Welcome to the HELLOCITY.TV! It is the best latest tamil news & entertainment channel that brings you latest kollywood news, tamil Movie news, politics news, actor & actress gossips, TV show, audio launch, tamil movie review, funny video, controversial news, health tips, beauty tips, tamil songs, tamil serials, Shooting Spot, Celebrity Interviews, trailers, celebrity interviews, tamil memes and lot more.


HELLO CITY TV

#Ajithkumar and his team secure a remarkable P2 podium finish at the prestigious Spa Francorchamps circuit in Belgium.

#AK Pose with Pride 🫶🏻

#akracing
@SureshChandraa
@AbdulNassaroffl
@DoneChannel1

4 months ago | [YT] | 288

HELLO CITY TV

Twitter

3rd place in #992CupMugello12hour

#AKRacing

#AjithKumarRacing #24HSeries @sureshchandraa @Akracingoffl @venusmotoTours @donechannel

Instagram

3rd place in #992CupMugello12Hour

#AKRacing

#AjithKumarRacing
@sureshchandraaoffl @ajithkumarracing @venusmotorcycletours @donechannel1

5 months ago | [YT] | 30

HELLO CITY TV

உங்கள் உடல்
23 தனிமங்கள், 8 கேலன் தண்ணீர்
38 பில்லியன் செல்களால் ஆக்கப்பட்டு இருக்கின்றது-

இவை அனைத்தும்,
உதிரியாக, ஒரு விந்து அணுவால் சுமந்து செல்லக்கூடிய அளவுக்கு சிறிய இரட்டைச் சுருளில் மறைந்து இருக்கும்.
அப்படி நீங்கள் 84 தாதுக்களின் பிணைப்புதான் நீங்கள்.

மறுசுழற்சி செய்யப்பட்ட
பட்டாம்பூச்சிகள், செடிகொடிகள்,
பாறைகள், நீரோடைகள், விறகுகள், ஓநாய் தோல்கள் மற்றும் சுறா பற்கள் ஆகியவற்றால் உங்கள் உடல் ஆககப்பட்டு,
அவற்றின் மிகச்சிறிய பகுதிகளாக உடைக்கப்பட்டு, இந்த அண்டவெளியில்
மிகவும் சிக்கலான உயிர் இனமாக ஆக்கப்பட்டு இருக்கின்றீர்கள்.

நீங்கள் இந்தப் புவிக்கோளில் வாழவில்லை.
இந்தப் புவியே நீங்கள்தான்.

“You are made up of 84 minerals,
23 elements and 8 gallons of water divided by 38 billion cells.

You were built from nothing by the spare parts of the earth you consumed, according to a set of instructions hidden in a double helix small enough to be carried by a sperm cell.

You are made of recycled butterflies, plants, rocks, streams, firewood, wolf skins and shark teeth broken into their smallest parts and rebuilt into the most complex living thing on our planet.

You are not only living on earth..
. you ARE the earth !”

