Tirumala Tirupati Angapradhakshinam Tickets DECEMBER MONTH 2024
Tirumala Tirupati "December Month" Angapradhakshinam Tickets Will Open On Monday (23/09/2024) At 10:00 AM. Available Dates: 01 Dec To 15 December
16 Dec to 31 December Not Available Due To Margazhi Month
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று பன்னிரெண்டாம் நாள் திருவிழா. 4/5/23
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாள் திருவிழாவின் நிறைவாக இன்று உச்சி காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி மற்றும் தேவேந்திர பூஜை நடைபெறுகிறது மாலை சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர் வருகின்றனர் பதினொரு நாள் திருவிழா வைபவத்தை இதுவரை தரிசிக்காதவர்கள் இன்றைய திருவிழாவில் ரிஷப வாகனத்தை தரிசிப்பது பன்னிரண்டு நாள் திருவிழா தரிசனத்தின் பலன் ஒரே நாளில் பெறலாம் சித்திரை விழாவின் நிறைவு நாளில் வைகையில் நிராடி தரிசித்தால் வாழ்வில் சகல சவுபாக்கியம் உண்டாகும்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை திருவிழா இன்று பதினோராம் நாள் திருவிழா. 03/05/23
மதுரை சித்திரைத் திருவிழாவின் பதினோறாம் நாள் திருவிழாவில் இன்று திருத்தேரோட்டம்.காலை 5.45 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் திருத்தேரிலும், கோயிலுக்குள் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படியிலும்,ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சுவாமி அம்பாள் எழுந்தருளல்.இரவு 7 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் சப்தாவர்ணச்சப்பரத்தில் திருவீதியுலா.
ஊர் கூடித்தேர் இழுத்தது போல' என்னும் சொல்வர். மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக நடக்கும். ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த விழா நம் பண்பாட்டின் அடையாளம். மன்னர் நகர் வலம் வருவது போல, உலகாளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர். நாயக்கர் காலத்திற்கு முன்பிருந்தே மதுரையில் தேர் பவனி நடந்ததை திருப்பணிமாலை என்னும் நூல் குறிப்பிடுகிறது. 16ம் நுõற்றாண்டில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் தேர் மண்டபத்தைக் கட்டினார். சுவாமி, அம்மன் தேர்கள் ராணி மங்கம்மாளின் பேரனான விஜய ரெங்க சொக்கநாத நாயக்கரால் செய்யப்பட்டவை. சிவபுராணம், திருவிளையாடல் சிற்பங்கள் தேரில் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. தேரில் பவனியின் போது சுவாமிக்கு ஆபரணம் அணிவிப்பதில்லை. பட்டுத்துண்டால் ஆன பரிவட்டம் மட்டுமே கட்டுவர். தேர்பவனி முடிந்ததும், சுவாமிக்கு கிரீடம், ஆபரணம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இரவில் சப்தாவர்ண சப்பர பவனி நடக்கும். தாருகாட்சன், கமலாட்சன்,வித்யுன்மாலி ஆகிய மூன்று திரிபுர அசுரர்களும் ஆணவம் கொண்டு மூவுலகத்தையும் துன்புறுத்தினர். தேர் மீதேறி புறப்பட்ட சிவன், அசுர வதம் நிகழ்த்தி உலகைக் காத்தார். இதை நினைவூட்டும் விதத்திலும் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி வருகின்றனர்.இன்று அம்மையப்பரை தரிசித்தால் ராஜபோக வாழ்வு அமையும்
மதுரை சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாள் 02/05/2023 திருவிழாவில் இன்று காலை 08.35 மணிக்கு மேல் 08.59 மணிக்குள் திருக்கல்யாணம். காலை 6 மணியளவில் நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளி சிம்மாசனத்திலும் கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் நாகப்பச் செட்டியார் கட்டளை மண்டகப்படியிலும் சுவாமி அம்பாள் எழுந்தருளல்.இரவு 7.30 மணியளவில் தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும் நான்கு மாசி வீதிகளில் திருவீதி உலா மற்றும் ஆனந்தராயர் பூப்பல்லக்கு.
