மக்கள் அனைவரும் ஒருவனை எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் என்றால் அவர்கள் செய்யக்கூடிய நல்லது கெட்டதை வைத்து தான்,
ஒருவனுடைய கெட்ட செயல்களை மட்டுமே கூறிக் கொண்டிருந்தாலும், அவனுடைய நல்ல செயல்களை மறைத்துக் கூறினாலும், மக்கள் அவனைத் தவறாகத்தான் புரிந்து கொள்வார்கள். எனவே ஒரு அரசின் குறைகளை மட்டுமே கூறிக் கொண்டிருந்தால் அதன் நல்ல திட்டங்களை மறைத்திருந்தாலும் மக்களின் மனநிலையில் குழப்பத்தை உண்டாக்கும் அடுத்த முறை அவர்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கும் போது அதனைப் பற்றி அலசி ஆராயும் வழிமுறைகளை இது தடுத்துவிடும்.
யாரை தேர்ந்தெடுப்பது என்று ஒரு கேள்விக்கு உள்ளாக்கிவிடும்.ஒரு அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட பல அமைப்புகளும் நபர்களும் இருப்பின்.
அந்த அரசு நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல ஆளில்லை குறிப்பாக சொன்னால் ( நல்லது சொல்றதுக்கு )ஆள் இல்லை.இந்த நிலையை மக்களிடமிருந்து போக்குவதற்கு இந்த சேனல். அரசின் பல நல்ல திட்டங்களை மக்கள் முன்புகொண்டு சேர்த்து அதன் மூலம் அவர்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உரிமையை அவர்களிடம் வழங்குவதே நமது நோக்கம்.
⚖️வாக்கினிலே உண்மை உண்டு 👨🏻⚖️
வளர்க மக்களாட்சி