கவிமணிமேகலை

வார்த்தைகள் உதிர்பவையல்ல உதட்டில்!
வார்த்தைகள் உதிக்கின்றன உள்ளத்தில்!

உதட்டில் உதிர்பவையல்ல வார்த்தைகள்!
உள்ளத்தில் உதிக்கின்றன வார்த்தைகள்!

குறிப்பிட்ட ஒன்றை சாராது கலவையான கவி படைக்கவே(படிக்கவே) விருப்பம். அதன் தொடக்கமே இந்த வலையொளி காட்சிப்பதிவு. ஆகச்சிறந்த படைப்பு, ஆசையை தூண்டும் இந்த படைப்பு என்று உறுதி கூற மாட்டேன். ஏனெனில் இவை அனைத்தும் எண்ண உதிரல்களின் கோர்வைகள், ஏதேனும் பிழை இருந்தால் பொறுக்கவும்.

கவியையும் கூறி காட்சியும் காட்டினால் கற்பனை அற்றுப்போகும் கேட்பவர்களுக்கு, ஆதலால்

கண்களுக்கு கொடுக்க விருப்பமில்லை விருந்து. காதுகளுக்கும் அதனூடாய் உங்கள் கற்பனைகளுக்கும் கொடுக்க நினைக்கிறேன் இக்கவி விருந்து.

நான் கவி கதைப்பது, அது உங்கள் காதுகளின் வாயில் வழிச்சென்று கற்பனையில் காட்சிகளாய் விரிய வேண்டும் என்பதே எனது எண்ணம். அதில் நான் திண்ணம். பாதகம் ஏதுமில்லாமல் உங்களுக்கு சாதகமாய், உங்கள் அனைத்து பணிகளையும் செய்துகொண்டே கேட்கலாம். இனி உங்கள் காதில் கவிதைகள் கரைபுரளும்.

என்றும் உங்களுடன் நம் தமிழின் "தாசனாய்"நான்!

மகிழ்ச்சி!🙏🏻
😊