உங்கள் ஆதங்கம், கஷ்டம் எனக்கு புரிகிறது. கோவில் கொள்ளைக் காரர்களின் கூடாரம் ஆகிவிட்டது. 😡
4 months ago | 2
என்னைப் போன்றவர்கள் இறைவனுக்காக போராடும் உங்களின் தைரியத்தையும் முயற்சியையும்கண்டு பெருமைதான் படமுடிகிறது ஏனெனில் மிகவும் வயதானதினாலும் குடும்ப நலன் மட்டுமே செய்ய முடியும் உங்களுக்கு தங்களால் முடிந்த அளவாவது இளைஞர்கள் செய்ய முன்வந்து உங்களைப் போன்ற அறிவாற்றல் மிக்கவர்களாக இருந்தால் அவர்கள். பிறந்த பயனை அடைவார்கள்
4 months ago
| 3
Sir There is merit in your persuasion. I am sure T.R.Ramesh will be selective in his future communion. J.krishnamohan
4 months ago | 5
ஐயா சொல்வது மிகவும் சரியே. சங்கர் ஒரு பச்சோந்தி. முந்தைய நாள் திமுக, நேற்று அதிமுக, இன்று விஜய் என்று மாற்றி மாற்றி பேசக்கூடிய நபர். மேலும் அவர் பேசுவது முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே. அவரது பார்வையாளர்கள் கோயிலுக்கு போனாலும் கோயிலைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். திரு ரமேஷ் ஜிக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்தது என்று தெரியவில்லை.
4 months ago | 1
Here is a man RRN is an authority in Thirukkural. Long live RRN.
4 months ago | 3
திராவிடதாஸன், பிராமண துவேஷி, அவனுக்குப் பேட்டி கொடுப்பதால் ஒன்றும் மாறப் போவதில்லை. தற்போது அவனுக்கும் திமுகவிற்கும் உரசல். அதனால் அநிதுயை நோண்ட ஆரம்பித்திருக்கிறான். கோவிலைப் பற்றிய எந்த ஓரு புரிதலும் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தான். 100% நாத்திகன். அதில் கமெண்ட் செய்தவர் எவருக்கும் அநிது பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லை.
4 months ago (edited) | 1
உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறது! ஆதிசேஷன் அவதாரமோ! Comment box comment போடத்தானே! இன்று எல்லாருமே நீதிபதியாகவும் கண்ணகியாகவும் இருந்து விட முடியுமா! தமிழ் நாட்டில் தானே முதல் சைவ, வைணவ கோவில்கள் அமைந்துள்ளன! இப்படி எத்தனையோ சிறப்புக்கள் உள்ள மாநிலம் இன்று எல்லா விதத்திலும் சீரழிந்து கொண்டிருக்கிறது! உங்களை போன்ற உண்மை போராளிகள் ஆன்மீகத்தில் அற்புதமாக உயிரை பணயம் வைத்து பாடுபடுகிறீர்கள்! எங்களால் முடிந்ததெல்லாம் உங்கள் நலனுக்காக இறையருளை வேண்டுவது ஒன்றே! அதைச் சொன்னாலும்! கோபம் என்றால் மனதோடு நிறுத்திக் கொள்கிறோம்! ஓம் நமோ நாராயணாய!🙏
4 months ago | 1
Our Temples - Rangarajan Narasimhan
நேற்று @SavukkuOfficial சேனலில் @trramesh ஒரு நேர்காணல் கொடுத்துள்ளார். இது துரதிஷ்டவசமானது.
சங்கர் போன்றவர்கள் சங்காத்தம் ஆத்திகர்களுக்கு கூடாது.
இதை நான் சொன்னால், சிலர்
(1) "உனக்கு பொறாமை" என்கிறார்கள்.
(2) "பலருக்கும் போய் சேருமே. சவுக்குக்கு சேனலை நிறைய பேர் பார்க்கின்றனர்" என்கிறார்கள்.
(3) "காரியத்தை எப்படியும் சாதித்துக் கொள்ள வேண்டும்" என்கிறார்கள்
(4) "அவரையும் ஏன் குறை சொல்கிறீர்கள்" "உனக்கு குறை சொல்வதை விட வேறு தெரியாது" என்கிறார்கள்.
ஒவ்வொன்றாக பார்ப்போம்
முதலாவது குற்றச்சாட்டு: இது குப்பை குற்றச்சாட்டு. ஒன்றும் செய்யாத குண்டுசட்டி குதிரைகள் கமெண்ட் அடிக்க வேண்டும் என்று சொல்வது. புறம்தள்ளுகிறேன்
2வது: பலருக்கு போய் சேர்ந்துவிடும். சரிதான். சேர்ந்த பின்? அந்த பலரும் அடுத்த நாளிலிருந்து கோவில்களில் நடக்கும் முறைகேடுகளை கேட்கப் போகின்றனரா? அல்லது புகார் எழுதப் போகின்றனரா?
