இதுவரையில் ஆளுங்கட்சியில் உள்ள யாருமே இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கிறது. அதன் காரணமாக சிங்கள பௌத்த தேசிய இனத்திற்கு அப்பால் தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கு இனம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன என்பதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இலங்கை ஏன் இவ்வாறு வறுமைக்குள், கடனுக்குள் சிக்குப்பட்டது? இன்றைய கையறு நிலைக்கு என்ன காரணம் என்கிற மூல வேர்களைத் தேடி அதற்குத் தீர்வு காண்பதற்குத் தயாராக இல்லை.
எப்போதாவது தீர்வு கிடைக்கும், எப்போதாவது மனம் மாறும், எப்போதாவது சர்வதேசத்தின் கவனம் எங்கள் பக்கம் திரும்பும், நீதி கிடைக்கும் என நம்பிக்கொண்டு பல தசாப்தங்கள் தாண்டியும் காத்திருந்து காலத்தை கரைக்கப் போகின்றோமா? சிங்கள பௌத்த தேசிய வாதத்தை நாங்கள் முழுமையாக விளங்கி இருக்கிறோமா? அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளுக்கு அப்பால் ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
சிங்கள அரசியல்வாதிகள் ஏன் விட்டுக் கொடுக்கிறார்கள் இல்லை என்றால் அவர்களுக்கு எதிர்கால இருப்பு பற்றிய பயம் தான் காரணம். நாடு பற்றிய பிரச்சினை அல்ல. அந்தப் பயத்திற்கு காரணம் வாக்குப் பலம் கொண்ட மக்களும் பௌத்த மதபீடங்களுமே என தெரிவித்தார் அரசியல், சமூக ஆய்வாளரான செல்வின் இரேனியஸ். அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
அபிவிருத்தி என்பது பாலங்கள் வீதிகள் போடுவது, பாரிய துறைமுகங்கள், தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் அமைப்பது இப்படி பல்வேறு விடயங்கள் மட்டும் அபிவிருத்தி அல்ல. இவைகளை உருவாக்கும் போது அது சார்ந்த சமூகத்தின் ஆளுமைகளை மேம்படுத்தாமல் அவர்களை மிக கீழ்நிலையில் அல்லது நெருக்கடி நிலையில் வைத்துக் கொண்டு இவற்றை கட்டுவதாக இருந்தால், இவற்றிலிருந்து அதன் அனுகூலங்களையோ பயன்பாடுகளையோ அந்த மக்கள் அனுபவிக்க முடியாமலோ அணுக முடியாமலோ போகும். "அபிவிருத்தி என்பது சுதந்திரமே" என்று இந்தியாவின் பிரபல பொருளாதார மேதையான அமர்த்தியா சென் கூறியிருக்கிறார். மக்களின் ஆளுமைகளுடைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்களின் இயலாற்றல்களுக்கு எதிராக உள்ள அனைத்து தடைகளையும் தகர்த்து எறிவது தான் உண்மையான அபிவிருத்தியாக இருக்க முடியும்.
இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னான வரலாற்றில் அபிவிருத்தி ஒடுக்குமுறையின் கருவியாக இருந்திருக்கிறது. அல்லது எல்லைப்படுத்தலுக்கான கருவியாக இருந்திருக்கிறது. கடந்த 70 வருடங்களாக இந்த அபிவிருத்திப் புறக்கணிப்புகள் அதனோடிணைந்த அரசியல் குறிக்கோள்கள் எல்லைப்படுத்தல்கள் எல்லாவற்றாலும் தான் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. யுத்தம் அதன் பாதிப்புகளை இன்னும் பல மடங்காக அதிகரித்திருக்கிறது.
அபிவிருத்தி எவ்வாறு வடக்கிலிருந்து அந்தப்பக்கம் கொண்டு செல்லப்பட்டது என்பதற்குப் பின்னால் ஒரு அரசியல் சித்தாந்தமே இருந்தது. வடக்கு மாகாணத்துக்கும், தென் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடல் வழியிலான ஊடாட்டம் மக்களை ஏதோவொரு வழியில் வளப்படுத்துகிறது, வலுப்படுத்துகிறது என்கிற விடயத்தைக் கண்டறிந்த தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அதனை தடுப்பதற்கு செய்த முதலாவது விடயம் தான் கடல் வலய தடைச் சட்டம்.
உள்ளூர் சமூகங்களுடன் எதுவுமே பேசாமல் சிறு சிறு வலைகள் போன்றவற்றை சீனாவின் அல்லது இந்தியாவின் உதவியுடன் வழங்கி விட்டு நாங்கள் மீனவ சமூகத்தின் ஆளுமைகளைக் கட்டியெழுப்புகிறோம் என்று சொல்லிக் கொண்டு தென்னிலங்கையின் பல நாள் படகுகளுக்காக மயிலிட்டி மற்றும் ஏனைய துறைமுகங்களை திறந்து விட்டிருக்கின்றார்கள்.