மலையத்துவஜ பாண்டியனின் மகளான மீனாட்சிக்கும், கைலாய நாதர் சிவனுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிவன் தலைமையில் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் உள்ளிட்ட எல்லா தேவர்களும் மதுரை நகருக்கு வந்தனர். மங்கல தீபங்கள் ஏந்திய சுமங்கலிகள் தேவர்களை வரவேற்றனர். மணமகளின் பெற்றோர் மலையத் துவஜபாண்டியன், காஞ்சனமாலை இருவரும் சிவனுக்கு சந்தனம் அளித்து, “எங்கள் மகள் மீனாட்சியை ஏற்று அருள்புரிய வேண்டும்” என வேண்டினர். பிரம்மா தலைமையில் யாக வேள்வி நடந்தது. லட்சுமியும், சரஸ்வதியும் மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வர, சுந்தரேஸ்வரர் அம்பிகையின் கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டினார். கல்யாணக்கோலத்தைக் கண்குளிர தரிசித்து மகிழ்ந்தனர். இன்று மணக்கோலம் தரிசித்தால் விரைவில் திருமண யோகம் உண்டாகும்.
சித்திரை திருவிழாவின் 1/5/23 ஒன்பதாம் நாளான இன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மரவர்ணச் சப்பரத்திலும் மாலை மீனாட்சி இந்திர விமானத்தில் திக்விஜயம் செய்கிறாள். பட்டாபிஷேகம் நடந்ததும் மன்னர்கள் வீரத்தை நிலைநாட்ட, எல்லா நாட்டுக்கும் படையெடுத்துச் செல்வர். பாண்டிய இளவரசியான மீனாட்சி திக்விஜயமாகப் போருக்குப் புறப்பட்டாள். அமைச்சர் சுமதியும் உடன் சென்றார். பூலோகம் முழுவதையும் வென்ற அவளின் கவனம் அஷ்டதிக்கு பாலகர் மீது விழுந்தது. இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை வெற்றி கொண்டாள். அதன் பின் சிவனின் கைலாயம் நோக்கி புறப்பட்டாள். நந்தீஸ்வரர் தலைமையில் வந்த சிவகணங்களுடன் போரிட்டு வென்றாள். இறுதியில் சிவனே போர் புரிய வந்தார். ஒற்றைக்கழல் அணிந்த பாதம், மழு ஏந்திய கரம், மேனி முழுவதும் வெண்ணீறு, செஞ்சடை, நெற்றிக்கண் என அவரது அழகில் மனதை பறி கொடுத்தாள். நாணத்தால் முகம் சிவந்தாள். ’இவரே உன் மணாளர்’ என அசரீரி ஒலித்தது. திக்விஜயம் திருமண வைபவத்தில் நிறைவு பெற்றது. இன்று மீனாட்சியம்மனைத் தரிசித்தால் தேவையற்ற பயம் நீங்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை திருவிழா இன்று எட்டாம் நாள் திருவிழா. 30/04/23
சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று காலை 10 மணி அளவில் தங்கப்பல்லக்கில் கீழச்சித்திரை வீதி தெற்கு ஆவணி மூல வீதி திண்டுக்கல் ரோடு மேல மாசி வீதி விதிகளில் வழியே வலம் வந்து திருஞானசம்பந்தர் ஆதினம் கட்டுசெட்டி மண்டகபடியில் எழுந்தருளிகிறார் பிற்பகல் 3 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பாடகி கோயிலுக்குள் வருதல் இரவு 8.20 மணி மேல் 8.40 க்குள் விருச்சிக லக்னத்தில் அருள்மிகு மீனாட்சி க்கு அம்மன் சன்னிதியில் அறுகால் பிடத்தில் மீனாட்சி பட்டாபிஷேக கோலத்தில் சிம்மாசனத்தில் பவனி வருகிறாள். மலையத்துவஜ பாண்டியன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் பார்வதி மூன்று வயது குழந்தையாக அவதரித்தாள். தடாதகை எனப் பெயரிட்டு வளர்த்தான் மன்னன். வில்,வாள் பயிற்சி, குதிரையேற்றம் போன்ற 64 கலைகளையும் கற்றுத் தர ஏற்பாடு செய்தான். யாருக்கும் அஞ்சாத வெற்றி மங்கையான தடாதகை பருவ வயதை அடைந்தாள். ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில், மன்னன் மகளுக்கு பட்டம் சூட்டி நாட்டின் இளவரசியாக்கினான். இதனால் பாண்டிய நாடுகன்னிநாடு என்று பெயர் பெற்றது. கண்களை இமைக்காமல் குஞ்சுகளைத் தன் பார்வையால் பாதுகாக்கும் மீன் போல, தடாதகையும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட பெண்ணரசியாக நல்லாட்சி புரிந்தாள். இதனால், மீன் போன்ற கண்களைப் பெற்றவள் என்னும் பொருளில் கயற்கண்ணி மீனாட்சி என சிறப்பு பெயர் பெற்றாள். மதுரையும் தூங்கா நகரம் எனப்பட்டது. ராஜ அலங்கார ஆடை, ஆபரணத்துடன் பாண்டியருக்குரிய வேப்பம்பூ மாலை சூடி பட்டாபிஷேக கோலத்தில் பவனி வரும் அன்னை மீனாட்சியைத் தரிசித்தால் குறை அனைத்தும் தீரும். நிறைவான வாழ்வு அமையும்.
