Irai Sakthi Tamil

"Irai Sakthi Tamil"க்கு வரவேற்கிறோம் — உண்மையை தேடும் ஆன்மீக பயணிகளுக்கான ஒரு ஆன்மிகமான இடம். ஓஷோவின் வார்த்தைகள் மூலம், நாமில் தியானம், காதல், உணர்ச்சி, மற்றும் உள் சுதந்திரத்தை ஒவ்வொரு அதிகாரத்துடனும் ஆராய்கிறோம். மதத்தையும் நம்பிக்கையையும் கடந்தும், விழிப்புணர்வின் சக்தியை கண்டுபிடிப்போம்."🧘🏽‍♀️🪷✨
#oshomeditation
#oshomotivation
#oshotamilspeech
#yogatips
#tamilmeditation
#tamilmotivation
#oshotamilmeditation
#oshotamilmotivation
#ramamahirishitamil
#ramamahirishimeditation
#oshotamil
#meditationtamil
#tamilyoga


Irai Sakthi Tamil

https://youtu.be/hw6Vva2tRGI?si=QyCto...
ஓஷோவின் பார்வையில் மூன்று விதிகள்.| IRAI SAKTHI TAMIL| OSHO

2 months ago | [YT] | 21

Irai Sakthi Tamil

https://youtu.be/VQ9Me7JW8lk?si=hcz_J...
முற்பிறவி எவ்வாறு அறிவது?

2 months ago | [YT] | 21

Irai Sakthi Tamil

ஓஷோவில் இருந்து நீங்கள் மிகவும் விரும்பிய புத்தகம்?

1 year ago | [YT] | 27

Irai Sakthi Tamil

நமது சூரியன் ஓரளவுக்குச் சிறிய நட்சத்திரம். பூமியைவிட அறுபதினாயிரம் மடங்கு பெரியது. ஆமாம், நமது பூமியைவிட அறுபதினாயிரம் மடங்கு பெரிய சூரியனும் ஒருநாள் சாகத்தான் போகிறது.

இன்னும் நாலாயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும் என்று அறிவியல் சொல்கிறது. ஏற்கெனவே வயதாகிப் போய்விட்டதாம். ஆஸ்பத்திரியில் கிடக்கிறதாம்.

ஆனால் நட்சத்திரங்களுக்கு ஏது ஆஸ்பத்திரி? அது இறந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் வெளிச்சம் மறையும். பிறகு பொருண்மை மறையும். பிறகு அதுவும் ஒரு பிளாக் ஹோலாகிப்போகும்.

இப்போது சூரியன் இருக்கும் இடம் ஒரு காலத்துக்கு எதுவுமற்ற ஒன்றாகிப் போகும். பக்கத்தில் இருக்கும் பூமி அதில் மாட்டிக்கொள்ளும். ஒரே கணத்தில் நொறுங்கிப் போகும்.

சூரியனைவிடப் பெரிய நட்சத்திரங்கள் இருக்கின்றன. நமக்குத் தெரிந்த நட்சத்திரங்களைவிடப் பிரம்மாண்டமான நட்சத்திரங்கள் இருக்கின்றன. லட்சக்கணக்கான பெரிய பெரிய நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. அப்படி லட்சக்கணக்கானவை இறந்தும் போயிருக்கின்றன.

விண்வெளிப் பயணத்தில் சந்திரனுக்குப் போய் வந்துவிட்டது அவ்வளவு பெரிய சாதனை அல்ல. அதைவிடப் பிரம்மாண்டமான தூரங்களைக் கொண்டதுதான் பிரபஞ்சம்.

ஆனால் சூரிய மண்டலத்துக்கு அப்பால் போனால் அபாயம்தான். எந்த ஒரு பிளாக் ஹோலிலும் சிக்கிக்கொள்ள நேரிடலாம்.

அப்படிச் சிக்கிக் கொள்வோம் என்பதற்கு எந்த முன்னெச்சரிக்கையும் இருக்காது. விண்கலம் அப்படியே இழுத்துக் கொள்ளப்படும். அவ்வளவுதான். அதைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியாமல் போய்விடும்.

இந்த பிளாக் ஹோல்கள் ஜீவிதத்தின் மறுதலைகள் அவை எதுவுமற்றவை. அப்படி இருந்துதான் ஆகவேண்டும். ஏனெனில் இருத்தலை இல்லாதிருத்தல்தான் சரிகட்ட வேண்டும்.

நட்சத்திரங்கள்கூடப் பிறந்து மறைகின்றவைதான் என்று அறிவியல் சொல்கிறது. அவை பல லட்சம் வருடங்கள் வாழ்கின்றன.

ஆனால் அதுவல்ல கேள்வி. அவை பிறக்கின்றன. எதிலிருந்து பிறக்கின்றன? இந்தக் கணத்தில்கூட நிறைய நட்சத்திரங்கள் தோன்றிக் கொண்டிருக்கின்றன.

பிரசவ வார்டில் நிறையக் குழந்தைகள் பிறந்து கொண்டிருப்பதைப்போலப் பிரபஞ்சத்தில் நிறைய நட்சத்திரங்கள் பிறந்து கொண்டிருக்கின்றன ஏதுமற்றதில் இருந்து தோன்றிக்கொண்டே இருக்கின்றன.

இருந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை. திடீரென ஒரு நெபுலா தோன்றுகிறது. ஏதுமற்றதில் இருந்து புகை தோன்றுகிறது. புகை திரள்கிறது. குளிர்கிறது. மெதுமெதுவாக அடர்த்தி கூடுகிறது.

இதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை ஆவதற்கு ஒன்பது மாதங்கள் ஆவதைப் போலத்தான் லட்சக்கணக்கான ஆண்டுகளாக ஒரு நட்சத்திரம் ஆகிக்கொண்டே இருக்கிறது. ஏதுமற்றது திரண்டு திரண்டு ஒரு நட்சத்திரம் ஆவதற்கு லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன.

பிறகு லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு நட்சத்திரமாக இருக்கிறது. பிறகு செத்துப் போகிறது. பிறகு அப்படியே பரவிப் பரவித் தன் அடர்த்தியை இழந்து இழந்து, ஆவியாகி புகையாகிப் போகிறது.

லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு மரணப்படுக் கையில் கிடந்து ஒருநாள் அந்த நட்சத்திரம் மறைந்து போகிறது.

நட்சத்திரம் இருந்த இடம் இப்போது ஒரு பிளாக்ஹோல் ஆகிப்போகிறது. அப்படி ஆகிப்போன ஹோலுக்கு அருகே போனால் போதும். எதுவும் எதுவுமற்றுப் போகிறது. உட்கொள்ளப்படுகிறது.

ஒரு பிளாக்ஹோல் வெற்றிடத்தில் இருந்து உருவான பொருளை மீண்டும் பெற்றிடத்திற்குள் கரைப்பதற்கு வேலை செய்கிறது.

தோன்றிய எல்லாவற்றிற்கும் இதுதான் நிகழ்கிறது.

தினமும்தான் இப்படி நடக்கிறது. தினமும் நடப்பதால் நமக்குத் தெரிவதில்லை. இப்போது பேசிக் கொண்டிருந்த, நடந்து கொண்டிருந்த சுவாசித்துக் கொண்டிருந்த ஒருவன் செத்துப் போகிறான்.

இருப்பதெல்லாம் அவனுடைய உடல் மட்டுமே. அழுகிப் போகக்கூடிய பொருண்மை மட்டுமே.

என்னவாகி விட்டது. செத்துப் போனான் என்கிறோம். அவன் ஒரு பிளாக் ஹோலுக்குள் போய்விட்டான் அவனிடம் இருந்த ஏதோ ஒன்று எதுவுமற்றதற்குள் போய் மறைந்துவிட்டது.

இறப்பு ஒரு பிளாக் ஹோல்.

__ஒஷோ.

1 year ago | [YT] | 33

Irai Sakthi Tamil

❣️❣️ஓஷோ :--

" முல்லா தனது வீட்டிற்கு வெளியே தரையில் எதையோத்தேடிக் கொண்டிருந்தார்.

அங்கு வந்த அவரது நண்பர்,
' முல்லா, எதை தொலைத்து விட்டு தேடுகிறீர்கள் ? ' என்று கேட்டார்.

' என் வீட்டு சாவியை ' என்றார் முல்லா.

அந்த நண்பரும் முல்லாவுடன் சேர்ந்து தேடினார்.

வெகு நேரம் தேடியும் சாவி கிடைக்கவில்லை.

நண்பர் மீண்டும் முல்லா விடம் கேட்டார்,
' எங்கு தொலைத்தீர்கள் என்ற ஞாபகம் இருக்கிறதா ? '

' இருக்கிறது. வீட்டிற்கு உள்ளே. '

அதிர்ச்சி அடைந்த அந்த நண்பர்,
' பிறகு எதற்கு வீட்டுக்கு வெளியே தேடுகிறீர்கள் ? ' என்றார்.

முல்லா அப்பாவித்தனமாக சொன்னார்,
' வீட்டிற்கு வெளியேதான் வெளிச்சமாக இருக்கிறது.
வெளிச்சத்தில் தேடினால்தான் எதுவும் கிடைக்கும்.'

அன்பே !

நானும் அதைத்தான் உன்னிடம் கேட்கிறேன்.

ஞானத்தின் சாவியை எங்கே தேடுகிறாய் ?

உனக்குள்ளா ?
அல்லது
வெளிச்சமாக இருக்கிறது என்று வெளியேயா ? "

--- ஓஷோ.❣️❣️

3 years ago | [YT] | 52

Irai Sakthi Tamil

Have you ever seen a house without the foundation? The lower is the foundation of the higher. The lower and the higher are not separate. They are one -- rungs of the same ladder.
The higher is not against the lower.
The lower makes it possible for the higher to exist.

Osho

3 years ago | [YT] | 41

Irai Sakthi Tamil

*நம் சந்தோஷம் என்பது !!*

எவனோ செத்தால் ?? எதுவோ அழிந்தால் ?? எதுவோ தண்டிக்கபட்டால் மட்டும் அனுபவிப்பதற்காக இல்லை !!

அது உங்கள் இயல்பு ...
இயல்பில் அனுபவிக்காத சந்தோஷத்தை ஏதோவொரு துக்கத்தில் தான் அனுபவிபீர்கள் என்றால் ..

அவையே உங்கள் வாழ்வில் நடக்கும் !! உங்கள் விருப்பம் அது என்பதால் !!

எதை விரும்பினாலும் கொஞ்சம் யோசித்து விரும்புங்கள் ...

3 years ago | [YT] | 61

Irai Sakthi Tamil

ஞானம் என்பது பிறப்புரிமை*.

அதைத் தவற விடுபவன் முட்டாள்.

ஏற்கனவே நீ பல பிறவிகளாகத் தவறவிட்டுவிட்டாய்.

இந்த முறை *தயவுசெய்து நீ உன்மீது கொஞ்சம் கருணையோடு இரு*.

ஓஷோ

3 years ago | [YT] | 56