அறம் செய்ய விரும்பு, ஸ்ரீ அகஸ்தியர் சேவாஸ்ரம். (வாழ்வியல் கல்வி, பசிக்கு உணவு, பாரம்பரிய வைத்தியம்.)
கல்வி, உணவு, வைத்தியம் இம்மூன்றும் விற்பனைக்கு அல்ல..!
நம்மால் முடிந்த வரை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்வோம்..
அறம் அதாவது நல்ல செயல்கள் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து நினைத்தால் போதும் அந்த நினைவே உங்களை வழி நடத்தும்..
மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக்குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது…
ஸ்ரீ அகஸ்தியர் சேவாஸ்ரம், கோவை.
(வாழ்வியல் கல்வி, பசிக்கு உணவு, பாரம்பரிய வைத்தியம்.)
"ஆரோக்யமும் ஆன்மீகமும்"
இந்த சேனலில் ஆரோக்யம், ஆன்மிகம், இயற்கை மருத்துவம், சித்த மருத்துவம், மனோசக்தி, யோகம், புராணங்கள், சித்தர்கள், சேவைகள், இந்துமதம், பாரத தேசம் பற்றிய பதிவுகள்.....
Contact :-
wa.me/919894012434
Email :-
agasthiyarsevashram@gmail.com
Sevashram – சேவாஸ்ரம்
தொண்டும் துறவும்..
Sri Agasthiyar Sevashram, Coimbatore.
Yogic Science - Astro Healing Therapy
திருப்பாவை மார்கழி 4
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்
ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் (4)
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/mGTZbsHQjXI
பொருள்:
மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே.
கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/mGTZbsHQjXI
விளக்கம்:
ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள்.
ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும்.
இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/mGTZbsHQjXI
திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!
https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1
ஓம் நமோ நாராயணாய..!
21 hours ago | [YT] | 18
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
திருவெம்பாவை மார்கழி 4
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள் நெக்கு நின்றுருக யாம் மாட்டோம் நீயே வந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/PtdDOEn1C_M
பொருள்:
ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண், ""அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்றாள். எழுப்ப வந்தவர் களோ, ""அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும்.
அதன்பின்பு எண் ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது.
இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு, என்று கேலி செய்தனர்.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/PtdDOEn1C_M
விளக்கம்:
இறைவனை அடைய "நான் முந்தி, நீ முந்தி என போட்டி போட வேண்டும். அதை விட்டுவிட்டு, "அவன் என்ன செய்கிறான், இவன் என்ன செய்கிறான்? அவனைப் போலவே உண்டியலில் லட்சம் ரூபாய் போட்டால் கடவுளை அடைந்து விடலாமா?இவனைப் போல் தியானத்தால் அடைந்து விடலாமா? என்று யோசனை செய்து கொண்டிருப்பதால் எந்தப் பலனுமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் தனித் தன்மையை வளர்த்துக் கொண்டு இறைவனை அடைய முயற்சிக்க வேண்டும் என்பது இப்பாடலின் உட்கருத்து.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/PtdDOEn1C_M
Thiruvempavai tamil full lyrics.. திருவெம்பாவை பாடல்கள்...
https://youtu.be/BO5a6Weadvs?sub_conf...
ஓம் நமச்சிவாய..!
21 hours ago | [YT] | 8
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
திருப்பாவை மார்கழி-3
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து
ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய் (3)
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/HbBrqniR-XQ
பொருள்:
சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும்.
மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/HbBrqniR-XQ
விளக்கம்:
திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள்.
திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது. இந்தப் பாடல் திருக்கோவிலூர் (விழுப்புரம் மாவட்டம்) உலகளந்த பெருமாளைக் குறித்து பாடப்பட்டுள்ளது.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/HbBrqniR-XQ
திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!
https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1
ஓம் நமோ நாராயணாய..!
1 day ago | [YT] | 29
View 2 replies
Yogic Science - Astro Healing Therapy
திருவெம்பாவை மார்கழி-3
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 3
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/d5mgtvvm-AE
பொருள்:
முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய்.
ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள்.தூங்கிக் கொண்டிருந்த தோழி, ""ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை.
மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.வந்த தோழியர் அவளிடம், ""அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/d5mgtvvm-AE
விளக்கம்:
ஒருநாள் கோயிலுக்கு போவது, ஆண்டவனை விழுந்து விழுந்து வணங்குவது, மறுநாள் ஏதோ விரக்தியில் அல்லது எதிர்பார்ப்பு நிறை வேறாமல் போனதும் அவனை வணங்குவதை விட்டுவிடுவது...இதெல்லாம் நிஜ பக்தியாக முடியாது என்பதே இந்தப் பாடல் உணர்த்தும் கருத்து.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/d5mgtvvm-AE
Thiruvempavai tamil full lyrics.. திருவெம்பாவை பாடல்கள்...
https://youtu.be/BO5a6Weadvs?sub_conf...
ஓம் நமச்சிவாய..!
1 day ago | [YT] | 23
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
திருப்பாவை மார்கழி 2
வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய். (2)
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/PdUtLLaIu0k
பொருள்:
திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள்.
நெய் உண்ணக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக்கூடாது.
தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/PdUtLLaIu0k
விளக்கம்:
ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும்.
மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத் தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள்.
இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/PdUtLLaIu0k
திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!
https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1
ஓம் நமோ நாராயணாய..!
3 days ago | [YT] | 37
View 2 replies
Yogic Science - Astro Healing Therapy
திருவெம்பாவை மார்கழி 2
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது எப்போ(தும்) இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய். 2
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/oUbCFeEGL48
பொருள்:
""அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது "ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய்.
ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள். உறங்குபவள் எழுந்து தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள்.
அவளுக்கு பதிலளித்த தோழியர் கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான்.
அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக, என்றனர்.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/oUbCFeEGL48
விளக்கம்:
தேவலோகத்தில் சிவபவனி கிடையாது. அவர்கள் சிவனைக் காண வேண்டுமானால் தவம் முதலான கடும் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், நம் ஊரிலோ ஆண்டுதோறும் திருவிழா.
சுவாமி வாசல் தேடி பவனி வருவார். இவ்வளவு அருகில் இறைவன் இருந்தும், அதையும் பார்க்க மறுத்தால் எப்படி என்பது இப்பாடலின் உட்கருத்து.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/oUbCFeEGL48
Thiruvempavai tamil full lyrics.. திருவெம்பாவை பாடல்கள்...
https://youtu.be/BO5a6Weadvs?sub_conf...
ஓம் நமச்சிவாய..!
3 days ago | [YT] | 19
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
திருப்பாவை மார்கழி 1
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் (1)
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/1A6or8KMiRA
பொருள்:
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/1A6or8KMiRA
விளக்கம்:
இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/1A6or8KMiRA
திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!
https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1
ஓம் நமோ நாராயணாய..!
3 days ago | [YT] | 25
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
திருவெம்பாவை மார்கழி 1
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 1
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/YR8V7cg6QUg
பொருள்:
வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/YR8V7cg6QUg
விளக்கம்:
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் மார்கழி அதிகாலையில் பவனி வருகிறார். அவரைத் தரிசிக்க பெண்கள் காத்து நிற்கிறார்கள். தங்களுக்கு கிடைத்த இந்த நற்பேறு தங்கள் தோழிக்கும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையில் அவளை எழுப்புகிறார்கள்.
*பாடல் வரிகளுடன் கேட்க*:-
https://youtu.be/YR8V7cg6QUg
Thiruvempavai tamil full lyrics.. திருவெம்பாவை பாடல்கள்...
https://youtu.be/BO5a6Weadvs?sub_conf...
ஓம் நமச்சிவாய..!
3 days ago | [YT] | 39
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
நாளை மார்கழி மாதத்தின் முதல் நாள்..!
திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி..!
திருப்பாவை முழுவதும் பாடல் வரிகளுடன் பாசுரம் 1 to 30, Thiruppavai songs in Tamil, Thiruppavai Padalgal..!
https://youtu.be/NNjUtLHs4ywsub_confirmation=1
Thiruvempavai tamil full lyrics.. திருவெம்பாவை பாடல்கள்...
https://youtu.be/BO5a6Weadvs?sub_conf...
Thirupalliyehuchi tamil lyrics... திருப்பள்ளியெழுச்சி..!
https://youtu.be/56tb_7nzrMk?sub_conf...
ஹரி ஓம் நமசிவாய..!
4 days ago | [YT] | 42
View 0 replies
Yogic Science - Astro Healing Therapy
யானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில்...
