அரசு பள்ளி

அரசு பள்ளி மாணவ மாணவிகளின் திறமைகளையும் படைப்புகளையும் திறன்களையும் முயற்சிகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும்
அவர்கள் பெற்ற பரிசுகளையும் பாராட்டுகளையும் அவர்களின் முன்னேற்றங்கள் ஏற்ற இறக்கங்களில் பெற்ற வெற்றிகள்
ஏழ்மை கடந்த வெற்றிகள் தோல்விகள் அவர்கள் பெற்ற அனுபவங்கள்
அவர்களின் கனவுகள் இலட்சியங்கள் அனைத்தும் இவ்வுலகிற்கு உலகறிய செய்ய இந்த சேனல்.
அரசு பள்ளி மாணாக்கர்கள் செய்த பெருமைகளை சொல்ல எந்த யூடியூப் சேனல்களும் இதுவரை இல்லை இந்நாள் முதல் அவர்களை கெளரவிக்க இந்த புது அத்தியாயத்தை தொடங்குகிறோம்
யூடியூப்பில் அரசு பள்ளி மாணவர்கள் செய்த அனைத்து வீடியோக்களின் பல்வேறு தொகுப்புகளை தேடி எடுத்து இந்த அரசு பள்ளி யூடியூப் சேனலின் வாயிலாக அவர்களின் கனவுகளை நிறைவேற்ற மக்கள் அறிய இம்முயற்சி

இப்படிக்கு
வருங்கால
அரசுப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்
மற்றும்
அரசு பள்ளிகளில் படித்து சாதனை படைத்த ஏழை மாணவர்கள் மற்றும் சாதிக்க துடிக்கும் குழந்தைகள் முதல் முதியோர் வரை உள்ள அனைவரும்

( அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க தொடர்ந்து பணியாற்றி ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவோம் )