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா இன்று ஏழாம் நாள் திருவிழா. 29/04/2023
சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான இன்று காலை 9 மணியளவில் காலை வழக்கத்திற்கு மாறாக சுவாமி அம்பாளுக்கு பதிலாக ஶ்ரீ பிக்ஷாடனமூர்த்தி மரச்சட்டத்தேர் சப்பரத்தில் ஏறி பிக்ஷை பாத்திரம் ஏந்தி ஊர்வலம் மாலை 7 மணியளவில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி வாகனத்தில் பவனி வருகின்றனர்.ஸ்ரீசைலத்தில் வாழ்ந்த சிலாத முனிவர் சிவன்அருளால் புத்திரபேறு பெற்றார். பிள்ளைக்கு 'நந்தி' என பெயரிட்டு வளர்த்தார். சகல கலைகளிலும் கற்றுத் தேர்ந்த நந்திக்கு, விதிப்படி அற்பாயுளே இருந்தது. இதை அறிந்த சிலாதர் வருந்தினார். தந்தையின் வருத்தம் தீர, நந்தி சிவனை நோக்கி தவம் இருந்தார். சிவனருளால் சிவகணங்களுக்கு தலைவராகி ஈஸ்வர பட்டமும் பெற்றார். அதனால் 'நந்திகேஸ்வரர்' எனப்பட்டார். கடவுளை நம்பினால் விதி கூட மாறும் என்பதை உணர்த்த நந்திகேஸ்வரர் மீது சிவன் பவனி வருகிறார். யானையும், சிங்கமும் இணைந்த உருவம் யாளி. மதம் பிடித்து அடங்காமல் திரியும் யானையும், தற்பெருமையால் கோபம் கொண்டு அலையும் சிங்கமும் அம்பிகையின் முன் அடங்கிக் கிடப்பது போல, ஆணவம், தற்பெருமை போன்ற கீழான குணம் நீங்கி மனிதனும் கடவுளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை யாளி வாகனம் உணர்த்துகிறது. இந்த தத்துவத்தை உணர்ந்து அம்மையப்பரை தரிசிப்போம்.
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ஆறாம் நாள் திருவிழா 28/04/2023
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாள் திருவிழாவில் இன்று காலை 7.30 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் தங்கச்சப்பரத்திலும் கோயிலுக்குள் சிவகங்கை ராஜா மண்டகப்படியிலும் சுவாமி அம்பாள் எழுந்தருளல்.இரவு 7.30 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் தங்க ரிஷபம்-வெள்ளி ரிஷபம் வாகனங்களில் திருவீதியுலா.
திருஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்த போது, அவரது தந்தை சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். குளக்கரையில் அமர வைத்து விட்டு நீராடக் கிளம்பினார். நீண்ட நேரமானதால் பசியால் வாடிய சம்பந்தர் அழுதார். அவருக்குப் பாலுாட்ட அம்பிகையுடன் சிவன் அங்கு வந்தார். சம்பந்தரை வாரி எடுத்த அம்பிகை பொற்கிண்ணத்தில் ஞானப்பால் கொடுத்து விட்டு அங்கிருந்து மறைந்தனர். கரையேறிய சிவபாத இருதயர், பால் சிந்திய வாயோடு நின்ற சம்பந்தரிடம், 'உனக்குப் பாலுாட்டியது யார்?' என கோபித்தார். அப்போது சம்பந்தர், 'தோடுடைய செவியன்....' என்ற முதல் தேவாரப் பாடலைப் பாட, அம்மையப்பராக ரிஷப வாகனத்தில் காட்சியளித்தனர் மேலும் ரிஷப (காளை) ஜீவாத்மாவின் (உலக உயிர்கள்) சின்னம் என்பர். சிவ சன்னதியில் சிவனை நோக்கியபடி காளை படுத்திருக்கும். உயிர்கள் அனைத்தும், சிவபெருமானை அடைவதற்காக, தங்கள் கவனத்தை அவரை நோக்கி செலுத்த வேண்டும் என்பதை இது காட்டுகிறது. இதை தர்மத்தின் சின்னமாக கருதுவர். தர்மம் என்பது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். காளை மாடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, விவசாய ப்பணி செய்கிறது. இது தொண்டு மனப்பான்மையை குறிக்கும். அருமையான தானியத்தை விவசாயிக்கு கொடுத்து விட்டு வெறும் வைக்கோலையும், இலை தழைகளையும் அது சாப்பிடும். இதுபோன்ற மனநிலை மனிதனுக்கும் வர வேண்டும். நம்மிடம் எவ்வளவு உயர்ந்த பொருள் இருந்தாலும், அதை பிறர் நலனுக்காக இழக்க தயங்கக் கூடாது.காளை, அழுத்தம் மிகுந்த நிலத்தை கஷ்டப்பட்டு உழுகிறது. அதற்காக மறுநாள் அது தன் கடமையிலிருந்து விலகுவதில்லை. மனிதனும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், கடமையிலிருந்து விலகக்கூடாது. இதை உலகுக்கு அறிவிக்கவே, காளை மாட்டை தனது வாகனமாக வைத்திருக்கிறார் இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். இன்று தரிசித்தால் செல்வம், மனநிம்மதி நிலைக்கும்.
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ஐந்தாம் நாள் திருவிழா. 27/04/2023
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள் திருவிழாவில் இன்று காலை 9 மணியளவில் மாசிவீதிகளில் தங்கச்சப்பரத்தில் திருவீதியுலா மற்றும் ஸ்ரீ ராமஸ்வாமி ,ஸ்ரீ நவநீத கிருஷ்ணஸ்வாமி மண்டகப்படியில் சுவாமி அம்பாள் எழுந்தருளல்.இரவு 7 மணியளவில் தங்கக்குதிரை வாகனத்தில் வடக்கு மாசி வீதி,கீழமாசி வீதி,அம்மன் சன்னதி வழியாகக் கோயிலுக்குள் வருதல்.
திருவிழா தத்துவம்.