வாழ்க்கை என்பதன் நுட்பங்களை ஒருவன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அத்தகைய நுட்பமான விஷயங்களை உணர்ந்து கொள்ளும் அளவிற்கு ஒருவன் தன் மனதைத் தயார் செய்ய வேண்டும்.
வாழ்வை அதன் போக்கில் வாழ்ந்து விட்டுப் போய்விட வேண்டும் என்று சிலர் வியாக்யானம் பேசுவார்கள்.
அப்படி வாழ்ந்து விட்டுப் போய் விடுவதென்றால் நமக்கும் விலங்குகளுக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும் ?
பிறகு ஏன் பரிணாம வளர்ச்சியில் இயற்கை நமக்கு பகுத்துணரும் ஆற்றலைத் தந்திருக்கிறது ?
எனவே நுட்பங்களை, நுணுக்கங்களை உணரும் அளவிற்கு நம் அறிவை நுட்பமாக மாற்றிக் கொள்வது அவசியமாகும்.
அதற்கு தியானம் பேருதவியாக அமைகிறது.
தியானம், தவம், ஸமாதி பற்றி சொல்லும்போது நம் முன்னோர்கள் வில் வித்தையை ஒப்பிட்டு பேசுகிறார்கள்.
இலக்கு நிர்ணயம், இலக்கில் கவனம், திடம் இது வில் வித்தையின் கோட்பாடு. தவத்துக்கும் இது பொருந்தும்.
சுதந்திரமான சிந்தனையையும் வில்வித்தையோடு பொருத்திப் பார்க்கிறார்கள்.
தூரம், இலக்கு இதற்குத் தக்கவாறு வில்லின் நாணில் அம்பை பொருத்தி பின் நோக்கி இழுக்கிறார் வில்லாளி. வில் இலக்கை தாக்க வேண்டும் என்றால் கை நடுக்கம், மனச்சஞ்சலம், வேறு எண்ணம், மனதை திசை திருபம்பும் பந்தங்கள் இவை யாவும் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம்.
வில்லின் நாண் எந்த அளவுக்கு பின்னோக்கி செல்கிறதோ அந்த அளவு அம்பு வலிமை பெற்று வேகம் அடைகிறது.
தியானத்தின் பணியும் இதுதான். எந்த கருவிலிருந்து எண்ணங்கள் தோன்றுகின்றதோ அந்த மூலத்திற்கு மனதை பின்னோக்கி அழைத்துச் செல்கிறது.
தியானம் கைகூடியவர்களுக்கு மனம் ஆதாரசக்தியோடு கொள்ளும் தொடர்பால் தெளிவாக சிந்திக்கிறது.
அவ்வாறு தெளிவாக சிந்திப்பதற்கு மனோநிலை மற்றும் நரம்புமண்டல அமைப்புகளின் துணை அவசியமாகிறது. நரம்புமண்டலம் களைப்புற்றிருந்தால் சிந்தனையும் களைத்துதான் வெளிவரும்.
மனநிலை பின்னப்பட்டிருந்தால் அதிக துக்கம், அதிக இன்பம், அதிக பரவசம், காமம், மோகம், செருக்கு, வஞ்சகம், சினம் ஆகிய சீர்கேடுகளுக்கு வழிவகுக்கும். ஆக பின்னமுற்ற மனம் களைப்புற்ற நரம்பு மண்டலத்தின் மீது தொழில்படும்போது ஏற்படும் சிந்தனை எப்படி இருக்கும் என்பது சொல்லாமலே புரிகிறதல்லவா ?
மனமும் பின்னப்படாமல் நரம்பு மண்டலமும் வலிமையாக இருந்தால் மட்டும் நலமான சிந்தனை தோன்றிவிடாது. அது ஆதார சக்தியோடு தொடர்பில் இருந்தால் மட்டுமே நலமான சிந்தனைகள் தோன்றும்.
அடுத்து பேச்சு. எவ்வளவு நேரம் பேசுகிறோம் என்பதை வைத்து அதன் இனிமையை தீர்மானிக்க முடியாது. நேர்மை, உண்மை, சாதுர்யம், அறிவு, நுட்பம் இவையெல்லாம் இதயபூர்வமாக இணையும் போதுதான் பேச்சு இனிமையாக அமையும்.
