தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமி குரு மகராஜரின் உடல் நிலை அறிவிப்பு
முகாம்: ஹிராநந்தானி, சென்னை 18 ஆகஸ்ட் 2023
தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமி குரு மகராஜரின் அன்பான சீடர்களே! மற்றும் நலம் விரும்பிகளே!!
எங்கள் பணிவான வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லா புகழும் ஸ்ரீல பிரபுபாதருக்கே! எல்லாப் புகழும் குரு மற்றும் கௌரங்கருக்கே!! !
குரு மஹராஜாவுக்கு செந்நிற இரத்த அணு (haemoglobin) குறைவாக இருந்ததால், இரும்புச்சத்து பெறுவதற்காக 16/8/23 அன்று ரேலா மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவர் ரேலா மருத்துவமனையில் இரும்புச்சத்து சிகிச்சையின் எந்தவித சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக முடித்தார். குரு மகராஜர் சிகிச்சை முடிந்தவுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். வரவிருக்கும் வாரங்களில் அவருக்கு இன்னும் சில முறை இதே சிகிச்சை தேவைப்படும், மேலும் இது அவரது செந்நிற இரத்த அணு(haemoglobin) அளவையும் அதிகரிக்கும் மேலும் குரு மகராஜர் கூறுவதை போல் சோர்வாக உணர்வதும் குறையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
புதிய மருந்துகளால் குரு மகராஜாவின் ரத்த தட்டுகளின் (Blood Platelets) அளவு அதிகரித்துள்ளதால் மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குரு மகராஜரின் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களில் ஒருவரான சந்திரசேகரை சந்தித்தார். அவர் வீட்டில் குரு மகராஜாவை மதிப்பீடு செய்து மேலும் சில பரிசோதனைகளை பரிந்துரைத்தார்.
சிறுநீரகம் தொடர்பான இரத்தப் பரிசோதனைகள் மெதுவாக மேம்பட்டு வருகின்றன, ஆனால் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
குரு மஹராஜாவின் மார்பின் ஊடு கதிர் (x-ray) நுரையீரலில் சிறிது நீர் கட்டியுள்ளதை காட்டியது, இதன் காரணமாக அவரது ஆக்ஸிஜன் அளவு சிறிது குறைந்துள்ளது மற்றும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த நீர் கட்டை அகற்றுவதற்கான மருந்துகளை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர்.
குரு மகராஜரின் உடல்நிலை விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் அனைவருக்கும் நன்றி,
ஜேபிஎஸ் மருத்துவ குழு ஜேபிஎஸ் சேவை குழு சார்பாக மஹாவராஹ தாஸ்
Jayapataka Swami Tamil
தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமி குரு மகராஜரின் உடல் நிலை அறிவிப்பு
முகாம்: ஹிராநந்தானி, சென்னை
18 ஆகஸ்ட் 2023
தவத்திரு ஸ்ரீல ஜெயபதாக சுவாமி குரு மகராஜரின் அன்பான சீடர்களே! மற்றும் நலம் விரும்பிகளே!!
எங்கள் பணிவான வணக்கங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.
எல்லா புகழும்
ஸ்ரீல பிரபுபாதருக்கே!
எல்லாப் புகழும் குரு மற்றும் கௌரங்கருக்கே!! !
குரு மஹராஜாவுக்கு செந்நிற இரத்த அணு
(haemoglobin) குறைவாக இருந்ததால், இரும்புச்சத்து
பெறுவதற்காக 16/8/23 அன்று ரேலா மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
அவர் ரேலா மருத்துவமனையில் இரும்புச்சத்து சிகிச்சையின் எந்தவித சிக்கலும் இல்லாமல் வெற்றிகரமாக முடித்தார். குரு மகராஜர் சிகிச்சை முடிந்தவுடன் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். வரவிருக்கும் வாரங்களில் அவருக்கு இன்னும் சில முறை இதே சிகிச்சை தேவைப்படும், மேலும் இது அவரது செந்நிற இரத்த அணு(haemoglobin) அளவையும் அதிகரிக்கும் மேலும் குரு மகராஜர் கூறுவதை போல் சோர்வாக உணர்வதும் குறையும் என்று நாங்கள் நம்புகிறோம்.
புதிய மருந்துகளால் குரு மகராஜாவின் ரத்த தட்டுகளின் (Blood Platelets) அளவு அதிகரித்துள்ளதால் மருத்துவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குரு மகராஜரின் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்களில் ஒருவரான சந்திரசேகரை சந்தித்தார். அவர் வீட்டில் குரு மகராஜாவை மதிப்பீடு செய்து மேலும் சில பரிசோதனைகளை பரிந்துரைத்தார்.
சிறுநீரகம் தொடர்பான இரத்தப் பரிசோதனைகள் மெதுவாக மேம்பட்டு வருகின்றன, ஆனால் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
குரு மஹராஜாவின் மார்பின் ஊடு கதிர் (x-ray) நுரையீரலில் சிறிது நீர் கட்டியுள்ளதை காட்டியது, இதன் காரணமாக அவரது ஆக்ஸிஜன் அளவு சிறிது குறைந்துள்ளது மற்றும் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த நீர் கட்டை அகற்றுவதற்கான மருந்துகளை மருத்துவர்கள் தொடங்கியுள்ளனர்.
குரு மகராஜரின் உடல்நிலை விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் அனைவருக்கும் நன்றி,
ஜேபிஎஸ் மருத்துவ குழு ஜேபிஎஸ் சேவை குழு சார்பாக
மஹாவராஹ தாஸ்
2 years ago | [YT] | 1