நான்கு கால்களால் குதிரை நிற்பது போல, அறம்,பொருள், இன்பம், வீடுபேறு (மோட்சம்) என்னும் நான்கு கால்கள் வாழ்வைத் தாங்குகின்றன. தர்ம வழியில் தொழில் செய்து, பணம் தேடுபவன் இன்பமாக வாழ்வதோடு, இறைவன் திருவடியை அடையும் பேறு பெறுவான் என்பது இதன் பொருள். திறமை மிக்க வீரன் செலுத்தும் குதிரை இலக்கை அடைவது போல, மனக்குதிரையை அடக்கி சரியான வழியில் செலுத்துபவன் இறைவன் என்பதை இந்த வாகனம் உணர்த்துகிறது. மதுரைக்கும் குதிரைக்கும் மிகுந்த தொடர்பு உண்டு. அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சரான மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் செல்லும் போது, சிவனே குருவாக காட்சியளித்து அருள்புரிந்தார். சுந்தரேஸ்வரர் குதிரை வீரனாக தோன்றி நரியைப்பரியாக்கியும், பரியை நரியாக்கியும் திருவிளையாடல் புரிந்தார். அந்த கோலத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் குதிரை மீதேறி வருகின்றனர். இந்த உண்மையை உணர்ந்து அம்மையப்பரைத் தரிசிப்போம்
Rightu Vidu
Tirumala Tirupati Angapradhakshinam Tickets DECEMBER MONTH 2024
Tirumala Tirupati "December Month" Angapradhakshinam Tickets Will Open On Monday (23/09/2024) At 10:00 AM. Available Dates: 01 Dec To 15 December
16 Dec to 31 December Not Available Due To Margazhi Month
18-9-2024 to 20-9-2024 Electronic DIP Open
1 year ago (edited) | [YT] | 1
View 0 replies
Rightu Vidu
Thiruvenkadu Budhan Sthalam
#thiruvenkadu #budhansthalam #navagrahakovil
2 years ago | [YT] | 0
View 0 replies
Rightu Vidu
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று பன்னிரெண்டாம் நாள் திருவிழா. 4/5/23
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் பன்னிரண்டாம் நாள் திருவிழாவின் நிறைவாக இன்று உச்சி காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்தவாரி மற்றும் தேவேந்திர பூஜை நடைபெறுகிறது மாலை சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர் வருகின்றனர் பதினொரு நாள் திருவிழா வைபவத்தை இதுவரை தரிசிக்காதவர்கள் இன்றைய திருவிழாவில் ரிஷப வாகனத்தை தரிசிப்பது பன்னிரண்டு நாள் திருவிழா தரிசனத்தின் பலன் ஒரே நாளில் பெறலாம் சித்திரை விழாவின் நிறைவு நாளில் வைகையில் நிராடி தரிசித்தால் வாழ்வில் சகல சவுபாக்கியம் உண்டாகும்.
2 years ago | [YT] | 1
View 0 replies
Rightu Vidu
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை திருவிழா இன்று
பதினோராம் நாள் திருவிழா. 03/05/23
மதுரை சித்திரைத் திருவிழாவின் பதினோறாம் நாள் திருவிழாவில் இன்று திருத்தேரோட்டம்.காலை 5.45 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் திருத்தேரிலும், கோயிலுக்குள் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படியிலும்,ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா சுவாமி அம்பாள் எழுந்தருளல்.இரவு 7 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் சப்தாவர்ணச்சப்பரத்தில் திருவீதியுலா.
ஊர் கூடித்தேர் இழுத்தது போல' என்னும் சொல்வர். மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக நடக்கும். ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த விழா நம் பண்பாட்டின் அடையாளம். மன்னர் நகர் வலம் வருவது போல, உலகாளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர். நாயக்கர் காலத்திற்கு முன்பிருந்தே மதுரையில் தேர் பவனி நடந்ததை திருப்பணிமாலை என்னும் நூல் குறிப்பிடுகிறது. 16ம் நுõற்றாண்டில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் தேர் மண்டபத்தைக் கட்டினார். சுவாமி, அம்மன் தேர்கள் ராணி மங்கம்மாளின் பேரனான விஜய ரெங்க சொக்கநாத நாயக்கரால் செய்யப்பட்டவை. சிவபுராணம், திருவிளையாடல் சிற்பங்கள் தேரில் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. தேரில் பவனியின் போது சுவாமிக்கு ஆபரணம் அணிவிப்பதில்லை. பட்டுத்துண்டால் ஆன பரிவட்டம் மட்டுமே கட்டுவர். தேர்பவனி முடிந்ததும், சுவாமிக்கு கிரீடம், ஆபரணம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடக்கும். இரவில் சப்தாவர்ண சப்பர பவனி நடக்கும். தாருகாட்சன், கமலாட்சன்,வித்யுன்மாலி ஆகிய மூன்று திரிபுர அசுரர்களும் ஆணவம் கொண்டு மூவுலகத்தையும் துன்புறுத்தினர். தேர் மீதேறி புறப்பட்ட சிவன், அசுர வதம் நிகழ்த்தி உலகைக் காத்தார். இதை நினைவூட்டும் விதத்திலும் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் தேரில் பவனி வருகின்றனர்.இன்று அம்மையப்பரை தரிசித்தால் ராஜபோக வாழ்வு அமையும்
2 years ago | [YT] | 1
View 0 replies
Rightu Vidu
மதுரை சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாள் 02/05/2023 திருவிழாவில் இன்று காலை 08.35 மணிக்கு மேல் 08.59 மணிக்குள் திருக்கல்யாணம். காலை 6 மணியளவில் நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளி சிம்மாசனத்திலும் கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் நாகப்பச் செட்டியார் கட்டளை மண்டகப்படியிலும் சுவாமி அம்பாள் எழுந்தருளல்.இரவு 7.30 மணியளவில் தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும் நான்கு மாசி வீதிகளில் திருவீதி உலா மற்றும் ஆனந்தராயர் பூப்பல்லக்கு.