தமிழ்மக்களை நீண்ட பெரும் கடற்கரையோரங்களில் இருந்து அகற்றி உள்நோக்கி கொண்டு போகின்ற தந்திரோபாயத்தை யுத்தத்தின் ஒரு கருவியாக நேரடியாகவே செய்தார்கள். அந்த மக்கள் இடம்பெயர்ந்து போகும் போது தங்கள் தொழில் சாதனங்கள், உற்பத்தி சாதனங்கள் அனைத்தையும் கடற்கரைகளில் விட்டு விட்டுத் தான் போனார்கள். குருநகரிலும் அமைய இருந்த படகு இறங்குதுறைக்கான வளங்கள் எல்லாம் எவ்வாறு தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன எனபது தொடர்பிலும் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் அரசியல், பொருளாதார ஆய்வாளரான செல்வின் இரேனியஸ்.
"திலீபனைப் போல போராடுவது என்பது தான் வரித்துக் கொண்ட இலட்சியத்துக்கு உண்மையாக இருப்பது, அதற்காக எந்த வலியையும் வேதனையையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பது, அப்படிக் கொஞ்சப் பேர் துணிந்து வந்தால் தமிழரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். திலீபனுக்கான மெய்யான வணக்கம் என்பது திலீபனின் பசியை தாகத்தை விளங்கிக் கொள்வதாகும்.
பாண் மட்டும் சாப்பிடுவதனை ஒரு தவமாகச் செய்த அன்னையரை நானறிவேன். எனவே தமிழ் மக்களின் போராட்டத்தின் தியாகம் என்பது அதற்கு பின்னுக்கு வெளியில் எழுதப்படாத அன்னையரின் தியாகம் இருக்கிறது. இந்த மரபில் இருந்து தான் ஆயுதப் போராட்ட தியாகங்கள் வந்தன. இதன் தொடர்ச்சி தான் திலீபனும். எங்களிடம் அந்த மரபு இன்னும் இருக்கிறது. இன்னும் எங்கள் வீட்டுக்குள் விரதங்கள், உபவாசங்கள் இருக்கிறன. ஆனபடியினால் இது எங்களுக்கு பெரிய வேலையில்லை. முன்னுதாரணம் மிக்கவர்கள் வரும் போது திடீரென்று அது வரும்.
தகவல் புரட்சியின் விளைவாக உருவாகின்ற எல்லாத் தன்னெழுச்சிப் போராட்டங்களுக்கும் அடிப்படை இருக்கிறது. இந்தப் போராட்டங்களுக்கு தலைமைத்துவம் இல்லையென்பது தான் பலவீனம். சித்தாந்த வழிகாட்டல் இல்லையென்பது தான் பலவீனம். அந்தப் பலவீனங்களை அகற்றிவிட்டால் தமிழ்மக்கள் தங்கள் நீதிக்கான போராட்டத்தில் தங்களை ஒரு தேசமாக கட்டமைத்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு போக முடியும்."
கடந்த 26.09.2025 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கைலாசபதி கலையரங்கில் "தமிழ்த் தேசிய அரசியலில் இளைஞர்களின் வகிபாகம்" எனும் தொனிப்பொருளில் அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் ஆற்றிய உரையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Nimirvu
எப்போதாவது தீர்வு கிடைக்கும் எனக் காத்திருந்து கரைந்து போகப் போகின்றோமா?
Link - https://www.youtube.com/watch?v=B2oiF...
இதுவரையில் ஆளுங்கட்சியில் உள்ள யாருமே இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கிறது. அதன் காரணமாக சிங்கள பௌத்த தேசிய இனத்திற்கு அப்பால் தமிழ், முஸ்லீம், மலையக மக்களுக்கு இனம் சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றன என்பதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இலங்கை ஏன் இவ்வாறு வறுமைக்குள், கடனுக்குள் சிக்குப்பட்டது? இன்றைய கையறு நிலைக்கு என்ன காரணம் என்கிற மூல வேர்களைத் தேடி அதற்குத் தீர்வு காண்பதற்குத் தயாராக இல்லை.
எப்போதாவது தீர்வு கிடைக்கும், எப்போதாவது மனம் மாறும், எப்போதாவது சர்வதேசத்தின் கவனம் எங்கள் பக்கம் திரும்பும், நீதி கிடைக்கும் என நம்பிக்கொண்டு பல தசாப்தங்கள் தாண்டியும் காத்திருந்து காலத்தை கரைக்கப் போகின்றோமா? சிங்கள பௌத்த தேசிய வாதத்தை நாங்கள் முழுமையாக விளங்கி இருக்கிறோமா? அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளுக்கு அப்பால் ஒரு தளத்தை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.