5 months ago | [YT] | 3

HELLO CITY TV

நேர மேலாண்மையில் நிபுணத்துவம் அடைய:
புத்தகம் - சோம்பேறித்தனத்தின் கலை

உங்கள் நாளைத் திட்டமிடுங்கள்.
ஒரு நாளில் சாதிக்க விரும்பும் அனைத்தையும் எழுதுங்கள்.
உங்கள் இலக்குகளை காகிதத்தில் எழுதுங்கள்.
80/20 விதியை பின்பற்றுங்கள். உங்கள் பணியின் 20% 80% முடிவுகளைத் தரும்.
பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யாதீர்கள். வேலை மாறுதல் உற்பத்தித் திறனை குறைக்கும்.
ஒரே வேலைக்கு கவனம் செலுத்துங்கள்.
உங்கள் சூழலிலிருந்து அனைத்து கவனச்சிதறல்களையும் அகற்றுங்கள்.
சோர்வாக இருந்தால், சிறிய தூக்கம் எடுங்கள்.
“இல்லை” சொல்ல பழகுங்கள். எல்லாவற்றிற்கும் சம்மதித்தால் போதுமான நேரம் கிடைக்காது.
முக்கியமல்லாத பணிகளை ஒப்படையுங்கள்.
சரியான நேரத்திற்காக காத்திருக்க வேண்டாம். இப்போதே செய்யுங்கள்.
ஐந்து நிமிடங்களில் முடிக்கக் கூடியதை உடனே முடிக்க வேண்டும்.
வெறுக்கிற பணியை முதலில் செய்யுங்கள்.
கடைநிலை காலக்கெடுவை அமைக்குங்கள்; இல்லையெனில் வேலை முடியாது.
உங்கள் இலக்குகளை எட்ட உதவாத விஷயங்களை நினைக்காமல் இருக்கவும்.
தேவையில்லாமல் முற்றுப்புள்ளியாளராக இருக்க வேண்டாம்.
மின்னஞ்சல் பார்க்கும் நேரத்தை திட்டமிடுங்கள்.
தேவையற்ற கூட்டங்களை தவிருங்கள்.
எதிர்மறை எண்ணம் கொண்டவர்களை தவிருங்கள்.
நீங்கள் விரும்பும்தை செய்யுங்கள்.

5 months ago | [YT] | 2

HELLO CITY TV

Here is the making of #GoodBadUglyTeaser ❤️‍🔥
▶️ https://youtu.be/pg-vWl16xOA

After Teaser Sambavam, it is time for the first single. Ready, Maamey?
#OGSambavam from March 18th.

A @gvprakash Musical ❤️‍🔥

#GoodBadUgly Grand release on 10th April, 2025 with VERA LEVEL entertainment 🤩

#AjithKumar @trishtrashers @MythriOfficial @Adhikravi @AbinandhanR @editorvijay @suneeltollywood @GoodBadUglyoffl @SureshChandraa @romeopictures_ @mynameisraahul
@supremesundar #Kaloianvodenicharov #Anuvardhan @valentino_suren @Donechannel1 @AbdulNassarOffl @AMBANINSK @TSeries #TSeriesFilms @tseriessouth #BhushanKumar #KrishanKumar #ShivChanana @neerajkalyan_24

#AdhikRavichandran #GoodBadUgly #MythriMovieMakers

5 months ago | [YT] | 5

HELLO CITY TV

From the bold and resilient women of Akkenam, we celebrate the strength of women everywhere. Happy Women’s Day!

@iarunpandianc @ikeerthipandian @kav_pandian @Shivpink @namritha_mv @udayk2410 @VigneshGovind09 @praveenraja0505 @devathyan @divomusicindia @proyuvraaj

5 months ago | [YT] | 6

HELLO CITY TV

1 லட்ச ரூவா பீஸ் வாங்கி, ஹிந்தி french னு CBSE ஸ்கூல் நடத்திட்டு எங்க புள்ளைங்களுக்கு மும்மொழி வேணாம்னா சொல்ற ஜோசப் விஜய்

நம்ம அரசு பள்ளியின் தரம் உயர்ந்து விட்டால் இவனுங்க எப்படி வியாபாரம் செய்றது

6 months ago | [YT] | 3

HELLO CITY TV

*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!*
*மெல்ல அழிந்த_இயற்கை உணவுகள்..!*

ஆப்பிள் இன்று இந்திய சந்தையினை வியாபித்து நின்றாலும், சில ஆலயங்களின் பிரசாதம் என்ற அளவுக்கு வந்துவிட்டாலும் அப்பழம் உடலுக்கு நல்லதா என்றால் இல்லை..

இறைவன் சில விஷயங்களை மிக அழகாகச் செய்திருக்கின்றான்... குளிர் பிரதேசத்தில் சக்தி கொடுக்கும் காய்கனிகள், பாலை நிலத்தில் வெப்ப நிலத்தில் சக்தி கொடுப்பவை என அந்தந்த சூழலுக்கு ஏற்ப படைத்திருக்கின்றான்..