மலையத்துவஜ பாண்டியனின் மகளான மீனாட்சிக்கும், கைலாய நாதர் சிவனுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிவன் தலைமையில் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் உள்ளிட்ட எல்லா தேவர்களும் மதுரை நகருக்கு வந்தனர். மங்கல தீபங்கள் ஏந்திய சுமங்கலிகள் தேவர்களை வரவேற்றனர். மணமகளின் பெற்றோர் மலையத்
துவஜபாண்டியன், காஞ்சனமாலை இருவரும் சிவனுக்கு சந்தனம் அளித்து, “எங்கள் மகள் மீனாட்சியை ஏற்று அருள்புரிய வேண்டும்” என வேண்டினர். பிரம்மா தலைமையில் யாக வேள்வி நடந்தது. லட்சுமியும், சரஸ்வதியும் மணப்பெண்ணை அலங்கரித்து அழைத்து வர, சுந்தரேஸ்வரர் அம்பிகையின் கழுத்தில் திருமாங்கல்யம் சூட்டினார். கல்யாணக்கோலத்தைக் கண்குளிர தரிசித்து மகிழ்ந்தனர். இன்று மணக்கோலம் தரிசித்தால் விரைவில் திருமண யோகம் உண்டாகும்.
2 years ago | [YT] | 1
View 0 replies
Rightu Vidu
சித்திரை திருவிழாவின் 1/5/23 ஒன்பதாம் நாளான இன்று காலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மரவர்ணச் சப்பரத்திலும் மாலை மீனாட்சி இந்திர விமானத்தில் திக்விஜயம் செய்கிறாள். பட்டாபிஷேகம் நடந்ததும் மன்னர்கள் வீரத்தை நிலைநாட்ட, எல்லா நாட்டுக்கும் படையெடுத்துச் செல்வர். பாண்டிய இளவரசியான மீனாட்சி திக்விஜயமாகப் போருக்குப் புறப்பட்டாள். அமைச்சர் சுமதியும் உடன் சென்றார். பூலோகம் முழுவதையும் வென்ற அவளின் கவனம் அஷ்டதிக்கு பாலகர் மீது விழுந்தது. இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரை வெற்றி கொண்டாள். அதன் பின் சிவனின் கைலாயம் நோக்கி புறப்பட்டாள். நந்தீஸ்வரர் தலைமையில் வந்த சிவகணங்களுடன் போரிட்டு வென்றாள். இறுதியில் சிவனே போர் புரிய வந்தார். ஒற்றைக்கழல் அணிந்த பாதம், மழு ஏந்திய கரம், மேனி முழுவதும் வெண்ணீறு, செஞ்சடை, நெற்றிக்கண் என அவரது அழகில் மனதை பறி கொடுத்தாள். நாணத்தால் முகம் சிவந்தாள். ’இவரே உன் மணாளர்’ என அசரீரி ஒலித்தது. திக்விஜயம் திருமண வைபவத்தில் நிறைவு பெற்றது. இன்று மீனாட்சியம்மனைத் தரிசித்தால் தேவையற்ற பயம் நீங்கும். மனதில் தைரியம் உண்டாகும்.
