பார்ப்போம், மகிழ்வோம், விரும்புவோம், பகிர்வோம், சொல்வோம்...


News Dappa

அமெரிக்கன் விமானத்தில் தீ - 189 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்

youtube.com/shorts/UPWY0hJatD...

#denver #airport

4 months ago (edited) | [YT] | 0

News Dappa

தினமும் காலை 10 மணிக்கு பொதுமக்களின் குறைகளை கேட்கும் அதிகாரிகள் ! !

3 ஆண்டுகள் junior வேலை... அப்புறம்தான் Enrollment பண்ணமுடியும் ? ?

இந்தியாவில் இருந்த அதிகாரிகளை MI 5 மூலம் கண்காணிக்கும் முறை ...

நிர்வாக பணியில் இருந்தவர்கள் சட்டம் படிக்காமலேயே மாவட்ட நீதிபதி ஆக்கப்பட்டனர் 😮 😮

பிரிட்டீஷ் நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்க்காத இந்தியர்கள்.....

ஆச்சரியமளிக்கும் தகவல்களுடன் தொகுப்பாளினி லில்லி மட்டுமல்லாமல், நமது விழிகளையும் விரியவைக்கும் வகையில் விவரிக்கிறார் மூத்த வழக்கறிஞர் N. சந்திரசேகரன்

https://youtu.be/Qj0U1hX_Alk?si=38lnL...

-- *இப்படிக்கு இவர்கள்*

5 months ago | [YT] | 0

News Dappa

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை CBI விசாரணைக்கு மாற்றக் கோரி அவரது சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி தனது வீட்டின் அருகே ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில், இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

செம்பியம் காவல் நிலையத்தினர் நியாயமாக விசாரிக்கவில்லை என குற்றம்சாட்டி, வழக்கின் விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரும், BSP மாநில பொது செயலாளருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்த சகோதரர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் பல அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்து வரும் நிலையில், தமிழ்நாடு காவல்துறை இந்த வழக்கை சுதந்திரமாக விசாரிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கொலையில் தொடர்புடைய 'சம்போ' செந்தில் மற்றும் 'மொட்டை' கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான முழுமையான நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை எடுக்கவில்லை என்பதால், விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

#ஆர்ம்ஸ்ட்ராங் #Armstrong #bsp #highcourt

5 months ago | [YT] | 1

News Dappa

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவனுக்கு ஆதரவாக, கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி அரியலூர் மாவட்டம் இலந்தை கூடம் பேருந்து நிறுத்தம் அருகில், தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இரவு 10 மணிக்குள் பிரச்சாரத்தை முடிக்க வேண்டும் என்ற தேர்தல் விதியை மீறி, நான்கு நிமிடங்கள் கூடுதலாக பிரச்சாரம் செய்ததாக, திருமாவளவனுக்கு எதிராக அரியலூர் மாவட்டம் வெங்கனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் விசிக தலைவர் தொல். திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி P.வேல்முருகன், மனுதாரர் தொல்.திருமாவளவன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக் கொண்டு, அவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

#vck #tholthirumavalavan #thirumavalavan #MadrasHighCourt #MadrasHC

5 months ago (edited) | [YT] | 0

News Dappa

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை மீறினால், ஒட்டுமொத்த காவல் துறையினரும் பொறுப்பாக்கப்படுவதுடன், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும் என காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பாலியல் வன்கொடுமை தொடர்பாக சென்னையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் புலன் விசாரணையை விரைந்து முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நபர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி P.வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் இடம்பெற்றுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, அந்த உத்தரவை புலன் விசாரணை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என அதிருப்தி தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும் எனவும், இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என காவல் துறையினருக்கு, தமிழ்நாடு DGP-யும், சென்னை மாநகர காவல் ஆணையரும் அறிவுறுத்தல்கள் பிறப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மீறினால் ஒட்டுமொத்த காவல் துறையினரும் அதற்கு பொறுப்பாக்கப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த நீதிபதி, இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கும்படி, சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வழக்கை முடித்து வைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.

