Mukkulathor Media

*பாண்டிய மறவர்களால் கட்டப்பட்ட
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அம்பலவாண சுவாமி கோயிலில் செப்டம்பர் 8 ம்(2024) தேதி கும்பாபிஷேகம்*                

திருநெல்வேலி மாவட்டம், மானூரில் 7ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்ரீ மாறன் ஸ்ரீ வல்லபன் என்ற சீவலமாற பாண்டிய மறவர்களால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அம்பலவாண சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டுகளுடன் அமைந்த இக்கோயிலானது, சுவாமி நெல்லையப்பருக்குரிய ஆறு சபைகளில் ஒன்றாகும். இங்கு சுவாமி நெல்லையப்பரின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணிமூலத் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதில், " கருவூர்சித்தரை, இறைவனே தேடிவந்து காட்சி கொடுத்து சாப விமோசனம் பெறும் நிகழ்வு" முக்கியமானதாகும்.
இக்கோயிலில், கடைசியாக சுமார் 117 வருடங்களுக்கு முன்பாக திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்றதாக குறிப்புகள் உள்ளன. அதன்பின் இதுவரை திருப்பணிகள் எதுவும் நடைபெறாததால், கோயிலின் கோபுரங்கள் மற்றும் கட்டிடங்கள் சிதிலமடைந்தன.
மேலும், இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தற்போது, தமிழக அரசு இக்கோயிலின் திருப்பணிகளுக்கென ரூபாய் 69 லட்சம் நிதி ஒதுக்கியது. அதனைத்தொடர்ந்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இக்கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திருப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இதன் ஒரு பகுதி திருப்பணியை நெல்லை எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் துவக்கி வைத்தார். அதன்பின் கடந்த அக்டோபர் மாதம் இக்கோயிலில் பாலாலயமும் நடைபெற்றது.
தொடர்ந்து இக்கோயிலில், திருப்பணிகளாக  கோபுர வேலைகள், மேற்கூரை புதுப்பித்தல், வயரிங், சுற்றுச்சுவர் கட்டுதல் போன்ற பணிகளும் நடைபெற்று வருகின்றது. சுமார் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், இக்கோயிலில் வருகின்ற செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி சனிக்கிழமையன்று இரவு 9 மணியிலிருந்து 10 மணிக்குள் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்து வைக்கப்படுகிறது. 
தொடர்ந்து 8ஆம் தேதி (ஆவணி 23 ) ஞாயிற்றுக்கிழமையன்று, காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருக்கோயில் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
    இந்நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி யன்று இக்கோயிலில் ஆவணி மூலத்திருவிழா நடைபெற உள்ளதால், அதற்கு முன்னதாகவே கும்பாபிஷேகம்
செய்ய திருக்கோயில் நிர்வாகம் முடிவெடுத்திருப்பதை அறிந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் 
பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

1 year ago | [YT] | 61