2 years ago | [YT] | 3
View 0 replies
Rightu Vidu
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை திருவிழா இன்று எட்டாம் நாள் திருவிழா. 30/04/23
சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று காலை 10 மணி அளவில் தங்கப்பல்லக்கில் கீழச்சித்திரை வீதி தெற்கு ஆவணி மூல வீதி திண்டுக்கல் ரோடு மேல மாசி வீதி விதிகளில் வழியே வலம் வந்து திருஞானசம்பந்தர் ஆதினம் கட்டுசெட்டி மண்டகபடியில் எழுந்தருளிகிறார் பிற்பகல் 3 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பாடகி கோயிலுக்குள் வருதல் இரவு 8.20 மணி மேல் 8.40 க்குள் விருச்சிக லக்னத்தில் அருள்மிகு மீனாட்சி க்கு அம்மன் சன்னிதியில் அறுகால் பிடத்தில் மீனாட்சி பட்டாபிஷேக கோலத்தில் சிம்மாசனத்தில் பவனி வருகிறாள். மலையத்துவஜ பாண்டியன் நடத்திய புத்திரகாமேஷ்டி யாகத்தில் பார்வதி மூன்று வயது குழந்தையாக அவதரித்தாள். தடாதகை எனப் பெயரிட்டு வளர்த்தான் மன்னன். வில்,வாள் பயிற்சி, குதிரையேற்றம் போன்ற 64 கலைகளையும் கற்றுத் தர ஏற்பாடு செய்தான். யாருக்கும் அஞ்சாத வெற்றி மங்கையான தடாதகை பருவ வயதை அடைந்தாள். ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில், மன்னன் மகளுக்கு பட்டம் சூட்டி நாட்டின் இளவரசியாக்கினான். இதனால் பாண்டிய நாடுகன்னிநாடு என்று பெயர் பெற்றது. கண்களை இமைக்காமல் குஞ்சுகளைத் தன் பார்வையால் பாதுகாக்கும் மீன் போல, தடாதகையும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட பெண்ணரசியாக நல்லாட்சி புரிந்தாள். இதனால், மீன் போன்ற கண்களைப் பெற்றவள் என்னும் பொருளில் கயற்கண்ணி மீனாட்சி என சிறப்பு பெயர் பெற்றாள். மதுரையும் தூங்கா நகரம் எனப்பட்டது. ராஜ அலங்கார ஆடை, ஆபரணத்துடன் பாண்டியருக்குரிய வேப்பம்பூ மாலை சூடி பட்டாபிஷேக கோலத்தில் பவனி வரும் அன்னை மீனாட்சியைத் தரிசித்தால் குறை அனைத்தும் தீரும். நிறைவான வாழ்வு அமையும்.
2 years ago | [YT] | 1
View 0 replies
Rightu Vidu
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா இன்று ஏழாம் நாள் திருவிழா. 29/04/2023
சித்திரை திருவிழாவின் ஏழாம் நாளான இன்று காலை 9 மணியளவில்
காலை வழக்கத்திற்கு மாறாக சுவாமி அம்பாளுக்கு பதிலாக ஶ்ரீ பிக்ஷாடனமூர்த்தி மரச்சட்டத்தேர் சப்பரத்தில் ஏறி பிக்ஷை பாத்திரம் ஏந்தி ஊர்வலம் மாலை 7 மணியளவில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் நந்திகேஸ்வரர், யாளி வாகனத்தில் பவனி வருகின்றனர்.ஸ்ரீசைலத்தில் வாழ்ந்த சிலாத முனிவர் சிவன்அருளால் புத்திரபேறு பெற்றார். பிள்ளைக்கு 'நந்தி' என பெயரிட்டு வளர்த்தார். சகல கலைகளிலும் கற்றுத் தேர்ந்த நந்திக்கு, விதிப்படி அற்பாயுளே இருந்தது. இதை அறிந்த சிலாதர் வருந்தினார்.
தந்தையின் வருத்தம் தீர, நந்தி சிவனை நோக்கி தவம் இருந்தார். சிவனருளால் சிவகணங்களுக்கு தலைவராகி ஈஸ்வர பட்டமும் பெற்றார். அதனால் 'நந்திகேஸ்வரர்' எனப்பட்டார்.