தமிழ்நாட்டு பனை கொடுக்கும் பதநீர் அப்படியானது, அது உடலுக்குக் குளிர்ச்சி. இங்கு விளையும் அரிசி முதல் பயிறு வரை உடலுக்கு ஏற்றது..

அரேபிய பேரீச்சம்பழம் அந்த சூழலுக்கு ஏற்றது..

ஒட்டகங்கள் அங்கு தாக்குபிடிக்கப் படைக்கபட்டிருப்பது போல அங்குவாழும் மனிதருக்கானது அந்தக் கனி.

ஆப்பிள் உடலுக்கு சூடு கொடுக்கும் பழம், குளிர் பிரதேசத்தில் அது விளையும் குளிர்பிரதேச மக்களுக்கான பழம் அது..

மா, பலா ,வாழை என தனக்குச் சரியான பழத்தை இப்பூமி இங்கு விளைவித்தது..

இங்கு வெள்ளையன்

வரும்வரை எல்லாம் சரியாக இருந்தது... சூடான பூமியில் மேலும் சூடேற்றி உஷ்ண கோளாறை உருவாக்கும் பழமோ உணவோ இங்கு இல்லை.

வெள்ளையன் மிளகைத் தேடித்தான் வந்தான்...

வந்தவன் மிளகை வாங்கிவிட்டு சத்தற்றதும் நற்காரம் இல்லாததுமான மிளகாய் வற்றலை விட்டுவிட்டுச் சென்றான்... அது தென் அமெரிக்காவில் இருந்து வந்தது..

தக்காளியும் உருளையும் அப்படி வந்தது...

புகையிலையும் அப்படி வந்ததே.

இங்கு காரத்துக்கு நல்லமிளகு பயன்படுத்தும் முறையே இருந்தது.

உண்டபின் வெற்றிலையோடு மிளகும் பாக்கும் சுண்ணாம்பும் ஏலமும் வைத்தே தாம்பூலம் தரிக்கும் பழக்கம் இருந்தது.

வெள்ளையன் சமையலுக்கு வற்றலைக் கொடுத்தான்,

வெற்றிலைக்குப் பாக்கைக் கொடுத்தான், மிளகை அவன் கொண்டு சென்றான்.

கருப்பட்டியும் வெல்லமும் இங்கு இனிப்புக்கான பொருளாய் இருந்தன, அதில் சீனியினைத் திணித்தான் , கருப்பட்டி சந்தை மெல்ல சுருங்கியது.

கள் இருந்த இடத்தை தன் நாட்டு ஒயினாலும் இன்னும் எதெல்லாமோ கொண்டு நிரப்பினான்.

தேங்காய் இருந்த

இடத்தை எதுவெல்லாமோ பிடித்தது, தேங்காய் கொடுக்கும் ஆரோக்கியம் கொஞ்ச நஞ்சமல்ல‌

மிளகு, அரிசி, கருப்பட்டி, பயிரி என்றிருந்த தமிழர் உணவில் புகையிலை, சீனி, மிளகாய் என எதையெல்லாமோ திணித்தான் வெளிநாட்டுக்காரன்.

நோய்கள் பெருகின..

ஆப்பிளை அப்படித்தான் இங்கு பயிரிட்டான்...

ஆப்பிளை மட்டுமா கொணர்ந்தான்? கேரட் , பீட்ரூட்

இன்னும் குளிரில் விளையும் பல பயிர்களைக் கொணர்ந்தான், அது அவனுக்குச் சரி..

ஏற்கெனவே உஷ்ணத்தில் வாழும் மக்களுக்கு இவை ஏன்? அவை கூடுதல் உஷ்ணத்தை ஏற்றின‌..

அத்தோடு விட்டானா?

அவன் ஏற்படுத்திய உலகப்போர்கள் அரிசித் தட்டுப்பாட்டை உருவாக்கின.

விளைவு..?

