ஆன்மீக துளிகள்

எல்லா புகழும் முருகனுக்கே !

ஆறுமுகம் அருளிடும்

அனுதினமும் ஏறுமுகம்

முருகா!

உருவாய் அருவாய்

உளதாய் இலதாய்

மருவாய் மலராய்

மணியாய் ஒளியாய்க்

கருவாய் உயிராய்க்

கதியாய் விதியாய்க்

குருவாய் வருவாய்

அருள்வாய் குகனே!


உருவமுள்ளவராகவும், உருவமில்லாதவராகவும், உள்ள பொருளாகவும், காணவியலாத பொருளாகவும், நறுமணமாகவும், அந்த நறுமணத்தை உடைய மலராகவும், இரத்தினமாகவும் அந்த இரத்தினம் வீசும் ஒளியாகவும், உயிர் இடம்பெறும் கருவாகவும், உடலாகவும், உயிராகவும் நற்கதியான புகலிடமாகவும் அந்த நற்கதியை நோக்கிச் செலுத்தும் விதியாகவும் விளங்கும் குகமூர்த்தியே! தேவரீர் குருமூர்த்தியாக எழுந்தருளிவந்து அடியேனுக்கு அருள்புரிவீராக!