கடவுளை நம்பினால் விதி கூட மாறும் என்பதை உணர்த்த நந்திகேஸ்வரர் மீது சிவன் பவனி வருகிறார். யானையும், சிங்கமும் இணைந்த உருவம் யாளி. மதம் பிடித்து அடங்காமல் திரியும் யானையும், தற்பெருமையால் கோபம் கொண்டு அலையும் சிங்கமும் அம்பிகையின் முன் அடங்கிக் கிடப்பது போல, ஆணவம், தற்பெருமை போன்ற கீழான குணம் நீங்கி மனிதனும் கடவுளுக்கு கட்டுப்பட வேண்டும் என்பதை யாளி வாகனம் உணர்த்துகிறது. இந்த தத்துவத்தை உணர்ந்து அம்மையப்பரை தரிசிப்போம்.
2 years ago | [YT] | 1
View 0 replies
Rightu Vidu
மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ஆறாம் நாள் திருவிழா 28/04/2023
மதுரை சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாள் திருவிழாவில் இன்று காலை 7.30 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் தங்கச்சப்பரத்திலும் கோயிலுக்குள் சிவகங்கை ராஜா மண்டகப்படியிலும் சுவாமி அம்பாள் எழுந்தருளல்.இரவு 7.30 மணியளவில் நான்கு மாசி வீதிகளில் தங்க ரிஷபம்-வெள்ளி ரிஷபம் வாகனங்களில் திருவீதியுலா.
திருஞானசம்பந்தர் மூன்று வயது பாலகனாக இருந்த போது, அவரது தந்தை சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். குளக்கரையில் அமர வைத்து விட்டு நீராடக் கிளம்பினார். நீண்ட நேரமானதால் பசியால் வாடிய சம்பந்தர் அழுதார். அவருக்குப் பாலுாட்ட அம்பிகையுடன் சிவன் அங்கு வந்தார். சம்பந்தரை வாரி எடுத்த அம்பிகை பொற்கிண்ணத்தில் ஞானப்பால் கொடுத்து விட்டு அங்கிருந்து மறைந்தனர். கரையேறிய சிவபாத இருதயர், பால் சிந்திய வாயோடு நின்ற சம்பந்தரிடம், 'உனக்குப்
பாலுாட்டியது யார்?' என கோபித்தார். அப்போது சம்பந்தர், 'தோடுடைய செவியன்....' என்ற முதல் தேவாரப் பாடலைப் பாட, அம்மையப்பராக ரிஷப வாகனத்தில் காட்சியளித்தனர்
மேலும் ரிஷப (காளை) ஜீவாத்மாவின் (உலக உயிர்கள்) சின்னம் என்பர். சிவ சன்னதியில் சிவனை நோக்கியபடி காளை படுத்திருக்கும். உயிர்கள் அனைத்தும், சிவபெருமானை அடைவதற்காக, தங்கள் கவனத்தை அவரை நோக்கி செலுத்த வேண்டும் என்பதை இது காட்டுகிறது. இதை தர்மத்தின் சின்னமாக கருதுவர். தர்மம் என்பது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்க வேண்டும். காளை மாடு எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, விவசாய ப்பணி செய்கிறது. இது தொண்டு மனப்பான்மையை குறிக்கும். அருமையான தானியத்தை விவசாயிக்கு கொடுத்து விட்டு வெறும் வைக்கோலையும், இலை தழைகளையும் அது சாப்பிடும். இதுபோன்ற மனநிலை மனிதனுக்கும் வர வேண்டும். நம்மிடம் எவ்வளவு உயர்ந்த பொருள் இருந்தாலும், அதை பிறர் நலனுக்காக இழக்க தயங்கக் கூடாது.காளை, அழுத்தம் மிகுந்த நிலத்தை கஷ்டப்பட்டு உழுகிறது. அதற்காக மறுநாள் அது தன் கடமையிலிருந்து விலகுவதில்லை. மனிதனும் எவ்வளவு கஷ்டம் வந்தாலும், கடமையிலிருந்து விலகக்கூடாது. இதை உலகுக்கு அறிவிக்கவே, காளை மாட்டை தனது வாகனமாக வைத்திருக்கிறார் இன்று சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷப வாகனத்தில் மாசி வீதிகளில் பவனி வருகின்றனர். இன்று தரிசித்தால் செல்வம், மனநிம்மதி நிலைக்கும்.
2 years ago (edited) | [YT] | 1

Load more