தமிழருக்குச் சப்பாத்தியும் பரோட்டாவும் அறிமுகமாயின‌ ...

சப்பாத்தியினைக் கொடுத்தானே அன்றி அதை உண்ணும் முறை சொன்னான் இல்லை.

சப்பாத்தி என்பது நெய் சேர்க்காமல் உண்ணகூடாத உணவு...

ஆம்.... அதில் உஷ்ணம் அதிகம், அரேபியர் அதை தயிரோடு உண்பர், வட இந்தியர் நெய்யோடு உண்பர், தமிழன் அதை உண்ணத் தெரியாமல் உண்டான்..

நோய் பெருகிற்று....

அதாவது சூடான பூமியில் சூடு

கொடுக்கும் உணவினை உண்டு நம்மை நாமே கெடுத்தோம்...

வெள்ளையனின் குளிர்நாட்டில் அரிசி கஞ்சியும், பனங்கள்ளும் குடிக்கச் சொல்லுங்கள், அவன் குடிப்பானா?

குடித்தால் என்னாகும் என அவனுக்குத் தெரியும், அவன் தன் சமூகத்தைக் காத்து கொண்டிருக்கிறான்.

உஷ்ணத்தால் ஏற்படும் நோய்க்கு விஞ்ஞானம் காரணம் சொல்லாது ..

இங்கு உஷ்ணத்தை கட்டுபடுத்த நல்லெண்ணெய் குளியலும் நெய்யும் இன்னும் பலவும் இருந்தது..

எல்லாம் பழமைத்தனம் என ஒழிக்கபட்டது.

இன்று எண்ணெயும் கலப்படம்... இப்போதுள்ள தலைமுறை டால்டாவினை நெய் என்றும் கலப்பட எண்ணெயினை சுத்தமான எண்ணெய் எனவும் அறிகின்றன...

பரிதாபம்.

காரணம், அவற்றுக்கு உண்மையான

பொருளும் மணமும் எப்படி இருக்கும் என்றே தெரியவில்லை....

அவை என்ன செய்யும்?

எண்ணெயில் கலப்படம், உணவு பொருளில் கலப்படம் , இவை எல்லாம் இன்று ருசி இல்லா உணவல்ல...

ஆரோக்கியமில்லா உணவினைக் கொடுத்துவிட்டன‌...!

நெய்யும் பாலும் வெண்ணெயும் போலி என அரசே சொல்லும் நிலையென்றால் தனியார்

நிலையங்கள் எப்படி இருக்கும்?

எதையோ தின்று

எதையோ குடித்து,

எதையோ புகைத்து, எதையோ மென்று

இல்லா நோய்கள் எல்லாவற்றையும் தனக்குள்ளே இழுத்துவிட்டான் தமிழன்

எதை உண்டாலும் கசப்பாய் முடிப்பது உலகளாவிய உணவு முறையாய் இருந்தது, சீனாவில் தே எனும் கசப்பு பானத்தை அருந்துவார்கள்..

ஆப்ரிக்காவிலும்

அரேபியாவிலும் காப்பி இருந்தது..

தமிழனுக்கு வேப்பம்பூ துவையலும் பாகற்காயும் அன்றாடம் சமையலில் இருந்தது.

பாகம் என்றால் சமையல் அதில் இருக்க வேண்டிய காய் பாகற்காய் ஆனது..!

புரிகிறதா...?

இவை முறையாக இருந்தவரை சர்க்கரை நோய் இல்லை..

பாலில் காப்பி, டீ , சீனி என வெள்ளையன் ஏற்படுத்திய வியாபார தந்திரம்,

இன்று நம் வாழ்வியல் அங்கமாக மாறிவிட்டது.

காபியும் டீயும் பருகியே தீரவேண்டியவை அல்ல‌..

அவை இன்றியும் வாழமுடியும்...

அதுபோக பேக்கரிகள் வந்து நிரம்பியிருக்கின்றன.

பரோட்டாவும் பேக்கரியும் இன்னும் பலவும் இங்கு ஏற்ற விஷயம் அல்ல.

