sahothayam

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 💐

2 months ago | [YT] | 6

sahothayam

செப்டம்பர் 13, 2025 சிறுவர் மலரில் இடம்பெற்ற பரிசு போட்டிக்கான விடை இதோ! ☺

3 months ago | [YT] | 4

sahothayam

செப்டம்பர் 05, 2025 சிறுவர் மலரில் இடம்பெற்ற பரிசு போட்டிக்கான விடையின் முழுமையான படம் இதோ! ☺

4 months ago | [YT] | 3

sahothayam

ஆகஸ்ட் 30,2025 சிறுவர் மலரில் இடம்பெற்ற பரிசு போட்டிக்கான விடையின் முழுமையான படம் இதோ! ☺

4 months ago | [YT] | 10

sahothayam

Happy New Year 2025! 🥳

1 year ago | [YT] | 14

sahothayam

அன்றாடம் பிரசுரமாகும் 'குறுக்கெழுத்துப் புதிர்' கீழ்காணும் எந்த நாளிதழில் தரம் தேய்ந்து கொண்டே போவதாக உணர்கிறீர்கள்.

1 year ago | [YT] | 4

sahothayam

சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzle | Sahothayam

இடமிருந்து வலம்

1. மனதைக் கவர்வது; மனோகரம்; ஆர்வம்; ருசிகரம்.
5. பதின்ம வயதுப் பெண்கள் சட்டைமேல் அணியும் மேலாடை.
6. பறவை.
8. ஏழ்மை, வறுமை, அவலம்.
11. ஒருவகைத் தானியம்.
17. மங்களம்.
19. மகாத்மா காந்தியின் ------ - சத்திய சோதனை.

வலமிருந்து இடம்

4. தேவாமிர்தம் என்னும் உணவில் ஒளிந்திருக்கும் சர்ச்சை.
7. வானோர்.
12. கர்நாடக இசையில் ஒரு ராகம் - கலைந்துள்ளது.
14. Au என்னும் வேதிக்குறியீடு கொண்ட உலோகம்; ஆரம் (Aurum).
15. மனோபாவனை.
16. ஒன்றன் தன்மை அல்லது வடிவத்தைக் கெடு.
18. மண்ணால் செய்யப்பட்ட அகன்ற வாயையுடைய ஓர் தாழி.

மேலிருந்து கீழ்

1. பிறரது அறிவாற்றலை விமர்சனம் செய்வதற்கு முன் தன்னுடைய அறிவை ----- செய்து கொள்ள வேண்டும்.
2. புலங்களுக்கு இன்பமளிப்பது.
3. நடைமுறை
4. கண்ணன் கோதையை மணம்புரிய, ஆயிரம் யானைகள் புடைசூழ நகர் வலம் வருதல்.
7. நீரலை போன்ற பாடலடிகள் கொண்ட கலிப்பா உறுப்பு.
13. சோற்றின் வடிநீர்.
17. ---- சி‌ற்ப‌ங்க‌ள் எ‌ன்பவை ப‌ண்டைய கால‌த்‌தி‌ல் சு‌ண்ணா‌ம்பா‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டவை.

கீழிருந்து மேல்

9. சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இந்த நிலையில் உள்ள ஒரே உலோகம் பாதரசம்.
10. நர்த்தன வினாயகர் பாட்டு - பொம்ம பொம்மதா... - பெங்களூர் ஏ.ஆர். ----- அம்மாள் குரலில் கேட்பதே அலாதி இன்பம்தான்.
19. உறவினர் - கலைந்துள்ளது.
20. உற்பத்தி செய்யப்பட்ட பொருளை வாங்கி விற்று வியாபாரம் செய்யும் இடம்.
21. நீர்த்துளி.

விடைகள்: நாளை.

1 year ago | [YT] | 5

sahothayam

சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzle | Sahothayam

இடமிருந்து வலம்

1. தெய்வ ------ செய்யாதே! ; அவமதிப்பு.
3. உயிரினம்.
5. ஊருடன் பகைக்கின் ---- கெடும்.
7. விமர்சனம்
9, தாவரங்களைப் பற்றி அறியும் பாடப்பிரிவு.
12. அம்மா - ஆங்கிலத்தில் செல்லமாக.
14. ரெளத்திரம்.
16. நீரில் அல்லது ஆவியில் சூடாக்குவதன் மூலம் வேக வை.
21. அல்-கய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவரின் பிற்பாதி பெயர்.
22. உத்தரம் - ஆங்கிலத்தில்.
23. முடியக் கூடியது.

