில் இறக்கிவிடப்பட்ட மேஜர் பிரேந்திர சிங் தலைமையிலான 13வது சீக்கிய Light காலாட்படையைச் சேர்ந்த 30 நபர்களில் இவர் மட்டுமே உயிர் பிழைத்தவர்
இதன்படி; படி 1987 ஆம் ஆண்டு எமது தேசியத்தலைவரைப் பிடிக்கவென யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் உலங்குவானூர்தியில் இருந்து இறக்கப்பட்ட 30 பேரில் இவர் ஒருவரே இன்றும் வாழ்கிறார். அப்படியானால் இவன் தான் இன்பராஜா , திருபாகரன் உட்பட பல பல்கலைக்கழக மாணவர்களையும் பொது மக்களையும் பிரம்படி ஒழுங்கை வீடுகளில் கத்தியால் குத்தியும் கழுத்தறுத்தும் கொ*** *ன்றவன். 😡
(அப்போதைய செய்தியின்படி ஐந்து பேரளவில் உயிர் தப்பி பின்பு சுன்னாகத்தில் இருந்து தண்டவாளத்தில் ஓடி வந்த tank ஒன்றால் மீட்கப்பட்டனர்.)
----------
தகவல்: கிருபாவின் நண்பரான மனோ.
2 months ago | [YT] | 11
View 0 replies
Load more