விஷம் அவை..

இவை பெருகப் பெருக மருத்துவ மனைகளும் பெருகுகின்றன.

இச்சமூகம் எவ்வளவு நல்ல விஷயங்களை நாகரீகம் என இழந்து இன்று சீழ்பிடித்த சமூகமாக மாறிவிட்டது என நினைக்கும் பொழுது தலையே சுற்றுகின்றது

ஏகபட்ட விஷயங்களை இழந்துவிட்டோம், ஆனால் எதை எல்லாம் இழந்தோம் என்பதை ஆலயங்களிலும் இந்த நாட்டின் பாரம்பரியமான பண்டிகை மற்றும் சடங்குகளிலும்

காணலாம்..

தெய்வங்களுக்குப் பாரம்பரியமாக படைக்கபடும் பழம், பானம் எல்லாம் உடலுக்கு நல்லவையே..

துளசி போல் அருமருந்தில்லை..

அங்கு பயன்படும் எலுமிச்சை முதல் எள் வரை எல்லாமே நன்மை கொடுப்பவை.

தாம்பூலத் தட்டில் காணப்படும் வெற்றிலை முதல் எல்லாம் ஆரோக்கியமே..

தேர்களில் தெய்வங்களுக்கு

வீசபடும் மிளகும் உப்பும் உடலுக்கு எக்காலமும் நன்மையே.

உங்களுக்கு ஆரோக்கியமான உணவு வேண்டுமென்றால் நம் மரபு வழி உணவினைப் பாருங்கள், நைவேத்தியம் எனப்படும் உணவு முறையாகத் தயாரிக்கபடுமானால் அதை விட ஆரோக்கிய உணவு வேறு இல்லை...

அசைவத்தில் கூட கிராம ஆலயங்களைக் கவனிக்கலாம், ஆடும் சேவலும் எப்படி

இருந்தால் அங்கு பலியிட வேண்டும் எப்படி சமைக்கபட வேண்டும் என்ற விதிகள் உண்டு.

அதன்படி உண்டால் அவையும் ஆரோக்கியமே, பிராய்லர் கோழியினை அங்கு வெட்டுவதில்லை.

சனிகிழமை தோறும் நல்லெண்ணெய் தேய்த்தால் உஷ்ணம் வராது..

அதிகாலை சேவலோடு எழுவதும் அந்தியில் பறவைகள் ஓயும்பொழுது தூக்கத்தை தழுவதும்

நோய்க்கு இடம் கொடா...

மலைமேல் ஏறி தெய்வத்தை வணங்குவதும் , குளிர் ஆறுகளில் குளிப்பதும் ஆரோக்கியமே, மாதம் இருமுறையாவது இருக்கும் விரதம் உடலை வலுபடுத்தும்..

இன்னும் ஏராளமான விஷயங்கள் உண்டு..

அவை எல்லாம் இழந்ததன் விளைவு நீரிரிழிவு முதல் ஏகபட்ட நோய் ஒருபுறம்..

கருத்தரிப்பு சிக்கல்

சிசேரியன் என மறுபுறம்.

மிக மிக மோசமான சிக்கலுக்கு செல்கின்றது இச்சமூகம்..

பழமையினை மீட்டெடுத்து நல்வாழ்வு வாழ இந்துமதம் உதவும், நம் முன்னோரின் நலமான பலமான வாழ்வின் ரகசியம் அங்குதான் புதைந்திருக்கின்றது..

அதை மீட்டெடுப்பீர்களாயின் நல்வாழ்வு கிட்டும்... மாறாக அதெல்லாம் பழமை என

ஒதுக்குவீராயின் டாக்டரும் மருந்துகடைக்காரனுமே உங்களுக்கு தெய்வமாவான்..