இந்த பலருக்கும் போய் சேர்ந்து என்ன பயன்? அதுவும் போயும் போயும் இந்த சங்கர் சேனலை பார்ப்பவர்கள்! ஊர் வம்பு பேசுபவர்கள்தான் அவன் சேனலை பார்ப்பார்கள். இவர்களால் என்ன லாபம்!
அப்படியே பார்த்து அவர்களுக்கு ஜ்ஞானோதயம் பிறந்துவிடப்போகிறது.
கடந்த 10-12 ஆண்டுகளாக நானும் @trramesh அவர்களும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். நீதிமன்றத்தில் எங்களுடைய கேஸ் கட்டுகளை எடுத்து வர கூட ஒருவரும் வந்ததில்லை. அது கொஞ்சம் நஞ்சமல்ல என்பது நீதிமன்றம் சென்றவருக்கு தெரியும்
இதை பார்த்துவிட்டு ஒரே ஒருவர் @trrameshஐ கூப்பிட்டு நான் உங்களுக்கு எடுபிடியாக இருக்கிறேன் என்றாவது சொல்வார்களா?
அப்படியே பலருக்கும் போய் சேர்ந்தவுடன், கோவில்கள் பளிச்சென்று ஆகிவிடுமா? கோவிலுக்கு போகுமவன் பெருமானிடம் தனக்கு என்ன வேண்டும் என்று கேட்க போகிறானே ஒழிய கோவில் எப்படி போனால் என்ன?
மயிலை கபாலி கோவிலில் மயில் அம்மன் திருடப்பட்டு போலி மயிலுக்கு 21 வருடங்களாக போலி பூஜை நடக்கிறது. கேட்க நாதியில்லை. அப்படியே சட்டப்பிறிவுகளை பார்த்து நாளைக்கு பொங்கிடப்போகிறார்கள் பாருங்ள்
3வது: ஒரு காரியத்தை சாதிக்கும் முறையும் முக்கியம். எந்த காரியமும் சங்கர் சேனலில் பேசுவதால் சாதிக்க முடியாது. அவன் ஒரு ப்ராஹ்மண த்வேஷி. நாளைக்கே @trramesh மீது பழி பேசுவான்.
போகும் இடம் மட்டும் முக்கியமில்லை. வழியும் முக்கியம் என்பதுதான் சநாதன தரமம்.
இது கூடா நட்பு. பேட்டியின் முடிவில் அவனை பார்த்ததில் சந்தோஷம் என்கிறார். புரியவில்லை எனக்கு.
சில காலங்களுக்கு முன் @annamalai_k செய்துவிடுவார் என்று அவருக்கு இவர் வழக்கின் விவரங்களை கொடுத்தார். ஆனால் அவரோ!!!!!!!!!! அண்ணாமலை ஒரு விதத்தில் நல்லவர். அவருக்கும் இவனுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.
மத்தியில் அரசு பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க.விடம் நடக்காத விஷயம் இந்த பச்சோந்தி தற்குறி சங்கரிடம் கிடைக்க போகிறதா என்ன?!
4வது: தி.மு.க. செய்வதைச் அண்ணாமலை சொன்னால் சூப்பர் என்றும், அதை நீதிமன்றத்தில் நான் சொன்னால் அதை குறை என்றும் சொல்லும் மக்களை என்ன என்று சொல்வது.
குறை இருப்பதனால் சொல்கிறேன். இல்லை என்றால் சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு
இதெல்லாம் குண்டுசட்டி குதிரைகளுக்கு எப்படி தெரியும்!
என்னை குறை சொல்கிறேன் என்று குறை சொல்லும் எவருக்கும் என்னை எதுவும் சொல்ல துளியும் தகுதியில்லை என்பது என் கருத்து.
இவர்களை பற்றி வள்ளுவர் சொல்வது
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
செயல்படாததார்கள் கண்ணோட்டமில்லாத கண் போன்றவர்கள்.
எதையாவது வாழ்க்கையில் செய்துவிட்டு இதை இப்படி செய்ய வேண்டும் என்று சொல்பவர்களை நான்மதிப்பேன். ஆனால் ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பொழுது போக வேடிக்கை பார்த்துவிட்டு "இவர் இப்படி செய்ய கூடாது. அப்படி செய்ய வேண்டும்" என்று திண்ணை பேசும் மனிதர்களுக்கு என்னிடம் மதிப்பு இல்லை. அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு வித்தியாசமும் இல்லை என்பது என் கருத்து.
உலகத்தாருக்கு தெரிந்து பயனில்லை. தெரிந்தவர் தெரிந்ததை நடைமுறை படுத்தவில்லை என்றால் தெரிந்தும் தெரியாதவர்களே!!
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
4 months ago | [YT] | 179