மனதின் அழுக்குகளும், கரிப்புத் தன்மையும், காரமும், முறுக்கும் தியானத்தில் முன்னேற முன்னேற சுத்தமடைகின்றன. சுத்தமடைந்து களங்கம் நீங்கிய மனதில் கரை ததும்பும் சிந்தனை குளிர்ந்த நலம் தரும் பேச்சாய் வெளிவருகிறது.
எந்த விதமான முயற்சியும் இன்றி சுபாவமான சிறப்புடன் ஒரு பூ மலர்வது போன்று பேச்சு இனிமையாக வெளிவருகிறது.
அடுத்து செயல்.
ஒரு செயலின் மேன்மை அதைச் செய்பவன் பண்பு, சூழ்நிலை, அங்கீகாரம் என்கிற மூன்று நில்களால் அமைகிறது. மேலும் இடைவிடாத ஒழுங்கான தூய தியானம் உங்கள் செயலின் நோக்கத்தை முதலில் சுத்திகரிக்கிறது.
செயல் புரியும் ஆற்றலை அது மேம்படுத்துகின்றது அல்லது நெறிப்படுத்துகினது. திட்டமிடுதலில் இருந்து நிறைவேற்றுதல் வரை தூய்மையும் ஆனந்தமும் கிடைக்க துணை நிற்கின்றது.
இறுதியில் பயன்படத்தக்க செயலாக உங்கள் செயலை நிறைவேறச் செய்கிறது. இவ்விதம் தியானமானது சிந்தனை, சொல், செயல் என்றன மூன்று நிலைகளிலும் நல்ல மாறுதல்களை ஏற்படுத்தி உங்களை தன்னம்பிக்கை, மனபலம் உள்ளவராக மாற்றி செயல்வீரராக ஆக்கி வெற்றிக்கு வழிவகுத்து எல்லாவகையிலும் வசீகரமுள்ள ஒருமனிதனாக உங்களை மாற்றித்தருகிறது.
இத்தகைய முயற்சிகள் எப்பொழுதும் உடனே பலனளித்து விடுவதில்லை. நம் வினைப்பதிவுகள், இயல்பு இவற்றின் தரத்திற்கேற்ப பலனை அடைவதில் கால மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றது.
எனவே சாதகர்கள் மற்றவர்களோடு தங்களை ஒப்பிட்டுப் பார்த்து ஏமாற்றத்திற்கு வழிவகுத்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் மனம் விரக்தியடைந்து சாதனத்தை கைவிட்டு விடுகிறார்கள். புதிதாக பிடித்து வரப்பட்ட யானையை பெரிய சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள்.
யானை அந்த சங்கிலியைப் பிடித்து இழுத்து இழுத்துப் பார்க்கும். நாளடைவில் தன்னால் அதை அறுக்க இயலாது என்று அது உணர்ந்து கொள்ளும்.
இதற்கிடையே அதைப் பிணைத்திருக்கும் சங்கிலியை சிறிதாக்கிக் கொண்டே வருவார்கள். இதை அந்த யானை உணரமாட்டாது.
கடைசியாக மிகச் சிறிய சங்கிலிதான் போடப்பட்டிருக்கும். ஆனால், யானையோ தன்னால் அந்த சங்கிலியை அறுக்க முடியாது என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கும்.
யானை மட்டுமல்ல, மனிதனும் இதே நிலையில்தான் இருக்கிறான். ஒரு முறை ஏற்படும் பின்னடைவை நிரந்தரமானது என்றும், இதுவே வாழ்வின் நியதி என்றும், வாழ்வே துயரங்களின் இருப்படம் என்றும் தவறாக எண்ணிக் கொண்டு முடங்கிக் கிடக்கிறோம்.
*இதனால்தான் யானையின் பலம் தும்பிக்கையில், மனிதனின் பலம் நம்பிக்கையில் என்று சொல்லி வைத்தார்கள்...*
எனவே தன்னையும், தன்பலத்தையும் ஒருவன் உணராத வரை வாழ்வில் உன்னதமான இலட்சியத்தையும், வெற்றியையும் இல்வாழ்விலும் சரி தவவாழ்விலும் சரி ஒருவன் அடைய முடியாது.
ஓம் நமச்சிவாய...
வெற்றிகரமான வாழ்க்கை வாழ தன்னம்பிக்கை அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்குவோம்...!
6 days ago | [YT] | 52
View 0 replies
Load more