அப்படி ஒரு பலஹீனமான சமூகமாக நம் நாடு உருவாக வேண்டும் என வெள்ளையன் ஆசைபட்டதன் விளைவுதான் இது

இந்தியா தன் மருந்து மற்றும் மருத்துவத்தின் வேட்டைக்காடாகும் என்பது அக்காலத்தில் இருந்தே அவன் கணக்கு..

அது மிளகைத் திருடி வற்றலைக் கொட்டுவதில் தொடங்கி இன்றைய K F C வரை தொடர்கின்றது...

நாம் பாரம்பரியத்தை

மீட்டெடுத்தால் தவிர நம் ஆரோக்கியத்தை திருப்பமுடியாது...

என்று அதை இச்சமூகம் உணருமோ அன்றே இங்கு நல் ஆரோக்கியம் திரும்பும்..

ஆம்.

மாறாக, கண்டதையும் உண்டுவிட்டு தெருத் தெருவாக + கடற்கரை கடற்கரையாக நடந்தாலும்

ஆகபோவது ஒன்றுமில்லை...

நடக்க வேண்டியது வயல்வரப்புகளை நோக்கி..

அங்கேதான் இருக்கின்றது உடல் நலத்துக்கான மருந்து...✍🏼🌹

கனவுகள் மெய்ப்பட வேண்டும்

6 months ago | [YT] | 1

HELLO CITY TV

#திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு: லண்டன் பிரிவி கவுன்சில் தீர்ப்பு விபரம் இதோ!

நமது சிறப்பு நிருபர் ADDED : பிப் 05, 2025 01:24 PM

சென்னை: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பான பிரச்சனையை நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னதாகவே, லண்டன் பிரிவி கவுன்சில் விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
முதலில் இந்த வழக்கு மதுரை கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில், விவசாயம் செய்யப்படும் ஒரு பகுதி நிலம், தர்கா அமைந்துள்ள பகுதி ஆகியவை தவிர மொத்த மலையும் கோவில் சொத்து என்று வலியுறுத்தப்பட்டது. முஸ்லிம்கள் தரப்பில் தர்கா அமைந்துள்ள பகுதியும், நெல்லித்தோப்பு என்று அழைக்கப்படும் மலையின் ஒரு பகுதியும் தங்களுக்குச் சொந்தம் என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மதுரை கீழமை நீதிமன்றம் 1923ம் ஆண்டு ஆகஸ்டில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை அரசு தரப்பும், கோவில் தரப்பும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் முஸ்லிம்கள் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். 1926ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், முஸ்லிம்களின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது. ஆனால் மலை முழுவதும் அரசுக்கு சொந்தம் என்று தீர்ப்பு அளித்தது.
இதை எதிர்த்து லண்டன் பிரிவி கவுன்சிலில் கோவில் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த பிரிவி கவுன்சில் 1931ல் விரிவான உத்தரவை பிறப்பித்தது. மதுரை கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே சரியானது என்பது தான் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு. திருப்பரங்குன்றம் கோவிலின் வரலாற்றை விரிவாக ஆராய்ந்த பிரிவி கவுன்சில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தைய பல்வேறு ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கியது.
கோவில் தேரோட்டம் நடக்கும் வீதி கிரி வீதி என்று அழைக்கப்படுவதை குறிப்பிட்டும், பல்வேறு ஆவணங்களில் இதை மலை பிரகாரம் என்று குறிப்பிட்டுள்ளதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். கிரிவீதியில் சிறிய கோவில்கள் பலவும் அமைந்துள்ளன. பழங்கால மண்டபங்கள் அல்லது பக்தர்களுக்கான ஓய்வு விடுதிகள் அமைந்துள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் பழமை வாய்ந்தவை. 13ம் நூற்றாண்டு அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை.