சிங்கள அரசியல்வாதிகள் ஏன் விட்டுக் கொடுக்கிறார்கள் இல்லை என்றால் அவர்களுக்கு எதிர்கால இருப்பு பற்றிய பயம் தான் காரணம். நாடு பற்றிய பிரச்சினை அல்ல. அந்தப் பயத்திற்கு காரணம் வாக்குப் பலம் கொண்ட மக்களும் பௌத்த மதபீடங்களுமே என தெரிவித்தார் அரசியல், சமூக ஆய்வாளரான செல்வின் இரேனியஸ். அவர் மேலும் தெரிவித்த விடயங்கள் வருமாறு,
1 month ago | [YT] | 4
View 0 replies
Nimirvu
அபிவிருத்தி என்கிற எண்ணக்கருவை நாங்கள் எவ்வாறு விளங்கியிருக்கிறோம்?
https://www.youtube.com/watch?v=MOdpF...
அபிவிருத்தி என்பது பாலங்கள் வீதிகள் போடுவது, பாரிய துறைமுகங்கள், தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் அமைப்பது இப்படி பல்வேறு விடயங்கள் மட்டும் அபிவிருத்தி அல்ல. இவைகளை உருவாக்கும் போது அது சார்ந்த சமூகத்தின் ஆளுமைகளை மேம்படுத்தாமல் அவர்களை மிக கீழ்நிலையில் அல்லது நெருக்கடி நிலையில் வைத்துக் கொண்டு இவற்றை கட்டுவதாக இருந்தால், இவற்றிலிருந்து அதன் அனுகூலங்களையோ பயன்பாடுகளையோ அந்த மக்கள் அனுபவிக்க முடியாமலோ அணுக முடியாமலோ போகும். "அபிவிருத்தி என்பது சுதந்திரமே" என்று இந்தியாவின் பிரபல பொருளாதார மேதையான அமர்த்தியா சென் கூறியிருக்கிறார். மக்களின் ஆளுமைகளுடைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்களின் இயலாற்றல்களுக்கு எதிராக உள்ள அனைத்து தடைகளையும் தகர்த்து எறிவது தான் உண்மையான அபிவிருத்தியாக இருக்க முடியும்.
இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னான வரலாற்றில் அபிவிருத்தி ஒடுக்குமுறையின் கருவியாக இருந்திருக்கிறது. அல்லது எல்லைப்படுத்தலுக்கான கருவியாக இருந்திருக்கிறது. கடந்த 70 வருடங்களாக இந்த அபிவிருத்திப் புறக்கணிப்புகள் அதனோடிணைந்த அரசியல் குறிக்கோள்கள் எல்லைப்படுத்தல்கள் எல்லாவற்றாலும் தான் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. யுத்தம் அதன் பாதிப்புகளை இன்னும் பல மடங்காக அதிகரித்திருக்கிறது.
அபிவிருத்தி எவ்வாறு வடக்கிலிருந்து அந்தப்பக்கம் கொண்டு செல்லப்பட்டது என்பதற்குப் பின்னால் ஒரு அரசியல் சித்தாந்தமே இருந்தது. வடக்கு மாகாணத்துக்கும், தென் தமிழ்நாட்டுக்கும் இடையிலான கடல் வழியிலான ஊடாட்டம் மக்களை ஏதோவொரு வழியில் வளப்படுத்துகிறது, வலுப்படுத்துகிறது என்கிற விடயத்தைக் கண்டறிந்த தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அதனை தடுப்பதற்கு செய்த முதலாவது விடயம் தான் கடல் வலய தடைச் சட்டம்.
உள்ளூர் சமூகங்களுடன் எதுவுமே பேசாமல் சிறு சிறு வலைகள் போன்றவற்றை சீனாவின் அல்லது இந்தியாவின் உதவியுடன் வழங்கி விட்டு நாங்கள் மீனவ சமூகத்தின் ஆளுமைகளைக் கட்டியெழுப்புகிறோம் என்று சொல்லிக் கொண்டு தென்னிலங்கையின் பல நாள் படகுகளுக்காக மயிலிட்டி மற்றும் ஏனைய துறைமுகங்களை திறந்து விட்டிருக்கின்றார்கள்.