#high court #pocso #judgement #identity #courtnews

5 months ago | [YT] | 0

News Dappa

TASMAC vs ED - அரசு மனு வாபஸ் & டாஸ்மாக் மனுவில் ஆவணங்களை தாக்கல் செய்ய EDக்கு உத்தரவு

======

ED சோதனை : TNGovt தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்று, திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய MadrasHC அறிவுறுத்தல்

தங்களிடம் அனுமதி பெறாமல் எந்த விசாரணையையும் அமலாக்கத்துறை நடத்தக் கூடாது என்ற கோரிக்கையை திருத்தி புதிதாக மனுத்தாக்கல் செய்ய அரசுக்கு அறிவுறுத்தல்

======

EDசோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக் கோரி TASMAC தாக்கல் செய்த 2 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது

விசாரணை, சோதனை என்ற பெயரில் ஊழியர்களை தொந்தரவு செய்ய அமலாக்கத் துறைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டுமென TASMAC கோரிக்கை வைத்திருந்தது

தனி நபரிடம் விசாரணை நடத்துவதுபோல ஒரு நிறுவனத்திடம் விசாரிக்க முடியுமா? ஒரு நிறுவனத்தின் வாட்ச்மேன் முதல் எம்.டி. வரை 60 மணி நேரத்திற்கும் மேல் (மார்ச் 6 - 8) விசாரணை என்ற பெயரில் ஒரே இடத்தில் முடக்க முடியுமா? விசாரணை மகஜரிலும் முறையாக குறிப்புகள் இல்லையே? - நீதிபதிகள்

Tasmac சோதனை தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை திங்கட்கிழமை (மார்ச் 24) வரை மேற்கொள்ள வேண்டாம் என அமலாக்கத் துறைக்கு ஐகோர்ட் வாய்மொழி அறிவுறுத்தல்

வழக்கு மார்ச் 25 தள்ளிவைப்பு

சோதனை தொடர்பான ஆவணங்கள், ECIR ஆகியவற்றை தாக்கல் செய்யவும் #madrasHighCourt உத்தரவு

#MadrasHighCourt
#Madras HC #Tasmac tamilnadu #ed #Enforcement Directorate

8 months ago | [YT] | 0

News Dappa

சாதி, மத, அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ இல்லாமல் இரு கோவில்களின் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், சோனாங்குப்பம் கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நாளை (மார்ச் 11) இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரிய மனுவை நிராகரித்து கடலூர் துறைமுகம் போலீசார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதியளிக்க உத்தரவிடக் கோரி, சோனாங்குப்பத்தைச் சேர்ந்த சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல, கடலூர் மாவட்டம் அகரம் ஸ்ரீ நல்லகூந்தல் அழகிய அம்மன் கோவில் திருவிழாவிலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு கணேசமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.



இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி G.K.இளந்திரையன், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த போலீசாரின் உத்தரவுகளை ரத்து செய்து, கோவில்களில் நடக்கும் ஆடல்பாடல் நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்கவேண்டும் என உத்தரவிட்டார்.

போலீஸ் பாதுக்காப்புக்காக மனுதாரர்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும், ஆடல் பாடல் நிகழ்ச்சியில் மாணவர்களின் மனதை கெடுக்கும் விதமான ஆபாச நடனங்கள், ஆபாச மற்றும் இரட்டை அர்த்தங்களை கொண்ட வசனங்கள் இடம் பெறக்கூடாது, சாதி, மத, அரசியல் தொடர்பான நடனமோ, பாடலோ, பேனர்களோ இருக்கக்கூடாது என உத்தரவிட்டார்.

இந்த நிபந்தனைகளை மீறினால், போலீசார் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.

#temple #festival #adalpadal #MadrasHighCourt #madrasHC

8 months ago | [YT] | 0

News Dappa

வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களை வாபஸ் பெறுமாறு வழக்கறிஞர்களை இந்திய பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

1961ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்களுக்கு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வழக்கறிஞர்கள் திருத்த மசோதாவின் சில விதிகளை எதிர்த்து பிசிஐ சட்ட அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியது மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தது.

இந்த நிலையில் டெல்லி பார் கவுன்சில், டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், டெல்லியின் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள வழக்கறிஞர் சங்கங்கள் ஆகியவற்றுக்கு பிசிஐ எழுதியுள்ள கடிதத்தில், மசோதா குறித்த கருத்துகள் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகத்துடனான விவாதங்களில் முன்னேற்றம் இருப்பதாகவும், வழக்கறிஞர்களின் போராட்டங்கள் பேச்சுவார்த்தைக்கு தடையாக இருக்கலாம் என்றும் இந்திய பார் கவுன்சிலின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் சட்டத் துறைச் செயலாளர் உள்ளிட்டோர் முழுமையாக ஒத்துழைப்பதாகவும், வழக்கறிஞர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளதாகவும், பேச்சுவார்த்தை மூலம் கணிசமான தெளிவு மற்றும் நேர்மறையான உத்தரவாதங்களை அளித்துள்ளதாகவும் பிசிஐ கூறியுள்ளது.