இந்திய தொல்லியல் துறையின் தலைவர் கொடுத்துள்ள அறிக்கையில், மலை முழுவதையும் சிவலிங்கமாக பக்தர்கள் வழிபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இத்தகைய தனித்துவம் வாய்ந்த வழிபாடு மதுரையில் தொடங்கி இருக்க வேண்டும் என்றும் நம்புவதற்கு ஆதாரங்கள் உள்ளன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். பழைய ஆவணங்கள் பலவற்றில் இந்த மலையை சுவாமிமலை என்று குறிப்பிட்டுள்ளனர் என்றும் பிரிவி கவுன்சில் தீர்ப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.
04-Feb-2025
கோவில் நிர்வாகத்தினர் நூறாண்டுகளுக்கு மேலாக இந்த மலையை சொந்தம் கொண்டாடும் வகையில், பாதுகாத்து பராமரித்து வந்துள்ளனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. சுவாமி தேரோட்டம் நடக்கும் கிரி வீதியை அகலப்படுத்த ஒரு வீட்டுமனையை விலை கொடுத்து வாங்கியுள்ளனர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. இதற்கான ஆதார ஆவணங்கள் 1835ம் ஆண்டு முதல் உள்ளன. 1861ம் ஆண்டு மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டதற்கான புகார் ஒன்று மதுரை மாவட்ட கலெக்டர் இடம் அளிக்கப்பட்டது.

அப்போது, ' மலை முழுவதும் கோவிலுக்கு சொந்தமானது என்பதால் மரங்கள் தொடர்பான விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். கோவில் நிர்வாகத்தினர், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துவதையும், அதை அவ்வப்போது பராமரித்து சரி செய்வதையும் தொடர்ந்து செய்து வந்துள்ளனர். பல இடங்களில் சிறு பாலங்கள், மண்டபங்கள் உள்ளிட்ட கட்டுமானங்களையும் செய்துள்ளனர்.

இந்த ஆதாரங்கள் அனைத்தும், கோவில் நிர்வாகத்தின் உரிமை மற்றும் பொறுப்பில் மலை இருந்ததற்கான ஆதாரங்கள் என்று கருதியே கீழமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று பிரிவி கவுன்சில் சுட்டிக்காட்டி உள்ளது. அதன் அடிப்படையில் தான், மதுரை கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்வதாக தெரிவித்துள்ள லண்டன் பிரிவி கவுன்சில், கீழமை நீதிமன்ற உத்தரவை மாற்றுவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

கோவில் அமைந்துள்ள மலை, எல்லா காலத்திலும் கோவில் நிர்வாகத்தினர் வசமே இருந்துள்ளது என்பதும் ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரிவி கவுன்சில் தெரிவித்துள்ளது. புறம்போக்கு நிலம் என்பது பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தமானது என்பது பொதுவான கருத்து. ஆனாலும் இந்த வழக்கை பொறுத்த வரை, குறிப்பிட்ட அந்த நிலம் முழுவதும் கோவிலுக்கு சொந்தமானது என்று பிரிவி கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பிரிவி கவுன்சில் என்பது என்ன?
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், மன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்காகவும், வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காகவும் லண்டனில் உருவாக்கப்பட்டது தான் பிரிவி கவுன்சில். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த கவுன்சில் தான், இறுதி அதிகாரம் படைத்த வழக்கு விசாரணை அமைப்பாக இருந்தது.

அதனால் இந்திய நீதிமன்றங்களில் தீர்க்க முடியாத வழக்குகள் பிரிவி கவுன்சிலில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டன. அப்படித்தான் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கையும் பிரிவி கவுன்சில் விசாரித்து தீர்ப்பளித்துள்ளது.
ஒன்று சரியானது
இரண்டு சரியல்ல

7 months ago | [YT] | 1

HELLO CITY TV

பிணத்துடன் உடலுறவு கொள்வது குற்றமாகாது: உச்ச நீதிமன்றம்.

சட்டப்படி ஒருவரின் இறந்த உடலை மனிதராக கருத முடியாது.

இந்திய தண்டனை சட்டம் 375, 377 (இயற்கைக்கு மாறான உடலுறவு) ஆகியவை இதற்கு பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

மனிதநேயம் 1,வளர்கிறதா 2,குறைகிறதா

7 months ago | [YT] | 0