தமிழ்மக்களை நீண்ட பெரும் கடற்கரையோரங்களில் இருந்து அகற்றி உள்நோக்கி கொண்டு போகின்ற தந்திரோபாயத்தை யுத்தத்தின் ஒரு கருவியாக நேரடியாகவே செய்தார்கள். அந்த மக்கள் இடம்பெயர்ந்து போகும் போது தங்கள் தொழில் சாதனங்கள், உற்பத்தி சாதனங்கள் அனைத்தையும் கடற்கரைகளில் விட்டு விட்டுத் தான் போனார்கள். குருநகரிலும் அமைய இருந்த படகு இறங்குதுறைக்கான வளங்கள் எல்லாம் எவ்வாறு தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன எனபது தொடர்பிலும் பல்வேறு தகவல்களையும் பகிர்ந்து கொண்டார் அரசியல், பொருளாதார ஆய்வாளரான செல்வின் இரேனியஸ்.
#srilanka #tamil #development #NorthernProvince #nimirvu #selvin #fisher
2 months ago | [YT] | 1
View 0 replies
Nimirvu
திலீபனின் பசியை தாகத்தை விளங்கிக் கொள்வதே அவருக்கான மெய்யான அஞ்சலியாகும்
https://youtu.be/_zsTMsaXq5c
"திலீபனைப் போல போராடுவது என்பது தான் வரித்துக் கொண்ட இலட்சியத்துக்கு உண்மையாக இருப்பது, அதற்காக எந்த வலியையும் வேதனையையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பது, அப்படிக் கொஞ்சப் பேர் துணிந்து வந்தால் தமிழரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். திலீபனுக்கான மெய்யான வணக்கம் என்பது திலீபனின் பசியை தாகத்தை விளங்கிக் கொள்வதாகும்.
பாண் மட்டும் சாப்பிடுவதனை ஒரு தவமாகச் செய்த அன்னையரை நானறிவேன். எனவே தமிழ் மக்களின் போராட்டத்தின் தியாகம் என்பது அதற்கு பின்னுக்கு வெளியில் எழுதப்படாத அன்னையரின் தியாகம் இருக்கிறது. இந்த மரபில் இருந்து தான் ஆயுதப் போராட்ட தியாகங்கள் வந்தன. இதன் தொடர்ச்சி தான் திலீபனும். எங்களிடம் அந்த மரபு இன்னும் இருக்கிறது. இன்னும் எங்கள் வீட்டுக்குள் விரதங்கள், உபவாசங்கள் இருக்கிறன. ஆனபடியினால் இது எங்களுக்கு பெரிய வேலையில்லை. முன்னுதாரணம் மிக்கவர்கள் வரும் போது திடீரென்று அது வரும்.
தகவல் புரட்சியின் விளைவாக உருவாகின்ற எல்லாத் தன்னெழுச்சிப் போராட்டங்களுக்கும் அடிப்படை இருக்கிறது. இந்தப் போராட்டங்களுக்கு தலைமைத்துவம் இல்லையென்பது தான் பலவீனம். சித்தாந்த வழிகாட்டல் இல்லையென்பது தான் பலவீனம். அந்தப் பலவீனங்களை அகற்றிவிட்டால் தமிழ்மக்கள் தங்கள் நீதிக்கான போராட்டத்தில் தங்களை ஒரு தேசமாக கட்டமைத்துக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு போக முடியும்."
கடந்த 26.09.2025 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கைலாசபதி கலையரங்கில் "தமிழ்த் தேசிய அரசியலில் இளைஞர்களின் வகிபாகம்" எனும் தொனிப்பொருளில் அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் ஆற்றிய உரையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவரது முழுமையான உரை காணொளியில்,
#thileepan #srilanka #tamil #nallur
2 months ago | [YT] | 0
View 0 replies
Nimirvu
வடபகுதி கடல்வளம் தொடர்பிலான மக்கள் சார்ந்த மூலோபாயத்திட்டம் உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டும் #Selvin #fishers #tamil #northernsea
https://www.youtube.com/watch?v=5wlKV...
3 months ago (edited) | [YT] | 2
View 0 replies
Nimirvu
30 ஆண்டுகளாக சிறைகளுக்குள் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் #Tamil #Political #Prisoners #Nimirvu #komagan
https://www.youtube.com/watch?v=Jn0SH...
3 months ago (edited) | [YT] | 2
View 0 replies
Nimirvu
குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க நீங்கள் தயாரா? Selvin #srilanka #nimirvu #tamil
https://www.youtube.com/watch?v=cgUnu...
3 months ago (edited) | [YT] | 2
View 0 replies
Nimirvu
போரின் பின்னரான உளப்பேரதிர்வு - பரம்பரை அலகூடாக அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படும் அபாயம்| #Sivathas #jaffnanews #srilanka
https://www.youtube.com/watch?v=CY1l1...
3 months ago | [YT] | 1
View 0 replies