வலமிருந்து இடம்

8. தொடர்வண்டி.
15. காப்பி, பாக்கு போன்றவைகளின் சுவை.
18. மின் சக்தியை அளவிட பயன்படும் கருவி ----மீட்டர் எனப்படும்.
20. பெண்.

மேலிருந்து கீழ்

1. ஒத்த இடத்தில் ----- கொள்; உறக்கம்.
2. தொண்டு செய்யத் தாமாக முன்வருகிறவர்.
3. சாளரம்.
4. தைரியம்.
5. உளவு.
10. மொழி, இலக்கணம், கலைகள் போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்.
13. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரம்.
15. இதன் சுற்றளவு 2πr அலகுகள்.
17. வீண்; செலவு.
20. முண்டாசு கவிஞர்.

கீழிருந்து மேல்

6. சுவை.
11. யசோத பாலா ! ---குல திலகா ! ராதேகோவிந்தா ! - பக்தி பாடல்.
16. தாயைப் பெற்ற பாட்டி.
18. மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும், காய்ந்த நெற் செடி.
22. பிரேசில் கால்பந்து ஜாம்பவான்.

விடை: இன்று பிற்பகல்

1 year ago | [YT] | 4

sahothayam

சிறப்பு குறுக்கெழுத்துப் புதிர் | Tamil Crossword Puzzle | Sahothayam

இடமிருந்து வலம்

1. குதிரையின் வாய் வடம்.
4. காய்ந்த இலை.
6. ஒரு கடை அல்லது வர்த்தக நிறுவனத்தில் பணத்தை போட்டு வைத்திருக்கும் பெட்டி.
8. சொத்துகளில் அடைமானம் முதலிய பந்தகம்.
9. துர்க்கா தேவி.
12. சிறு குழந்தை.
14. தண்டம்.
17. உண்டிவில்.
19. அகல் விளக்கு.
23. உலக அளவில் சர்வாதிகார தலைவராகவும், சர்ச்சை நாயகனாகவும் திகழ்பவர் வடகொரிய அதிபர் --- ஜாங் உன்.

வலமிருந்து இடம்

3. நிலம், வீடு முதலியவற்றை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வாடகைக்கு விட போடப்படும் ஒப்பந்தம்/உடன்படிக்கை.
10. குழந்தைகள் மற்றும் ஆண்கள் அணியும் சட்டை.
11. குதிரை, மாடு போன்ற வாகனங்கள் இழுக்கும் மிருகங்களின் குழம்புகளுக்கு அடிக்கும் இரும்புத்தகடு.
21. இளம் - ஆங்கிலத்தில்.
22. புதிதாக வருபவரை உணவு முதலியன அளித்து உபசரித்தல்.

மேலிருந்து கீழ்

1. ஒரு வகை நாரத்தை.
2. ஒரு கருத்தை முழுவதுமாக சொற்களாற்கூறும் ஒருகூற்று.
3. விருந்தாளியைக் கண்டால் முதலில் அவரிடம் --- விசாரித்து விட்டே வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுவர்.
7. இடர்.
11. ஒளிரும் அழகு.
12. சுறுசுறுப்பு - எதிர்பதம் - கலைந்துள்ளது.
14. ஒரு வகை வாசனை மரம்.
16. மணிரத்னம் இயக்கத்தில் உருவான தமிழ் திரைப்படம் - மௌன-----.
18. பணத்தை சேர்த்துவைக்க உதவும் நிறுவனம்.
20. உட்பொருள்.

கீழிருந்து மேல்

5. சித்தன்னவாசல் ---- ஓவியங்கள் பிரசித்தி பெற்றவை.
8. முகவரி.
10. தேங்காய்ப் பாலால் செய்யப்படும் ஒரு வகைக் குழம்பு.
13. கிழிந்து மாசடைந்த உடைகள்.
15. தந்தையின் சகோதரரின் மகன்.
22. கண்.

விடைகள் நாளை.

1 year ago | [YT] | 8