Devotional | Technology | Nature | Travel | Cooking | Reviews | Comparisons | Gadgets | Murugan


mazal VADAI

உங்களுக்கு தெரியுமா?

முருகப் பெருமான் அசுரர்களிடம் போர் புரிந்து வென்ற தலங்கள் மூன்று.

சூரபத்மனை வதம் செய்த தலம் திருச்செந்தூர்.

தாரகாசுரனை வதம் செய்த தலம் திருப்பரங்குன்றம்.

சிங்க முகாசுரனை வதம் செய்த தலம் போரூர்.

2 weeks ago | [YT] | 94

mazal VADAI

உங்களுக்கு தெரியுமா?

யானை மேல் வீற்றிருக்கும் முருகனின் உருவம் மாமல்லபுரத்தில் உள்ள பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

2 weeks ago | [YT] | 7

mazal VADAI

உங்களுக்கு தெரியுமா?

எப்படிப்பட்ட துன்பமாக இருந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடினால் நொடி பொழுதில் துன்பங்கள் மறைந்து போகும் என தணிகையாற்றுப் படை என்ற நூல் சொல்கிறது.

2 weeks ago | [YT] | 163

mazal VADAI

உங்களுக்கு தெரியுமா?

சிவன், முருகனை பூஜித்த தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கி. இங்கு முருகனுக்கு பின்புறம் சிவலிங்கம் இருக்கும்.

அதே போல் முருகன், சிவனை பூஜித்த தலம் திருவேற்காடு வேலமரத்தடியில் முருகனுக்கு முன்புறம் சிவலிங்கம் இருக்கும்.

2 weeks ago (edited) | [YT] | 105

mazal VADAI

உங்களுக்கு தெரியுமா?

திருத்தணி சுப்ரமணிய சுவாமியின் நெஞ்சசில் சிறிய பள்ளம் உள்ளது. இது சூரனை வதம் செய்வதற்காக அவனுடன் ஏற்பட்ட போரில் ஏற்பட்ட காயம் என சொல்லப்படுகிறது.

2 weeks ago | [YT] | 64

mazal VADAI

உங்களுக்கு தெரியுமா?

தமிழகத்தில் முருகப் பெருமானுக்கு குடவரை கோவில்கள் உள்ள தலங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோவில், மாமல்லபுரம்.

2 weeks ago | [YT] | 15

mazal VADAI

உங்களுக்கு தெரியுமா?

அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகப் பெருமான் ஆவார்

2 weeks ago (edited) | [YT] | 80

mazal VADAI

உங்களுக்கு தெரியுமா?

திருச்செந்தூரில் நடக்கும் ஆவணித் திருவிழாவின் ஏழாம் நாள் திருவிழாவில் தங்க பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான், முன்புறம் ஆறுமுகனாகவும், பின்புறம் நடராஜராகவும் காட்சி தருவார்.

2 weeks ago | [YT] | 45

mazal VADAI

உங்களுக்கு தெரியுமா?

திருப்பரங்குன்றம் தலத்தில் பிரம்மகூபம் என சொல்லப்படும் சந்நியாசிக் கிணற்று நீர் தான் முருகனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த கிணற்று நீரில் குளிப்பவர்களுக்கு வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்கள் நீங்கும் அதிசயம் நடக்கிறது.

2 weeks ago | [YT] | 68

mazal VADAI

முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்த இடம் எது?

2 weeks ago | [YT] | 6