மசோதாவைச் சட்டமாக்குவதற்கு முன் பிரச்சினைகள் உரிய முறையில் தீர்க்கப்படும் என்றும் சட்ட அமைச்சர் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள பிசிஐ, பிப்ரவரி 23ஆம் தேதி அனைத்து மாநில பார் கவுன்சில்களின் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக், எந்தமாதிரியான அடுத்தக்கட்ட நடவடிக்கையும் கூட்டாக முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

குறிப்பாக எந்தவொரு பிரச்சினையிலும் ஏதேனும் போராட்டம் அவசியம் என்று உணர்ந்தால் நாடு தழுவிய போராட்டத்திற்கு உரிய நேரத்தில் இந்திய பார் கவுன்சிலே அழைப்புவிடுக்கும் என்றும், தற்போது அரசாங்கத்தின் அணுகுமுறை மற்றும் பிசிஐ-யின் பிரதிநிதித்துவம் ஆகியவை சாதகமாக இருப்பதால், போராட்டங்கள் தேவை இல்லை என்றும் பிசிஐ அன் கடிதத்தில் கூறியுள்ளது.

9 months ago | [YT] | 0

News Dappa

நயன்தாரா டாக்குமெண்டரி - Netflix மனு தள்ளுபடி



நடிகை நயன்தாரா வாழ்க்கை குறித்த "Nayanthara: Beyond the Fairytale" என்ற ஆவணப்படத்தில், நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் தயாரித்த "நானும் ரவுடி தான்" படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியது இருவருக்கும் இடையே கருத்து மோதலை ஏற்படுத்தியத்து. அதன் தொடர்ச்சியாக படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்தியதற்காக, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு உண்டர்பார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தது.







நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ்சிவன், நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே நிராகரிக்க வேண்டும் என்று நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.





இந்த மனுக்கள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நெட்ஃபிளிக்ஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பார்த்தசாரதி, திரைப்படத்தில் இடம்பெறாத படப்பிடிப்பு காட்சிகளுக்கு உண்டர்பார் நிறுவனம் பதிப்புரிமை கோர முடியாது எனவும், படப்பிடிப்பு காட்சிகள் 2020ஆம் ஆண்டே வெளியான போதும், தாமதமாக 2024ஆம் ஆண்டு தான் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கை காப்பிரைட் சட்டத்தின் கீழ் தொடர முடியாது என்றும், இந்த காட்சிகள் கடந்த 2020ஆம் ஆண்டு முதலே பொதுத்தளத்தில் உள்ளதாகவும் மூன்றாவது நபர் தான் இந்த காட்சிகளை எடுத்ததாகவும் அவர் வாதிட்டார். இந்த ஆவணப்படம் தொடர்பாக கடந்த 2024ஆம் டிசம்பர் 11ஆம் தேதி அன்று தனுஷிடமிருந்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது என்றும், அந்த ஆவணப்படம் வெளியான ஒரு வாரம் கழித்து தான் தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த வழக்கை ஆரம்ப கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.




இதற்கு தனுஷின் உண்டர்பார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் P.S.ராமன், நானும் ரவுடிதான் படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சியில் அனைத்தும் தனக்கு சொந்தம் என்றும், நயன்தாராவின் ஆவணப்படத்தின் டிரெய்லர் வெளியிட்டபோது, 3 வினாடி காட்சிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்ததாகவும், உடனடியாக அந்த காட்சிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கூறியபோது, அதற்கு நயன்தாரா தரப்பில், வெளிப்படையாக பதிப்புரிமைக்காக நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பொதுவெளியில் கடிதம் எழுதினார் என்று வாதிட்டார். படத்தின் ஒப்பந்தம் கையெழுத்தானபோது உண்டர்பார் நிறுவன அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியில் இருந்ததாகவும், அதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் எனவும் உண்டர்பார் நிறுவனம் தரப்பில் வாதிடப்பட்டது. படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த காட்சிகள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது என்றும், நயன்தாரா ஒப்பந்தம் செய்யும்போது அவர் செய்துள்ள சிகை அலங்காரம், உடை அலங்காரத்தில் இருந்து அனைத்தும் நிறுவனத்திற்கே சொந்தமானது என ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டதாக சுட்டி காட்டினார்.




படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் உண்டர்பாருக்கு சொந்தமானது என்பதால் து காப்புரிமை சட்டத்திற்கு பொருந்தும் எனவும், படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் சென்னையில் தான் நடைபெற்றது எனவும், டரெய்லர் மற்றும் படம் சென்னையில் தான் வெளியிடப்பட்டது எனவும் வாதிட்டார்.





அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், உண்டர்பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என நெட்ஃபிளிக்ஸ் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.




மேலும், உண்டர்பார் நிறுவனத்தின் தரப்பில் தனுஷ் தாக்கல் செய்த உரிமையியல் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

10 months ago | [YT] | 0